என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சர்வதேச"
- தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 12 மாணவ-மாணவிகள் பங்கு பெற்று, சாம்பியன் ஆப் சாம்பியன், செஞ்சுரியன் மற்றும் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
- மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பாராட்டி பரிசு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
தஞ்சாவூர்:
மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரைனிபாப்ஸ் சர்வதேச அபாக்கஸ் பயிற்சி நிறுவனம் நடத்திய சர்வதேச அபாக்காஸ் ஒலிம்பியாட் போட்டியில் 15 உலக நாடுகளில் உள்ள 3 முதல் 14 வயது வரை உள்ள மாணவ-மாணவிகள் 1400 பேர் கலந்து கொண்டனர்.
அதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 12 மாணவ-மாணவிகள் பங்கு பெற்று, சாம்பியன் ஆப் சாம்பியன், செஞ்சுரியன் மற்றும் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த நிலையில் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தஞ்சை மாணவ-மாணவிகளை தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பாராட்டி பரிசு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார் .
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பிரைனிபாப்ஸ் நிறுவனத்தின் வர்த்தகப்பிரிவு தலைவர் ஜோதிபாசு மற்றும் தஞ்சை கரந்தை கிளை நிறுவனர் யோகேஸ்வரி செய்திருந்தனர்.
- சத்தியமங்கலத்தில் வனத்துறையினர் சார்பில் புலிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.
- இந்த பேரணியை பவானிசாகர் வனச்சரக சிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சத்தியமங்கலம்:
சர்வதேச புலிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து சத்தியமங்கலத்தில் வனத்துறையினர் சார்பில் புலிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த பேரணியை பவானிசாகர் வனச்சரக சிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் கலந்து கொண்ட மாணவர்கள் புலிகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், முகத்தில் புலி மாஸ்க் அணிந்தும் பேரணியாக சென்றனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வடக்குப்பேட்டை, ஆற்றுப்பாலம், பஸ்நிலையம் வாய்க்கால் மேடு வழியாக மாவட்ட வன அலுவலகத்தை அடைந்தது.
இந்த பேரணியில் சத்தியமங்கலம் வன அலுவலர் தீபக்குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
- தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.
அந்தியூர்:
நாடு முழுவதும் யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பெங்களூரில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு யோகா செய்கிறார். இதையடுத்து பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.
நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் ராஜேஷ்குமார் ஒருங்கி ணைந்து வழி நடத்தினார். இதில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்