என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விமான கட்டணம் உயர்வு"
- உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
- சென்னை - கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,290-ல் இருந்து ரூ.10,996-ஆக அதிகரித்துள்ளது.
சென்னை:
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வரும் நிலையில், சென்னையில் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, சேலம், தூத்துக்குடி செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது நவரத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற தொடர் விடுமுறைகள் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை - மதுரை வழக்கமான விமான கட்டணம் ரூ.4,200 என இருந்த நிலையில் தற்போது ரூ.12,026-லிருந்து ரூ.18,626-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை - தூத்துக்குடி விமான டிக்கெட் கட்டணம் ரூ.5006-ல் இருந்து ரூ.11,736 முதல் ரூ.13,626 வரை அதிகரித்துள்ளது.
சென்னை - கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,290-ல் இருந்து ரூ.10,996-ஆக அதிகரித்துள்ளது.
சென்னை - சேலம் இடையே வழக்கமான டிக்கெட் கட்டணம் ரூ.3317-ல் இருந்து 10,792-ஆக அதிகரித்துள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களை குறிவைத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விடஅதிகமாக உள்ளது.
- அனைத்து விமானங்களிலும் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது.
ஆலந்தூர்:
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. மேலும் சனி, ஞாயிறு என்று தொடர்ந்து விடுமுறை என்பதாலும், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடப்பட்டு உள்ளதாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் தென் மாவட்டங்கள் மற்றும் கேரள மாநில மக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
தென் மாவட்டங்கள் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்வதில் ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விடஅதிகமாக உள்ளது. மக்கள் விமான பயணங்களை அதிக அளவில் தேர்வு செய்வதால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.
சென்னை- திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.2,864. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ.14,065 முதல் ரூ.17,910 வரை அதிகரித்து உள்ளது.
இதேபோல் சென்னை-கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.3,018. ஆனால் இப்போது ரூ.15,661 முதல் ரூ.16,124 வரை கட்டணம் உள்ளது.
சென்னை-கோழிக்கோடு கட்டணம் ரூ.12,590 முதல் ரூ.15,552 வரையும் (வழக்கமான கட்டணம் ரூ.3,734) சென்னை-கண்ணூர்- ரூ.11,696 முதல் ரூ.15,858 வரையும் (வழக்கமான கட்டணம் ரூ.3,519) உயர்ந்து இருக்கிறது.
சென்னை-தூத்துக்குடிக்கு ரூ.10,894 முதல் ரூ.14,234 வரையும், கோவை- ரூ.10,769 முதல் ரூ.14,769, திருச்சி-ரூ.5,631 முதல் ரூ.9,555 வரையும், மதுரை-ரூ.10,192 முதல் ரூ.17,950 வரையும் உள்ளது. கட்டணம் பல மடங்கு உயர்ந்தாலும், தென் மாவட்டம் மற்றும் கேரள மாநில மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். இதனால் அனைத்து விமானங்களிலும் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது.
- கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலங்களில் இருந்த விமான கட்டணத்தை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.
- பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் ஓட்டல்களில் தங்குவதற்கு அறைகள் இல்லை. அனைத்தும் நிரம்பிவிட்டன.
சென்னை:
உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை விடுமுறை காலங்களில் விமான சுற்றுலா செல்பவர்கள் முன் கூட்டியே பயணத்தை திட்டமிடுகின்றனர்.
சுற்றுலா முகவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி. போன்ற ஏற்பாட்டாளர்கள் மூலம் புக்கிங் செய்து சுற்றுலா தலங்களுக்கு செல்கிறார்கள். தற்போது தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 12-ந்தேதி வருகிறது. அதனால் 10 முதல் 16-ந்தேதி வரை உள்நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் 2 மடங்கு உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலங்களில் இருந்த விமான கட்டணத்தை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.
குறிப்பாக பெங்களூர், ஐதராபாத், மும்பை, புனே, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா உள்ளிட்ட பல நகரங்களுக்கு விமான கட்டணம் எகிரி உள்ளது. விமானங்களில் இடங்களும் நிரம்பிவிட்டன.
மும்பை-டெல்லி ஒரு வழி விமான கட்டணம் சராசரியாக ரூ.6876. ஆனால் தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ.8788 ஆக 27.8 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே போல் புனே-டெல்லி விமான கட்டணம் கடந்த தீபாவளியை விட தற்போது 44.4 சதவீதம் அதிகரித்து உள்ளது.
