search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி செய்திகள்"

    • போலியான செய்திகளை பரப்பி பிரசாரம் செய்வோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
    • கொரோனா தொற்று தொடர்பான போலிச் செய்திகள் பரவுவதை சரிபார்க்க பிஐபியின் பிரத்யேக பிரிவு உருவாக்கம்

    புதுடெல்லி:

    இணையத்தில் போலி செய்திகள் பரப்புவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் அளித்த பதில் வருமாறு:-

    இணையத்தில் போலியான செய்திகளை பரப்பி பிரசாரம் செய்வதன் மூலமும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

    2021-2022 காலகட்டத்தில் போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக ஊடக கணக்குகள் மற்றும் 747 யுஆர்எல்-கள் முடக்கப்பட்டுள்ளன.

    கொரோனா தொற்று தொடர்பான போலிச் செய்திகள் பரவுவதை சரிபார்ப்பதற்காக, பத்திரிகை தகவல் மையத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவின் பிரத்யேக செல் 2020ம் ஆண்டு மார்ச் 31 அன்று உருவாக்கப்பட்டது. இதில் மக்கள் கொரோனா தொடர்பான தகவல்களைச் சரிபார்த்துக்கொள்ளலாம். கொரோனா தொடர்பான கேள்விகள் உட்பட 34,125 கேள்விகளுக்கு இந்த பிரிவு பதில் அளித்துள்ளது.

    இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறினார்.

    • கால்நடை பராமரிப்பு துறைக்கு தொடர்பு இல்லாதது.
    • 90 மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் ஆணையர் கடிதவழி தெரிவிக்கப்பட்டவாறு அனிமல் ஹண்ட்லர் மற்றும் அனிமல் ஹண்ட்லர் கம் டிரைவர் ஆகிய பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு எனவும், சம்பளம் முறையே ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரம் எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமனம் ஆணை வழங்கப்படும்.

    இதற்கு விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்யுமாறும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 5 பணியிடங்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் தலா 160 பணியிடங்கள் எனவும் வாட்ஸ் அப் மூலம் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த தகவல் அனைத்தும் கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பு இல்லாதவையாகும். தவறான தகவல் பகிரப்படுகின்றது.

    மேற்படி தவறான தகவல்களை பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இந்த தகவலை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    ×