என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பணியாளா்கள்"
- தமிழக ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில், நாமக்கல் சி.ஐ.டி.யு. மாவட்டக் குழு அலுவலகத்தில் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
- 3 ஆண்டுகள் பணி முடித்தவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
நாமக்கல்:
தமிழக ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில், நாமக்கல் சி.ஐ.டி.யு. மாவட்டக் குழு அலுவலகத்தில் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளா் வேலுசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இக்கூட்டத்தில், தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்தவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும், 31 சதவீத அகவிலைப்படி உயா்வை நடப்பு ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்கவும், ஊதிய உயா்வு மற்றும் அகவிலைப் படியையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 24-ந்தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
- அரசு பாதுகாப்பிற்கான அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தில் உள்ள ஏா்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.
சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையில், வருகிற ஜூலை 2-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
எனவே வருகிற 24-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சாா்நிலைக் கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்