சென்னை-கொல்கத்தா ஒரு வழி கட்டணம் ரூ.6815-ல் இருந்து ரூ.8725 ஆக உயர்ந்துள்ளது. இது 28 சதவீதம் உயர்வாகும். பெங்களூரு-கொல்கத்தா ஒரு வழி விமான கட்டணம் ரூ.10195 ஆக அதிகரித்து உள்ளது. இது 40 சதவீதம் உயர்வாகும்.
இது குறித்து டி.எம்.சி. லீசர் ஏஜென்சி இயக்குனர் ஷாம்நாத் கூறியதாவது:-
இந்தியாவிற்குள் உள்ள நகரங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விமான பயணம் தற்போது அதிகரித்து உள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்கு கோவா, அந்தமான், கேரளா, காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் தாய்லாந்து, அரபு நாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
ஆனால் அதற்கேற்ற அளவு இருக்கைகள் இல்லை. பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் ஓட்டல்களில் தங்குவதற்கு அறைகள் இல்லை. அனைத்தும் நிரம்பிவிட்டன.
இதே போல் கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, பாலி போன்ற நாடுகளுக்கு செல்ல இடங்கள் விமானத்தில் இல்லை. இதனால் கட்டணம் இரு மடங்கு அதிகரித்து உள்ளது.
மேலும் டிசம்பர் மாதம் 20-ந்தேதி முதல் ஜனவரி 10-ந்தேதி வரை வெளி நாட்டு விமானங்களில் பெரும் பாலான இடங்கள் நிரம்பிவிட்டன. அந்தமானுக்கு தேவை அதிகம் உள்ளது. இதனால் கட்டணம் உயர்ந்தது.
மும்பை-கோவாவுக்கு இண்டிகா விமானத்தில் ரூ.17 ஆயிரம் கட்டணம், விஸ்தாரா விமானத்தில் கட்டணம் ரூ.48 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சராசரியாக ரூ.8000 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு இப்போதே முன்பதிவு செய்ய ஆர்வமாக உள்ளனர். ஆனால் ஒரு சில நாடுகளுக்கு செல்ல விமானத்தில் இடம் இல்லை. இதே போல் தாய்லாந்துக்கு பயணம் செய்வோர் அதிகமாக இருப்பதால் இரு மடங்கு கட்டணம் அதிகரித்து உள்ளது. மும்பை, புனே நகரங்களுக்கு தேவை அதிகமாக இருப்பதால் கட்டணம் உயர்ந்து உள்ளது.
புத்தாண்டு வரை விமானங்களில் பயணிக்க கட்டணம் அதிக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
- சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானங்களில், வழக்கமான கட்டணம் ரூ. 3,675 ஆகும்.
ஆலந்தூர்:
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதேபோல் கோடை விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை உள்ளது.
ஏற்கனவே சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ், ரெயில்களில் முன்பதிவு முழுவதும் முடிந்துவிட்டன. கடைசி நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். இதனால் தற்போது வழக்கத்தை விட சென்னை விமான நிலையத்திற்கு வரும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களில் கட்டணங்கள் 3 மடங்கு அதிகரித்து உள்ளன. இதைப்போல் டெல்லி, கொல்கத்தா போன்ற வட மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களிலும் கட்டணங்கள் அதிகரித்து இருக்கிறது.
சொந்த ஊர்களில் பண்டிகையை மற்றும் கோடை விடுமுறை நாட்களை குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், கட்டண உயர்வை பொருட்படுத்தாமல் அதிக கட்டணங்கள் கொடுத்து விமானங்களில் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.
இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானங்களில், வழக்கமான கட்டணம் ரூ. 3,675 ஆகும். ஆனால் இன்று ரூ. 11 ஆயிரம் முதல் ரூ. 14 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் உள்ளது. சென்னை-மதுரை வழக்கமான விமான கட்டணம் ரூ. 3,419. ஆனால் இன்றைய தினம் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் கட்டணம் பெறப்பட்டது. சென்னை-திருச்சி இடையே வழக்கமான கட்டணம் ரூ. 2,769. ஆனால் ரூ. 9 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. கோவைக்கு வழக்கமான கட்டணம் 3,313. இன்று ரூ. 5,500-ரூ. 11 ஆயிரம் கட்டணம் இருந்தது.
சென்னையில் இருந்து டெல்லிக்கு ரூ.8500 முதல் ரூ.10 ஆயிரம் வரையும், கொல்கத்தாவுக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விமான கட்டணம் இருந்தது.
