என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 234783"
- குமரி மாவட்ட 4 வழிச்சாலைக்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தார்
- முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை
கன்னியாகுமாரி:
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
குமரி மாவட்டத்தில் பல்வேறு சாலைத் திட்டப் பணிகள், நான் பாராளு மன்ற உறுப்பினராக இருந்த போது பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டலில் மத்திய சாலை போக்கு வரத்து மந்திரி நிதின் கட்கரி ஒப்புதல் மற்றும் உறுதுணையுடன் நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில் எனது வேண்டுகோளை ஏற்று கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை யிலான 4 வழிச்சாலையில் சிறியதும், பெரியதுமாக 48 பாலங்கள் கட்ட மத்திய நெடுஞ்சாலைப் போக்கு வரத்து துறை ரூ.1141.78 கோடி நிதியை ஒதுக்கியது.
இதனால் குமரி மாவட்ட வளர்ச்சிக்கு என்றும் தனது முழு ஒத்துழைப்பை நல்கும் நிதின் கட்கரியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தேன்.
நான் இன்று பாராளு மன்ற உறுப்பினராக இல்லாமல் இருந்தாலும் எனது முயற்சியில் கொண்டு வந்த திட்டம் தொய்வின்றி தொடர்ந்து நடந்திட அவ்வப்போது கோரிக்கைகள் வைக்கும் போது, முழு ஆதரவை தரும் நிதின் கட்கரிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரி விப்பது எனது கடமை யாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கணக்கெடுப்பு நிறைவில் தகவல்
- குமரி மாவட்டத்தில் 80 வனப்பணியாளர்கள், 20 தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி:
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டன. கடந்த 17-ந்தேதி முதல் 3 நாட்கள் இந்த பணிகள் நடந்தன.
குமரி மாவட்டத்தில் 80 வனப்பணியாளர்கள், 20 தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். வண்ணாத்திப்பாறை, களியல், கோதையார், மாறாமலை, தாடகை மலை, அசம்பு உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடந் தது.
முதல் நாள் யானைகளை நேரில் பார்த்து கணக்கெடுக்கப்பட்டது. இதில் 3 யானைகள் வனத்தில் கண்டறியப்பட்டது. 2-வது நாள் சாணம் மற்றும் லத்தி மூலம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. 3-வது நாளான நேற்று நீர்நிலை பகுதிகளில் யானைகள் வருவதை பார்த்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. பணியில் ஈடுபட்டவர்கள், பைனாகுலர் மூலம் யானைகளை பார்த்து கணக்கெடுத்தனர்.
அப்போது வனப்ப குதிக்குள் யானைகள் கூட்டம் கூட்டமாக இருப்பது தெரியவந்துள்ளது. அசம்பு வனத்தில் 7 யானை கள் கூட்டமாக நின்றதை கணக்கெடுத்துள்ளனர். இதேபோல வேறு சில பகுதிகளிலும் யானைகள் கூட்டமாக நின்றுள்ளது. கணக்கெடுப்பின் மூலம் குமரி மாவட்ட வனப்பகுதியில் 15 யானைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறுகையில், 3 நாட்கள் நடைபெற்ற யானைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. இதில் 15 யானைகள் வனத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 20 யானைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது என்றார்.
கணக்கெடுப்பில் பெறப்பட்ட தகவல்கள், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், முதுமலை புலிகள் காப்பக இயக்குநரால் ஆய்வு செய்யப்பட்டு, இறுதி எண்ணிக்கை அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
- கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி:
புதுமைப்பெண் திட்டம் குறித்து, கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமா மிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் புதுமைப் பெண் திட்டத்தினை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட் டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று பல்வேறு கல்லூரிகளில் பயிலும் 1981 மாணவியருக்கு முதற்கட்டமாக மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வரு கிறது. தற்போது, முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த 2-ம் கட்ட புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் 1187 மாணவி யர்கள் என மொத்தம் 3168 கல்லூரி மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஏழை, எளிய வர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில போதிய வசதி இல்லாத காரணத்தினாலும், சில பெற்றோர்கள் பணியின் காரணமாக வெளியூரில் வேலைபார்ப்பதினால் தங்களது குழந்தைகளை உறவினர்கள் வளர்ப் பதினாலும், பள்ளி பரு வத்திலேயே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பதினாலும் பெண் குழந்தைகளால் உயர்கல்வி பயில முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை உணர்ந்த முதல்-அமைச்சர் புதுமைப்பெண் திட்டத்தினால் பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன் மூலம் குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தை களின் இடை கல்விநிற்றல் விகிதத்தைக் குறைப்பது மட்டுமல்லாது பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவிக்கவும், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்ப டுத்தி அனைத்துத் துறை களிலும் மகளிரை முன் உதாரணமாக பங்கேற்கச் செய்யவும், உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண் களுக்கான தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்திடவும் இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கவும் வழிவகை செய்கிறது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிக ரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவி களுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற் கல்வி ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.
