என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அதிக மதிப்பெண்"
- அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
- மாணவ-மாணவிகளுக்கு கேடயம் பரிசு வழங்கப்பட்டது.
மானாமதுரை
மானாமதுரையில் திருவள்ளுவர் இளைஞர் சுய உதவிக்குழுவின் 21-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தலைவர் லட்சுமணன் வரவேற்றார். திருவள்ளுவர் இளைஞர் சுய உதவிக்குழுத்தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். செர்டு சமூக சேவை நிறுவனத்தின் இயக்குநர் பாண்டி மாணவ-மாணவிகளுக்கு கேடயம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்.
இதில் சுய உதவிக்குழு செயலர் நாகலிங்கம், ஓய்வுபெற்ற முது நிலை கணக்கு அலுவலர் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர் நதியா செல்வம், சிவகங்கை தொல் நடைக்குழு ஆசிரியர் பயிற்றுநர் காளிராஜா, ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். சுய உதவிக்குழுவின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். முன்னதாக உதவி செயலர் அடைக்கலம் வரவேற்றார்.
- அதிக மதிப்பெண் பெற்ற கிராமபுற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
- இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை அருகே குன்னங்கோட்டை, கீழப்பங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் குன்னங்கோட்டை கள்ளர் பேரவை அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
முதல் மதிப்பெண் எடுத்த காளீஸ்வரன் என்ற மாணவனுக்கும், 2-வது மதிப்பெண் பெற்ற திருவிளங்கை கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்ற மாணவனுக்கும், மாலைகண்டனைச் சேர்ந்த தமிழரசனுக்கும், தேவபட்டு சசிகலா என்ற மாணவிக்கும் ஊக்கத்தொகை வழங்கபட்டது.
இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
- பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அகமது பசீர் சேட் ஆலிம் கிராஅத் ஓதினார்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது இக்பால் தலைமையில், சென்னை கிளை ஜமாத் தலைவர் நஜீம் அகம்மது முன்னிலையில் நடந்தது.
பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அகமது பசீர் சேட் ஆலிம் கிராஅத் ஓதினார்.
பள்ளியின் தாளாளரும், பேரூராட்சி சேர்மனுமான ஷாஜஹான் வரவேற்றார். ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதில் தலைமை ஆசிரியர் முகமது சுல்தான் அலாவுதீன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காதர் ஷா, லியாகத் அலி, காதர்முகைதீன், வரிசைமுகம்மது, மாவட்ட கல்வி அலுவலர் ரவி முன்னாள் ஜமாத் தலைவர் இக்பால், பாசில்அமீன், கல்வி குழு தலைவர்காதர் முகைதீன், முகமது மீரா, சீனிமுகம் மது உள்பட பலர் பங்கேற்றனர்.
- அரசு மற்றும் முஸ்லிம் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடந்தது.
- விழாவில் பொதுமக்களும், ஆசிரியர்களும், மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டனர்.
சுரண்டை:
வீராணம் அரசு மற்றும் முஸ்லிம் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடந்தது.
ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் ஷேக் முகம்மது ஏற்பாட்டில் நடந்த விழாவிற்கு, மாவட்ட தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாபன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், வீராணம் பஞ்சாயத்து தலைவர் வீரபாண்டியன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இருதாலய மருதப்ப பாண்டியன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பழனி நாடார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, ஒன்றிய குழு தலைவர் திவ்யா, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜர்னாஸ் ஜான், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மைதீன் நிஷா, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பாலசுந்தரம், ஆலங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் முஸ்தபா, கிளைக் கழகச் செயலாளர் பாலசுப்ரமணியன், வீரபுத்திரன், அப்துல் காதர், முஸ்தபா கமால், பாலமுருகன், சதாம் உசேன், அன்சார் அலி உட்பட ஏராளமான பொதுமக்களும், ஆசிரியர்களும், மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டனர்.
- பிளஸ்-2 விலும் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்ப்பேன் என்றார் வர்ஷா.
- பள்ளி சென்று வந்ததும் எனது பெற்றோருக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்றார்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டினம் வேதம்புதூரை சேர்ந்தவர் சிவன்பாண்டி. இவரது மனைவி சசிகலா.
இவர்களுக்கு வர்ஷா(வயது 15) என்ற மகள் உள்பட 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சிவன்பாண்டி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சசிகலா பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்.
இவர்களது மூத்த மகள் வர்ஷா, அதே பகுதியில் பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவி வர்ஷா 500-க்கு 474 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
சிவன்பாண்டி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் அந்த பகுதியில் உள்ள ஒருவரிடம் நிலத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வருகிறார். மாணவி வர்ஷா பள்ளிக்கு சென்றுவிட்டு வந்த உடனே வயலுக்கு சென்றுவிடுவார்.
இதுகுறித்து மாணவி வர்ஷா கூறுகையில், எனது அப்பா வேலைக்கு போய்விட்டு இரவு தான் வருவார். இதனால் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருக்கும் தக்காளி, பயிறு வகைகள், நெற்பயிர்களுக்கு நான் தான் தண்ணீர் பாய்ச்சுவேன்.
எங்களுக்கு சொந்தமாக மாடுகள் உள்ளன. அவைகளுக்கு புல் அறுத்து மொபட்டில் வீட்டுக்கு கொண்டு செல்வேன். சில நேரங்களில் மாடுகளில் பால் கறக்கவும் செய்வேன். பள்ளி சென்று வந்ததும் எனது பெற்றோருக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்.
தண்ணீர் பாய்ச்சி கொண்டே தேர்வுக்கு படித்தேன். விடா முயற்சியுடன் படித்ததால் இந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளேன். இதேபோல் பிளஸ்-2 விலும் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்ப்பேன்.
என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்த எனது பெற்றோரை நான் நன்றாக பார்த்து கொள்வேன். கலெக்டராக வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்வதே என் லட்சியம் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்