search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்பத்தினர்"

    • 14-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
    • மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து பெயரினை பதிவு செய்து பயனடையலாம்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முன்னாள் படை வீரர்கள்மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    கைப்பேசி பழுது நீக்கு தல், கார் மெக்கானிக், குளிர் சாதனப்பெட்டி பராமரிப்பு, எலக்ட்ரீசியன், பிளம்பிங், ஓட்டுநர் பயிற்சி, மின்சாரத்தினால் இயங்கும் சீருந்துகள் பராமரித்தல் மற்றும் அதற்கான மின்சார பேட்டரி பராமரித்தல், பழுது நீக்குதல், மின்சாரத்தி னால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பழுது பார்த்தல், பராமரித்தல் மற்றும் பேட்டரி சார்ஜ் செய்வதற்கான நிலையம் அமைத்து பராமரித்தல், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, கணினி தட்டச்சு பயிற்சி மற்றும் வன்பொருள் பழுதுபார்த்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

    இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் வருகிற 14- ந் தேதிக்குள் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்கள் பெய ரினை பதிவு செய்து பயன டையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • சோழவந்தான் காவல் துறையைச் சேர்்ந்த குடும்பத்தினர் தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. கடந்த 6-ந் தேதி வைகாசி பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    16-ம் நாள் திருவிழாவான இன்று தேரோட்டம் நடந்தது. அதிகாலையில் அம்மன் கேடயத்தில் அலங்காரமாகி கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வந்து சேர்ந்தது. அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார். அமைச்சர் மூர்த்தி வடம் பிடித்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத், டி.எஸ்.பி. பாலசுந்தரம், தாசில்தார் நவநீதகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவபாலன், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், ஜெனகை டிரஸ்ட் தலைவர் சுப்ரமணியன் செட்டியார், பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சனன், கோவில் செயல்அலுவலர் இளமதி மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சோழவந்தான் பாட்டியமந்தார், கிராம காவல்காரர்கள் தேரை வடம்பிடித்து இழுப்பதற்கு வெள்ளைக்கொடி வீசினர். கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி, வழியாக தேர் வலம் வந்து புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது. ஆசாரியர்கள் தேர் சக்கரங்களை முறையாக வருவதற்கு ஒழுங்குபடுத்தினர். வழிநெடுக பக்தர்கள் அம்மனை வரவேற்று பூஜை செய்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் வசந்தகோகிலம் சரவணன், சுகாதார பணி ஆய்வாளர் முருகானந்தம், துணைத் தலைவர் லதா கண்ணன், கவுன்சிலர்கள் மருதுபாண்டியர், சத்யபிரகாஷ், குருசாமி, ஈஸ்வரி, ஸ்டாலின் முத்துச்செல்வி, சதீஷ்குமார், செந்தில்வேல், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்

    தேர்த்திருவிழாவில் பக்தர்கள் மாம்பழம், வாழைப்பழம், நாணயங்களை சூறை விட்டனர். சிறுவர், சிறுமிகள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வலம் வந்தனர். நீர், மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணி, இளங்கோ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    தேர் திருவிழாவை முன்னிட்டு வட்ட பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த நண்பர்கள் சார்பில் 9-வது ஆண்டாக அன்னதானம் நடந்தது. இதில் கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். சோழவந்தான் அய்யப்பன் கோவிலில் இன்று இரவு காவல்துறை பேண்டு வாத்திய கச்சேரி நடைபெறுகிறது. சோழவந்தான் காவல் துறையைச் சேர்்ந்த குடும்பத்தினர் தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×