என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரயிலில்"
- ஆந்திராவிலிருந்து நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
- ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி, வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்படுகிறது. பின்னர் கிட்டங்கிக்கு அனுப்பி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆந்திராவிலிருந்து 58 வேகன்களில் 3600 டன் ரேஷன் அரிசி, சரக்கு ரயில் மூலமாக இன்று நாகர்கோவில் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ரேஷன் அரிசியை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- சேலம் அருகே லாரியில் கடத்தப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம்:
ஆந்திராவிலிருந்து கஞ்சா மூட்டைகளை சிலர் சேலம் வழியே செல்லும் ெரயில்களில் கடத்தி சென்று வந்தனர். இதனையடுத்து சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய போலீசார் கண்காணித்து கஞ்சா கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர்.
இதனால் கஞ்சா கடத்தல் பேர்வழிகள் ெரயில்களில் கஞ்சா கடத்தி வருவதை நிறுத்திவிட்டு லாரி மற்றும் வேன்களில் கஞ்சா கடத்த தொடங்கி உள்ளனர்.
இதனை அறிந்த சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிகாலை சேலம் அருகே உள்ள குப்பனூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது லாரி ஒன்று வேகமாக வந்தது.
இந்த லாரியை போலீசார் நிறுத்தினர்.ஆனால் லாரி நிற்காமல் வேகமாக சென்றது .இதை துரத்தி போலீசார் மடக்கி நிறுத்தினர் .
பின்னர் லாரியில் ஏறி சோதனை செய்தனர். அப்போது இரும்பு பொருட்கள் மற்றும் மூட்டை–களுக்கு இடையில் 200 கிலோ கஞ்சா பண்டல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகுமு. கடத்தலுக்கு பயன்படுத்திய ரூ.10 லட்சம் மதிப்பிலான லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சேலத்துக்கு கடத்தி வந்த திருச்சியை சேர்ந்த முருகன் மற்றும் கருமந்துறையைச் சேர்ந்த மகேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ெரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அசோகன், சத்தியமூர்த்தி, முத்துவேல், சதீஷ்குமார், அருண்குமார் ஆகியோர் இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர்.
அப்போது பொது பெட்டி 70வது நம்பரில் இருந்த ஒடிசா மாநிலம் பிஸ்லாபூர் பகுதியைச் சேர்ந்த பகுதி பகுபதி பசன் மகட் (வயது 25) என்பவர் பேக்கை சோதனை செய்த போது 2 கிலோ கஞ்சா இருந்தது.
அவர் அருகில் அதே பகுதியை சேர்ந்த கார்டிக் பகி (20) என்பவர் பேக்கை சோதனை செய்த போது 4 கிலோ இருந்தது. மொத்தம் 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்