- கோடை விடுமுறையைெயாட்டி ஏப்ரல், மே மாதங்களுக்கான விமான டிக்கெட்டுகள் பாதிக்கு மேற்பட்டவை விற்று தீர்ந்து விட்டது.
- விடுமுறை, பண்டிகை விடுமுறைகளை கணக்கில் கொண்டு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி வருகிறது.
ஆலந்தூர்:
கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு சகஜநிலை திரும்பி உள்ளதால் விமான சேவைகளும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளன. சுற்றுலா, வெளிநாடு செல்வோர், சொந்த ஊருக்கு செல்வோர் என உள்நாட்டு, வெளிநாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் கோடை விடுமுறையையொட்டி வருகிற ஏப்ரல், மே மாதங்களில் வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலா இடங்களுக்கு செல்ல விமான பயணிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.
சுற்றுலா செல்வோர் மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்வோர் தங்களுடைய விமான டிக்கெட்டுகளை இப்போதே முன் பதிவு செய்து வருகின்றனர்.
இதனால் கோடை விடுமுறையைெயாட்டி ஏப்ரல், மே மாதங்களுக்கான விமான டிக்கெட்டுகள் பாதிக்கு மேற்பட்டவை விற்று தீர்ந்து விட்டது. குறிப்பாக ஒரு குழுவாக செல்வோர்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்துவிட்டனர். இதனால் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது.
வருகிற ஏப்ரல், மே மாதத்தில் சென்னையில் இருந்து கோவா செல்வதற்கு ரூ.4,500 முதல் ரூ.6 ஆயிரம் விமான கட்டணம் உயர்ந்து உள்ளது. டெல்லிக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம், மதுரைக்கு ரூ.3500 - 4500, துபாயில் இருந்து சென்னைக்கு வர ரூ.25ஆயிரம் முதல் ரூ.35ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. வழக்கமாக துபாய்- சென்னை விமான கட்டணம் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் இருக்கும். மும்பை விமான கட்டணமும் அதிகரித்து உள்ளது.
இது குறித்து டிராவல்ஸ் ஏஜென்சியை சேர்ந்தவர்கள் கூறும்போது, பொதுவாகவே ஏப்ரல் மாதத்தில் தமிழ் வருட பிறப்பின் போது விமான டிக்கெட் கட்டணங்கள் உயர்வது வழக்கம் .தற்போது இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை தமிழ் வருட பிறப்பு வருவதினால் வார விடுமுறை சேர்த்து சொந்த ஊர், சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . இதனால் வெளிநாடு மற்றும் கோவா,டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளது.
விமான பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து விமான நிறுவனங்கள் கோடை விடுமுறை, வார விடுமுறை, பண்டிகை விடுமுறைகளை கணக்கில் கொண்டு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி வருகிறது. இது பயணிகளுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரித்தாலும் அது பயணிகளை வெகுவாகவே பாதிக்கும். இருந்தாலும் கடைசி நேரத்தில் பயணத்தை மேற்கொள்வோர் விமான சேவையே நம்பி உள்ளனர். இதனால் அதிக கட்டணத்தை செலுத்தி செல்கின்றனர் என்றனர்.
- விமான பயணத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்து வருகிறது.
- வழக்கமாக டிசம்பர் மாதத்தில் கட்டணம் அதிகமாக இருக்கும்.
சென்னை:
பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 23-ந்தேதி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது. அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை விடப்பட உள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தை நகரங்களுக்கு சென்று கொண்டாட ஏற்கனவே பலர் திட்டமிட்டு முன்பதிவு செய்துள்ளனர்.
ரெயில்களில் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டதால் விமானங்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாட உள்நாடு மற்றும் வெளிநாடு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர்.
விமான பயணத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்து வருகிறது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் கட்டணம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இல்லாததால் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளன.
