search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவசேனா கட்சி"

    • நவநிர்மாண் சேனாவினர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக கோஷம்.
    • தாக்குதலுக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை.

    மராட்டியத்தில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும், அவரது உறவினரும் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவருமான ராஜ் தாக்கரேக்கும் இடையே சமீபகாலமாக வார்த்தை மோதல் அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் பீட் மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவின் பாதுகாப்பு வாகனம் மீது உத்தவ் தாக்கரே கட்சியினர் பாக்குகளை (குட்கா) வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் 8 பேரை கைது செய்தனர்.

    மராத்தா இடஒதுக்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய ராஜ் தாக்கரேயை கண்டிக்கும் வகையில் அவரது பாதுகாப்பு வாகனம் மீது பாக்குகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் தானேயில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் இரவு வருகை தந்தார். தானே கட்காரி ரங்கயாதன் பகுதியில் அவரது கார் வந்தபோது, அங்கு கூடியிருந்த நவநிர்மாண் சேனாவினர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    மேலும் உத்தவ் தாக்கரே சென்ற கார் மீது தேங்காய், வளையல், தக்காளி, மாட்டு சாணம் ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்தினர். ஆனால் அவரது கார் அதற்குள் சென்றுவிட்டது. பின்னால் வந்த அவரது பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது அவை விழுந்து சேதமடைந்தது.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் நவநிர்மாண் சேனாவினரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

    ராஜ் தாக்கரே பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உத்தவ் தாக்கரேவின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட நவநிர்மாண் சேனா கட்சியினர் தெரிவித்தனர்.

    முன்னதாக ராஜ் தாக்கரே பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை என உத்தவ் தாக்கரே கட்சி விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • திருவட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிலைகள் வைக்க போலீசார் சார்பில் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.
    • பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவட்டார் :

    கன்னியாகுமரி மாவட் டத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப டவுள்ள நிலையில் மாவட்டத்தில் இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 5000-க்கும் மேற்பட்ட சிலைகள் பொதுஇடங்கள் மற்றும் ஆலயங்களில் பூஜையில் வைக்கபட்டு வருகிற 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கன்னியா குமரி, சொத்த விளை கடற்கரை, குழித்துறை, தாமிரபரணி, திற்பரப்பு ஆறுகளில் விநாயகர் சிலைகள் பூஜைகள் செய்து ஊர்வலமாக எடுத்து கொண்டு விஜர்சனம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் மாவட்டத்தில் ஆற்றூர், திருவட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிலைகள் வைக்க போலீசார் சார்பில் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.

    இதேபோல் திருவட்டார் அருகே தோட்டவாரம் பகுதியில் சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ்பிரகாஷ் என்பவரது வீட்டில் பொதுஇடங்களில் பூஜையில் வைப்பதற்கு வழங்குதற்கான வைக்க பட்டிருந்த விநாயகர் சிலை களை நள்ளிரவில் திரு வட்டார் தாசில்தார் முருகன் தலைமையிலான வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் நள்ளி ரவில் திடீரென வீட்டிற்குள் புகுந்து பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த வருடம் விநாயகர் சிலைகள் பூஜைகளில் வைக்கபட்ட பகுதிகளிலும் தற்போது விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • உலகிலேயே முதன் முதலாக யாருக்கும் தோன்றாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியவர்.
    • அடுத்த நூற்றாண்டில் உலகிற்கு தமிழ்நாடு முன்மாதிரியாய் சமத்துவபுரங்கள் அமைத்திட வேண்டும்.

    சென்னை:

    சிவசேனா கட்சி (யுபிடி) மாநில முதன்மை செயலாளர் சுந்தரவடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகிலேயே முதன் முதலாக யாருக்கும் தோன்றாத சமத்துவ சமுதாயத்தை சொல்லிலே மட்டும் இல்லாமல், எழுத்திலே மட்டும் இல்லாமல் செயலிழை செய்து காட்டி சாதித்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நினைவை போற்றும் வகையில் கலைஞரின் நூற்றாண்டு தினத்தை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 100 சமத்துவ புரங்களை அமைத்து அதற்கு கலைஞர் சமத்துவபுரம் என்று பெயர் சூட்டி, கலைஞர் சமத்துவ படங்கள், அனைத்து புதிய தலைமுறையை புதிய பொருளாதார ஏற்றத்தை, புதிய மாற்றத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உருவாக்கி, அடுத்த நூற்றாண்டில் உலகிற்கு தமிழ்நாடு முன்மாதிரியாய் அமைந்திட 100 கலைஞர் நூற்றாண்டு சமத்துவபுரங்கள் அமைத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஐந்து ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
    • விநாயகர் கோவிலில் சிவசேனா கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

    திருப்பூர் :

    பாப்புல பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு ஐந்து ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் டவுன்ஹால் அருகே உள்ள விநாயகர் கோவிலில் சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

    • ரெயிலை மீண்டும் இயக்க வேண்டுமென பயணிகள், பக்தர்கள், வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
    • மும்பையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் பக்தர்கள் பின்னர் ராமேஸ்வரத்திற்கு ரெயிலில் பயணித்து வந்தனர்.

    திருப்பூர் :

    ேகாவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஏற்கனவே ரெயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் பின்னர் நிறுத்தப்பட்டது.அந்த ரெயிலை மீண்டும் இயக்க வேண்டுமென பயணிகள், பக்தர்கள் , வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் கோவை வந்த ரெயில்வே நிலைக்குழு தலைவர்ராதாமோகன் சிங்கை சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் திருமுருக தினேஷ் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கோவை-ராமேஸ்வரம் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அப்போது அங்கிருந்த நிலைக்குழு உறுப்பினரும், சிவசேனா கட்சியை சேர்ந்த மும்பை தெற்கு தொகுதி எம்.பி.யுமான அர்விந்த் சாவந்த் , அந்த ரெயில் வடமாநில பக்தர்களுக்கு பெரிதும் பயன் அளித்து வந்தது. மும்பையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் பக்தர்கள் பின்னர் ராமேஸ்வரத்திற்கு ரெயிலில் பயணித்து வந்தனர். எனவே அதனை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இது பக்தர்கள் , பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

    • மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மாநகராட்சியில் சுகாதாரப் பணிகள் மற்றும் மக்கள் நலப் பணிகளை முடுக்கி விட வேண்டும்

    திருப்பூர் :

    சிவசேனா கட்சி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் மாநில தலைவர் ரவிச்சந்திரன் உத்தரவுபடி மாநில பொதுச்செயலாளர் ராஜன்,மாநில முதன்மை செயலாளர் சுந்தர வடிவேலன், மாநில அமைப்பாளர் வேணுகோபால் ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைப்படி மாவட்ட தலைவர் கவின் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாநில துணை செயலாளர் ராஜா, மூத்த பொறுப்பாளர் ரங்கசாமி, வடக்கு மாவட்ட தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிவசேனா தலைவர்- மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடுவது என்றும், வரும் மழைக் காலத்திற்குள் திருப்பூர் மாநகராட்சியில் சுகாதாரப் பணிகள் மற்றும் மக்கள் நலப் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ்,மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகம், இளைஞரணி மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரன், மாவட்ட செயலாளர் ராமராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×