மேலும், மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
இத்திட்டத்தில் பயன் பெறுவது குறித்து தங்களுக்குத் தேவையான தெளிவுரைகள், கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப் பேசி எண்.14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம்.
இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும், இளங்கலை, தொழிற்கல்வி, மருத்துவக் கல்வியில் 2-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப் பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப் பங்களை ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 6-ம் வகுப்பு முதல்
12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற ஆவண நகல்களைக் கொண்டு மாணவியர்கள் தாங்களாகவே தங்களது கைப்பேசி அல்லது கணினி வாயிலாகவும் இணையதளம் முகவரியை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதனை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப் பட்டு சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டத்தி னால் அனைத்து மாணவி யர்களும் உயர்கல்வி பயின்று, வேலைவாய்ப்பு பெற்று, பொருளாதாரத்தில் சுதந்திரமாக, சொந்தகாலில் நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாற்று வேலை தேடி கேரளாவுக்கு பயணம்
- குளிர்காலம் (டிசம்பர், ஜனவரி) முடிந்தவுடன் ரப்பர் மரத்தின் இலைகள் காய்ந்து உதிரத் தொடங்கிவிடும்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தின் பிரதான தொழில்களில் ரப்பர் பால் வெட்டும் தொழிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
விளவங்கோடு, திருவட்டார், பத்மனாபபுரம் தாலுகாவிலும் அதை சுற்றியுள்ள மலையோர கிராமங்களிலும் ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளது. இப்பகுதி தொழிலாளிகளுக்கு ரப்பர் பால் வெட்டும் தொழிலே பிரதானமானதாகும்.
மேலும் இந்த பகுதியில் அரசு ரப்பர் கழகம் மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களும் ஏராளமாக உள்ளன. இத்தோட்டங்களில் ஏராளமான ஆண்களும், பெண்களும் என ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கின்றனர்.
ரப்பர் தொழிலை முன்வைத்து இப்பகுதிகளில் தனியார் ரப்பர் பால் சேகரிக்கும் நிலையங்கள் அமைந்துள்ளது.
இந்த ரப்பர் பால் சேகரிக்கும் நிலையங்களில் நூற்றுக்கணக்கானோர் வேலை செய்கின்றனர்.தனியார் தோட்டங்களில் வெட்டி எடுக்கும் ரப்பர் பால் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதேபோன்று ரப்பர் பால் எடுத்து உறைய வைத்து ரப்பர் சீட் தயாரித்து அவற்றை உலர்த்தி சிறு, குறு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
ரப்பர் ஷீட் வாங்கவும் இப்பகுதிகளில் ஏராளமான கடைகள் உள்ளது. இப்படி ரப்பர் தோட்டங்களை நம்பி ஏராளமான துணை தொழில்களும், அதில் ஈடுபடும் தொழிலாளிகளும் உள்ளனர்.