இதனால் பன்னாட்டு விமான கட்டணம் மட்டுமின்றி உள்நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய இடம் இல்லாத நிலை உருவாகி உள்ளது. தினசரி எல்லா விமானங்களும் முழு அளவில் நிரம்பி செல்கின்றன. ஒருசில நாடுகளுக்கு இன்னும் சுற்றுலா விசா கிடைப்பதில் சிரமம் உள்ளதாக பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவுக்கு சுற்றுலா விசாவிற்கு 2025 மார்ச் மாதத்தில் பெறக்கூடிய நிலை உள்ளது. ஜெர்மனிக்கு செல்ல சுற்றுலா விசா நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர், சண்டிகர், கோவா, கொச்சி உளளிட்ட உள்நாட்டு சுற்றுலா தலங்களுக்கு விமான கட்டணம் உயர்ந்துள்ளது. கோவாவுக்கு வழக்கமாக ரூ.4500 கட்டமாகும். ஆனால் தற்போது ரூ.13000, 14,000 ஆக உள்ளது.
இதே போல் கொச்சிக்கு ரூ.4000 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.10 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. இது குறித்து விமான டிக்கெட் ஏஜென்சி ஒருவர் கூறியதாவது:-
டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் அதிகளவில் விமான பயணம் உள்ளது. ரெயில் டிக்கெட் கிடைக்காததால் பலர் தற்போது விமான பயணத்துக்கு மாறி வருகிறார்கள். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஸ்ரீநகர், சண்டிகருக்கு அதிகளவில் இந்த விடுமுறையில் செல்கிறார்கள்.
ஜனவரி முதல் வாரம் வரை விமான கட்டணம் அதிகளவில் உயரும். மேலும் கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி விமான கட்டணமும் தற்போது அதிகரித்துள்ளது. இந்த நகரங்களுக்கு வழக்கமாக ரூ.3000 முதல் 5 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். தற்போது ரூ.8000 ஆக உயர்ந்துள்ளது. இது வருகிற நாட்களில் மேலும் உயரும்.
டெல்லிக்கு வழக்கமாக ரூ.8000 ஆக இருந்த கட்டணம் கடந்த சில நாட்களாக ரூ.17 ஆயிரமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்னையில் இருந்து டெல்லி மும்பை, பெங்களூரு, மதுரை போன்ற நகரங்களுக்கு வழக்கமாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதை தவிர்த்து ரெயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
- விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக விமான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிபொருள் விலை 16.3 சதவீதம் மீண்டும் உயர்ந்து இருக்கிறது.
ஆலந்தூர்:
கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து 2 வருடங்களுக்கு பின்பு சென்னை விமான நிலையத்தில் மீண்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக உள்நாடு மற்றும் உள் மாவட்ட பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமான டிக்கெட் கட்டணம் தற்போது உயர்ந்து உள்ளது. விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
சென்னையில் இருந்து மதுரை செல்ல விமான கட்டணம் ரூ. 5,500-ல் இருந்து 7,500 ஆக உயர்ந்து உள்ளது. அதேபோல் டெல்லிக்கு ரூ.9,500- ரூ.10,000, திருச்சிக்கு ரூ.3,500- ரூ.5000, கோவைக்கு ரூ.5,500- ரூ.6000, ஐதராபாத்துக்கு ரூ.6000-ரூ.6500, மும்பைக்கு ரூ.8600-ரூ.9000, பெங்களூருக்கு ரூ.5500-ரூ.6000 ஆக கட்டணம் அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து விமான டிக்கெட் ஏஜெண்ட்டுகள் கூறும்போது, இந்த அளவுக்கு விமான கட்டணம் உயர்வுக்கு விமானத்தின் எரிபொருள் விலை உயர்ந்தது தான் காரணம். இதனால் நடுத்தர மக்கள் விமான பயணத்தை தவிர்ப்பது அதிகமாகி வருகிறது.
நடுத்தர வர்த்தக பயணிகள் விமான பயண கட்டணத்தை பற்றி இப்போது பயப்படுகிறார்கள். அத்தியாவசியமற்ற பயணங்களை அவர்கள் குறைத்து கொள்கிறார்கள்.
அதுமட்டுமின்றி பயணத்தை மிச்சப்படுத்த பயணம் செய்வதற்கு 4 முதல் 5 வாரங்களுக்கு முன்பாகவே விமான டிக்கெட்டை புக் செய்கிறார்கள. அவசரமாக விமான பயணத்தை மேற்கொள்வோர்களுக்கு விமான கட்டணம் அதிகரித்து வருகிறது.
சென்னையில் இருந்து டெல்லி மும்பை, பெங்களூரு, மதுரை போன்ற நகரங்களுக்கு வழக்கமாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதை தவிர்த்து ரெயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக விமான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிபொருள் விலை 16.3 சதவீதம் மீண்டும் உயர்ந்து இருக்கிறது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்