search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாக்கத்தி"

    • காயலார் மேடு பகுதியைச் சேர்ந்த 3 பேரை பிடித்தனர்.
    • வீடியோவில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரும் இருப்பதாக தெரிகிறது. அவரை தேடிவருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி சிப்காட் அருகே காயலார்மேடு பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் பெரிய பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் "தப்பு நடக்கக்கூடாது என்று அடிக்கவில்லை, தப்பு நடக்கனும், அதை நாங்க மட்டும் தான் செய்யனும்'' என்ற பஞ்ச் வசனத்துடன் பட்டாக்கத்தியை எடுத்து காண்பிக்கிறார்கள். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காயலார் மேடு பகுதியைச் சேர்ந்த 3 பேரை பிடித்தனர். அவர்கள் சமூகவலைதளத்தில் லைக்கிற்கு ஆசைப்பட்டு பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் செய்து சிக்கி உள்ளனர்.

    அவர்கள் மீது ஏற்கனவே எந்த குற்ற வழக்குகளும் இல்லாததால் அவர்களை போலீசார் எச்சரித்தனர். இந்த வீடியோவில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரும் இருப்பதாக தெரிகிறது. அவரை தேடிவருகிறார்கள்.

    • திட்டக்குடியில் முகமூடி அணிந்து பட்டாக்கத்தியுடன் மர்ம நபர்கள் திரிந்ததால் பரபரப்பு
    • திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு முழுவதும் போலீஸ் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நள்ளிரவில் 2 மணி அளவில் திட்டக்குடி விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஸ்டூடியோவில் 2 மர்ம நபர்கள் பூட்டை உடைத்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கடையை உடைப்பதை பார்த்து விட்டு யார் என ஒரு சத்தம் போட்டுள்ளார். உடனே மர்ம நபர்கள் பட்டா கத்தியுடன் அவரைத்துரத்தியதால் அவர் தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார் மேலும் அவர்கள் இருவரும் மங்கி குல்லா அணிந்து உள்ளனர் மேலும் அதே பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் முன் வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்களை உடைத்து விட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

    இது குறித்து உடனடியாக திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நள்ளிரவு முழுவதும் போலீஸ் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை இதனால் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரியும் மர்ம நபர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×