தற்போது குளிர்காலம் (டிசம்பர், ஜனவரி) முடிந்தவுடன் ரப்பர் மரத்தின் இலைகள் காய்ந்து உதிரத் தொடங்கிவிடும். அதன் பின்னர் மரத்தில் துளிர் விட துவங்கியதும் பால் வெட்டும் தொழில் நிறுத்தப்படும். அரசு ரப்பர் கழக தோட்டங்களில் 15 நாள் விடுமுறைஅளித்து மீண்டும் பணி தொடங்கப்படும். ஆனால் தனியார் தோட்டங்களில் துளிர் இலையாக மாறி அடுத்து வரும் மழைக்காக காத்திருந்து மழை பெய்து முடிந்த பிறகு பால் வடிக்கும் தொழில் தொடங்கப்படும். அதுவரை ரப்பர் மரங்களுக்கு சுமார் 2 மாத காலம் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதனால் பால் வெட்டும் தொழிலை நம்பி வாழ்கின்ற அனைத்து மக்களும், தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்ற னர். அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த 2 மாதங்களும் தனியார் தோட்டத்தில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். உள்ளூரில் வேலை கிடைக்காதவர்கள் வேறு வேலைக்காக கேரளா மாநிலத்திற்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தீவிர கண்காணிப்பு
- இந்து அமைப்பினர் போராட்டம் எதிரொலி
நாகர்கோவில்:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திரு விழாவின்போது ஹைந்துவ சங்கம் சார்பில் நடைபெற இருந்த சமய மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்து அறநிலைய துறை சார்பில் மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஹைந்துவ சங்கம் சார்பில் நடைபெற இருந்த மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டதற்கு இந்து முன்னணி, பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. திட்டமிட்டபடி ஹைந்துவ சங்கம் சார்பில் சமய மாநாடு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சமய மாநாடு நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் போராட்டங்களும் நடந்தது. இந்த நிலையில் இன்று மண்டைக்காடு பகுதியில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
போராட்டத்திற்கு போலீ சார் அனுமதி மறுத்தி ருந்தனர். தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதை யடுத்து போராட்டத்திற்கு வருபவர்களை தடுக் கும் விதத்தில் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மண்டைக்காட்டில் நடை பெறும் போராட்டத்திற்கு கலந்து கொள்ள வருப வர்களை அந்தந்த பகுதி களில் கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. இதையடுத்து நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்டை காட்டிற்கு செல்லும் பாதை பகுதிகளில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் டெரிக் சந்திப்பு பகுதியில் இன்று காலை முதலே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் பறக்கை விலக்கு, புத்தளம், மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்து அமைப்பினர் போராட்டத் திற்கு அனுமதி கிடைக்கா ததால் வேறு தேதியில் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.
- 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை, 46 மின் வினியோக பிரிவு அலுவலகங்களில் நடைபெறும்
- இணைய தளம் வழியாக விண்ணப்பித்து பின்னர் மின் வாரிய சிறப்பு முகாமுக்கு வர வேண்டும்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் எம். ஆர். பத்மகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின் இணைப்பின் உரிமையாளர் தங்களது மின் இணைப்பினை தங்களது பெயரில் மாற்றம் செய்யாமல் அனுபவித்து வரும் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளை பெயர் மாற்றம் செய்து கொள்ள ஏதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 46 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம் வரும் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பெயர் மாற்றம் செய்து கொள்ள தேவைப்படும் நுகர்வோர்கள் உரிய ஆவணங்களுடன் இணைய தளம் வழியாக விண்ணப்பித்து பின்னர், ஆவண நகல்களுடன் மின் வாரிய சிறப்பு முகாமுக்கு வரும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெயர் மாற்றம் செய்ய வேண்டிய மின் நுகர்வோர் கள் கவனிக்க வேண்டிய விதிமுறைகள்:-
கிரையம், பாகப்பிரிவினை, சமரசம், நன்கொடை மூலம் உரிமை கிடைக்க பெற்ற மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய தற்போதைய வரி ரசீது (உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி) உறுதிமொழி படிவம் 4, படிவம் 2, பெயர் மாற்றம் பெற பழைய உரிமையாளரின் ஒப்புதல் (படிவம்2) வழங்கப்படாத பட்சத்தில் வைப்பு தொகை பெற்று பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
வாரிசுதாரர்களால் பயன் பெற்று வரும் மின் இணைப்புகளுக்கு வாரிசுதாரரின் பெயரில் உள்ள தற்போதைய வரி ரசீது, வாரிசு சான்றிதழ், மற்ற வாரிசுதாரர்களிடம் இருந்து தடையில்லாத சான்றிதழ் அல்லது படிவம் 3 வழங்க வேண்டும்.
