search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகளில்"

    • பள்ளி திறப்பு ஜூன் 7-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு, 

    தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது.

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1-ந் தேதி திறப்பதாக இருந்தது. ஆனால் அக்னி நட்சத்திரம் வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் பள்ளி திறப்பு ஜூன் 7-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    பள்ளி திறப்புக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் பள்ளி வளாகத்தில் தூய்மை பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

    இதற்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள மரம், செடி, கொடி கள், புதர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. வகுப்பறைகளில் போர்டுகளுக்கு கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. கழிப்பறைகள், பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. தூய்மை பணிகள் கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. 

    • எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் போது அதே பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
    • இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகின்றது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து பதிவு அட்டை வழங்கப்படும்.

    ஈரோடு:

    எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் போது அதே பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    மேலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு எண் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்தாண்டு முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அல்லது ஆன்லைன் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்ப பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வேலைவாய்ப்பு பிரிவு இணையதளம் மூலம் 2011-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகின்றது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து பதிவு அட்டை வழங்கப்படும்.

    மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான www.tnvelaivaaaippu.gov.in என்ற முகவரியில் நேரடியாக மாணவர்களே பதிவு செய்ய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என அவரவர் வீடுகளிலும், பள்ளி வளாகத்திலும் தரம்பிரிப்பது குறித்து விளக்கப்பட்டது.
    • என் குப்பை என் பொறுப்பு என்ற பதாகைகளை மாணவ- மாணவிகள் ஏந்தி தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ஊட்டி:

    குன்னூர் நகராட்சி பொதுச் சுகாதாரப் பிரிவு சார்பாக, தமிழக முதல்-அமைச்சரின் நகரங்களுக்கான தூய்மை மக்கள் இயக்கம் என்ற விழிப்புணர்வு முகாம் மற்றும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என அவரவர் வீடுகளிலும், பள்ளி வளாகத்திலும் தரம்பிரிப்பது எவ்வாறு என்று செய்முறை விளக்கமும் மாணவ- மாணவிகளிடையே விளக்கி விழிப்புணர்வு ஏற்பத்தப்பட்டது.

    என் குப்பை என் பொறுப்பு என்ற பதாகைகளை மாணவ- மாணவிகள் ஏந்தி தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.முகாமில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர் கள், பள்ளி மாணவ-மாணவிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் மாணவ மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்த விழிப்புணர்வும் மற்றும் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்தும் செய்முறை விளக்கம் ஏற்படுத்தப்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர், நலத்துறை பள்ளிகள் 82.21 சதவீதம், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 86.89 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவுக்கான காரணத்தை ஆராய குழு அமைத்து அதனை சரிசெய்ய முயல வேண்டும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. ஈரோட்டில் பிளஸ் - 2 பொதுத் தேர்வில் 95.72 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.11 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    இதில் ஆதிதிராவிடர், நலத்துறை பள்ளிகள் 82.21 சதவீதம், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 86.89 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிற துறைகளை ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் தேர்ச்சி விகிதம் உள்ளது.

    இதுகுறித்து பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நடராஜ் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் தேர்வு நடந்த 5 பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஆசனூர்-74 சதவீதம், பர்கூர்-80 சதவீதம், கெத்தேசால்-75 சதவீதம், தலமலை-44 சதவீதம், பிளஸ்-2 தேர்வில் ஆசனூர்-68 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த சரிவுக்கான முக்கிய காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதும், பூர்த்தி செய்யாததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பர்கூர் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ்-2 வரை 418 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 418 பேருக்கு ஒரு தமிழாசிரியர், ஒரு ஆங்கில ஆசிரியர் உள்ளனர்.

    இது குறித்து கேட்டால் இந்த பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறையில் வருவதில்லை வேறு துறைகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை தான் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிடுகிறது.

    பள்ளி கல்வித் துறையில் காலிப்பணியிடங்களில் 95 சதவீதத்தை நிரப்பி விட்டு மீதி ஆசிரியர்கள் இருந்தால் இது போன்ற பிற துறை பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். இதுபோன்ற பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தற்போது பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவுக்கான காரணத்தை ஆராய குழு அமைத்து அதனை சரிசெய்ய முயல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×