மின் இணைப்பின் பெயரில் உள்ளவரின் வாரிசுகள் அனைவரின் பெயரிலும் சேர்த்து பெயர் மாற்றம் செய்திட வாரிசு சான்றுடன் இணைய தளம் வழி விண்ணப்பம் பதிவு செய்து, அதன் நகல்களை அலுவலகத்தில் ஒப்படைக்கவும். எவ்வித வகைகளில் தாங்கள் பெயர் மாற்றம் செய்ய வேண்டி உள்ளது என் பதை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையிலான ஆவணங்களுடன் இணைய தளம் மூலம் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் பதிவு செய்து, அதற்குண்டான கட்டணம் செலுத்தியவுடன் 46 மின் வினியோக பிரிவு அலுவலகங்களில் செயல்படும் சிறப்பு முகா மில் ஏற்கனவே பதிவேற்றம் செய்த ஆவணங்களின் நகல்கள் ஒப்படைத்த ஒரு சில மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
பெயர் மாற்றம் செய்ய வேண்டியவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை, 46 மின் வினியோக பிரிவு அலுவலகங்களில் நடை பெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளவும். தாங்கள் பதிவு செய்யும் ஆவணங்களின் அடிப்ப டையில் பெயர் மாற்றம் செய்வதால், பதிவு செய்த ஆவணங்களில் முறைகேடுகள் ஏதும் பின்னர் கண்டறியப்பட்டால் மறு அறிவிப்பின்றி பெயர் மாற்றம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- மருந்து நிறுவனம் மற்றும் செங்கல் சூளை அதிபர் வீடு - மண்டபம் உள்பட 20 இடங்களில் நடந்தது
- வருமான வரி கணக்குகளை சரியாக காட்டவில்லை என்று வருமான வரி துறைக்கு புகார்
கன்னியாகுமரி:
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்கள் சொத்துக் களை வாங்கியதில் முறை கேடு செய்திருப்பதாகவும் வருமான வரி கணக்குகளை சரியாக காட்டவில்லை என்றும் வருமான வரி துறைக்கு புகார்கள் வந்துள் ளன.
அதன் அடிப்படையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள ஓட்டல் அதிபர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், செங்கல் சூளைகள் போன்றவற்றில் வருமான வரித்துறையினர் இன்று ஒரே கட்டமாக சோதனை நடத்தினர்.குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சிதறால் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜேந்திரன். இவருக்கு ஏராளமான கல் குவாரிகள் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளன.
மேலும் மார்த்தா ண்டத்தில் ஒரு திருமண மண்டபம், லாரி சர்வீஸ் போன்றவையும் உள்ளது. இது தவிர தேமானூர் பகுதியில் செங்கல் சூளையும் நடத்தி வருகிறார்.
தொழில் அதிபர் ராே ஜந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் இன்று வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதுபோல களியக்கா விளை பகுதியில் உள்ள காண்டிராக்டர் ஒருவரின் வீடு மற்றும் அலுவல கத்திலும் இன்று வருமான வரித்துறை யினர் சோதனை மேற்கொண்டனர்.
இதுபோல நாகர் கோவில் பகுதியில் உள்ள மருந்து நிறுவனத்திலும் இன்று சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள் என 5 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது தவிர மாவட்டத்தில் சுமார் 20 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- சுற்றுலாத்துறை மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள்
- சுற்றுலா வரும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நாகர்கோவில்:
மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை சந்தித்த விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை மனு அளித்தார்.
அதில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை அழகு நிரம்பி வழியும் மாவட்டம். கடற்கரை, அருவிகள், அணைக்கட்டு என சுற்றுலாப் பயணி களை கவர்ந்திழுக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இந்த மாவட்டம், உல கத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற சாத்தி யக்கூறு உள்ளன. ஆனால் போதிய அளவு உட்கட்ட மைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது குறைவாகவே காணப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள சுற் றுலா தலங்களுக்கு எந்த தடையும் இன்றி சென்று வர சாலை வசதிகள் மிக முக்கியமாக தேவைப்படு கிறது. மேலும் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையங் கள், தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதும் முக்கிய மாகும். தனியார் நிறுவனங் களுடன் இணைந்து கடல் மற்றும் மலை சார்ந்த பிர தேசங்களில் சாகச விளை யாட்டுக்கள் ஏற்படுத்தி சுற் றுலா பயணிகளை கவர இயலும். மேலும் ரெயில் மற்றும் விமான சேவையும் அவசியம் ஆகும். பிற மாநிலங்க ளில் இருந்து கன்னியாகுமரி வந்து செல்வதற்கான ரெயில் வசதிகள் குறைவாகவே உள்ளதால் சுற்றுலா வரும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அது போன்று கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் அமைந்தால் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு உதவும்.
இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு வகுத்துள்ள பல்வேறு திட்டங்களின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தை இணைத்து சுற்றுலா உட் கட்டமைப்பு வசதிகள் பெருக்குவதற்கு தேவையானவற்றை சுற் றுலாத்துறை செய்து தர நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், விமான நிலையம் அமைக்கவும் அந்தந்த துறைகளுக்கு சுற்றுலா துறையின் மூல மாக பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- சாலைகளை சீரமைக்க கோரிக்கை
- மகா சிவராத்திரி நாளில் 12 சிவாலயங்களில் நடையும், ஓட்டமுமாக சென்று சிவனை வழிபடுவதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் சிவபெருமானின் அருள் வேண்டி இங்குள்ள 12 சிவாலயங்களில் நடையும், ஓட்டமுமாக சென்று சிவனை வழிபடுவதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.
இதற்காக பக்தர்கள் விரதம் இருந்து முதலில் முன்சிறை பகுதியில் உள்ள திருமலை மஹாதேவர் கோவிலில் குளித்து புத்தாடை கள் அணிந்து விபூதி நெற்றியில் பூசி சாமியை வணங்கி சிவாலய ஓட்டத்தை தொடங்குவார்கள். அதன் பிறகு திக்குறிச்சி மஹாதேவர் கோவிலில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான் குடிமஹாதேவர் கோவில், திருப்பன்னிப்பாகம் மஹாதேவர் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு மஹாதேவர் கோவில், திருவிடைக்கோடு மஹாதேவர் கோவில், திருவிதாங்கோடு மஹாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கரநாராயணர் திருக்கோ வில் ஆகிய 12 சிவாலயங்களில் நடந்தும், ஓட்டமாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் கையில் விசிறியுடன் கோவிந்தா... கோபாலா... என்று கோஷம் போட்டு செல்வார்கள்.
இந்த வருடம் சிவாலய ஓட்டம் 18-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி காலையில் பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை முடிப்பார்கள். 17-ந் தேதி பிற்பகலில் விரதத்துடன் நடந்தும் ஓட்டமுமாக பக்தர்கள் செல்வார்கள். பக்தர்கள் செல்லும் வழியில் பக்தர்களுக்கு டீ, காப்பி, சுக்கு காப்பி, சுண்டல், கஞ்சி சாப்பாடு போன்றவைகள் ஆங்காங்கே பக்தர்களுக்கு வைத்திருப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் குறைந்த அளவில் பக்தர்கள் வந்தனர். ஆனால் தற்போது கொரோனா கட்டுபாடுகள் முழுவதுமாக விலக்கப்பட்டதால் இந்த ஆண்டு பக்தர்கள் நடந்தும் ஓட்டமாகவும், கார், பைக், ஆட்டோ, பஸ்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
12 சிவாலயங்களுக்கும் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் சாலைகளை சரி செய்து கொடுக்க வேண்டும். முக்கியமாக சில கோவில்களுக்கு செல்லும் சாலைகள் பழுதடைந்து மிக மோசமான சாலைகளாக இருக்கிறது. அவற்றை போர்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சீர்செய்ய வேண்டும் மற்றும் தடையற்ற மின்சாரம், தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவற்றை சரிசெய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
- இன்று பொறுப்பு ஏற்பு
- கலெக்டர் ஸ்ரீதர் பேட்டி
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டராக இருந்த அரவிந்த் மருத்துவ சேவை கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குமரி மாவட்ட புதிய கலெக்டராக சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குனராக இருந்த பி.என். ஸ்ரீதர் நிய மிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் இன்று 6-ந்தேதி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். பொறுப்புகளை கலெக்டர் அரவிந்த் அவரிடம் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதி காரி சிவப்பிரியா, ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், பத்மநாபபுரம் சப் கலெக் டர் கவுசிக், கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் வீராசாமி மற்றும் அதிகாரிகள் புதிய கலெக் டர் பி.என். ஸ்ரீதருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கலெக்டர் பி.என். ஸ்ரீதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த திட்டங் களை செயல்படுத்த தனி கவனம் செலுத்தி நடவ டிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை அளிக் கப்படும். அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களின் பிரச்சினைகள் குறைகள் தீர்க்க நடவடிக்கை மேற் கொள்வேன். குமரி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக் கப்படும். நகரப்புறம் அதிகம் உள்ள மாவட்டமாகும்.
சுற்றுலாத்துறை சுற்றுச்சூழல் மீனவர் பிரச்சனை வனத் துறை உள்ளிட்ட திட்டங்க ளுக்கு முன்னுரிமை அளிக் கப்படும். சென்னை-கன்னியாகுமரி தொழில் வரி சாலை திட்டத்தை பொருத்தமட்டில் தற்பொ ழுது தென்காசி நெல்லை மாவட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் அதற் கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிதாக பொறுப் பேற்றுக் கொண்ட கலெக் டர் பி.என். ஸ்ரீதர் குமரி மாவட் டத்தின் 52-வது கலெக்டர் ஆவார். கலெக்டர் பி.என் ஸ்ரீதருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும்.
ஏற்கனவே திண்டி வனத்தில் சப்-கலெக்டராக 2 ஆண்டுகள் பணிபுரிந்த பி.என்.ஸ்ரீதர் தொடர்ந்து பெருநகர சென்னை மாநக ராட்சி மத்திய வட்டார இணை இயக்குனராக 2 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- நாகர்கோவிலில் அதிகபட்சமாக 14 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
நாகர்கோவில்:
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் பரவ லாக மழை பெய்தது. நாகர்கோவிலில் அதிகபட்ச மாக 14 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளின் மழை அளவு வருமாறு- கன்னிமார்- 9.4, இரணியல் -8.4,பாலமோர் -7.2,பூதப்பாண்டி- 7.2, மாம்பழத் துறையாறு - 6.8,குருந்தன்கோடு-6.4, முள்ளங்கினாவிளை- 6.4,ஆனைகிடங்கு -5.2, குளச்சல் - 3.6, மைலாடி -3.6, கோழிப்போர்விளை -3.4,அடையாமடை -3, கொட்டாரம் - 1.8, பேச்சிப்பாறை - 1, பெருஞ்சாணி - 1
இந்த மழையின் காரணமாக அணை களுக்கு நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40.95 அடியாக உள்ள நிலையில் நீர் வரத்து விநாடிக்கு 472 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 531 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 60.50 அடியாக உள்ள நிலையில் நீர் வரத்து விநாடிக்கு 153 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 375 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- மத்திய மந்திரியிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
- ஒப்பந்தத்தை இறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும்
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த், டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து ஒரு மனு அளித்தார்.
அதில், காரோடு முதல் கன்னியாகுமரி வரை 4 வழிச்சாலை பணிகள் நடை பெற்று வந்த நிலையில், கல், மண் தட்டுப்பாடு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. பணி முடங்கிய காரணத் தால் ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டது.
பின்னர் மாநில அரசு அண்டை மாவட்டத்நிதின் கட்கரியை சந்தித்து ஒரு மனு அளித்தில் இருந்து மண் எடுப்பதற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து மீண்டும் இந்த பணிக்கான ஒப்பந்தத்திற்கு மறு டெண்டர் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரம் விடப்பட்டது.
இந்த டெண்டர் வருகிற 19-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்நாள் வரை டெண்டர் முடிவு செய்யப் படாமல் உள்ளது. பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கும் 4 வழிச் சாலை பணிகள் மீண்டும் தொடங்க தாமதமானால் இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது.
எனவே இதை கருத்தில் கொண்டு தாங்கள் அலுவலகம் வாயிலாக நெடுஞ்சாலை துறையிடம் உடனடியாக 4 வழி சாலை பணிக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்