search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயற்பியல்"

    • கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைவாகும்.
    • பி.காம் படிக்க 99 சதவீதம் கட்ஆப் மதிப்பெண் தேவை.

    சென்னை:

    பள்ளி கல்வியில் இறுதி வகுப்பான பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம் என்றாலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைவாகும்.

    என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு கணித பாடத்துடன் இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண் முக்கியமாகும். இந்த 3 பாடங்களின் கூட்டு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. 3 பாடங்களில் எடுத்த மதிப்பெண் கணக்கீடு செய்து கட்-ஆப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    இயற்பியல், வேதியியல், பாடங்களில் மிக குறைந்த மாணவர்களே நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். இதனால் பொறியில் கட்-ஆப் மதிப்பெண் குறைகிறது.

    கடந்த ஆண்டு வேதியியல் பாடத்தில் 3909 பேர் முழு மதிப்பெண் பெற்றனர். அதே போல் இயற்பியல் பாடத்தில் 812 பேர் நூற்றுக்கு நூறு பெற்று இருந்தனர். அதனுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு இந்த பாடங்களில் 100க்கு 100 பெற்றவர்கள் குறைவாகும்.

    இயற்பியல் பாடத்தில் 633 பேரும், வேதியியல் பாடத்தில் 471 பேரும் முழு மதிப் பெண் பெற்றுள்ளனர். ஆனால் பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் தொடர்பான பாடப்பிரிவுகளில் 8 ஆயிரம் இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக கட்-ஆப் மார்க் குறைய வாய்ப்பு உள்ளது.

    அதே நேரத்தில் வணிகவியல், பொருளியல் பாடங்களில் அதிகமான மாணவர்கள் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.

    வணிகவியலில் 6142 பேரும், பொருளியலில்3299 பேரும் சதம் அடித்ததால் டாப் கலை அறிவியல் கல்லூரிகளில் கட்-ஆப் மார்க் 99-100 வரை உயர வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:-

    இந்த வருடம் இயற்பியல், வேதியியல் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவாகும். கணிதப் பாடத்தில் 2587 பேர் நூற்றுக்கு நூறு எடுத்து உள்ளனர்.

    கட்-ஆப் மதிப்பெண் குறைவதற்கு முக்கிய காரணம் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு மட்டுமின்றி நிறைய பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 30 ஆயிரம் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கட்டாயமாக கட்-ஆப் மார்க் குறையும்.

    மேலும் வேளாண்மை, மீன்வளம், கால்நடை மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கு கட்-ஆப் மார்க் குறையும்.

    தாவரவியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் சென்டம் குறைந்துள்ளதால் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.

    ஆனால் வணிகவியல், கணக்குப் பதிவியல் பாடங்களில் இந்த அணடு அதிக அளவிலான சென்டம் வாங்கி உள்ளனர். இதனால் டாப்-கலை கல்லூரிகளில் மிகக் கடுமையான போட்டி ஏற்படக்கூடும்.

    பி.காம் பாடப் பிரிவுகளுக்கு கடந்த ஆண்டு கடுமையான போட்டி இருந்தது. இந்த வருடம் அதை விட கூடுதலாக போட்டி ஏற்படும். 99 முதல் 100 வரை கட்-ஆப் மார்க் இடம் பெறக் கூடும்.

    பாராட்டக்கூடிய விஷயம் என்னவென்றால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவரை 84 சதவீதமாக இருந்து வந்தது. அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் செயல்பாடு சிறப்பாக இருப்பதால் தேர்ச்சி அதிகரித்து உள்ளது.

    இதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு முக்கிய காரணமாகும். நன்றாக படித்தால் உயர் பதவிக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டதால் புதிய உற்சாகத்தை கொடுத்து உள்ளது. அதன் காரணமாக தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ள நிலையில் மாணவ-மாணவிகள் கம்ப்யூட்டர் மையங்கள் மற்றும் வீடுகளில் இருந்து விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த வருடம் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • பயிற்சி வகுப்புகள் வருகிற பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து மூன்று மாதம் நடைபெற உள்ளது.
    • கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடல் படையால் நவிக்பொது மற்றும் மாலுமி பணிகளிலும் இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து மூன்று மாத காலத்திற்கு கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக நடைபெற உள்ளது.

    இதில் கலந்துகொள்ள தகுதியான மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்படி, விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களிலும், மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், ரேசன் கடைகள் ஆகிய இடங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் அருகாமையில் உள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவார்.

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும்.

    மேலும், பயிற்சிகளுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் தலா ரூ. 1000 வழங்கப்படும். எனவே, 12-ம் வகுப்பு தேர்வில் மொத்த பாடங்களிலும் கூட்டு தொகையில் 50 சதவீதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இத் தகவல் இந்திய கடலோர காவல் படை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • பிளஸ்-2 தேர்வில் பண்ருட்டி ஜான்டூயி பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • யோகஸ்ரீ என்ற மாணவி வணிகவியல், பொருளியல், கணினிபயன்பாடு ஆகிய மூன்று பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    நடந்து முடிந்த பிளஸ்- 2 தேர்வில் பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி+2பொதுதேர்வில்தேர்வு எழுதிய 402 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100சதவீததேர்ச்சிபெற்றுசாதனைபடைத்துள்ளது. மாணவன்அருண் கார்த்திக், மாணவி தர்ஷனாஆகிய இருவரும் 591 மதிப்பெண்கள்பெற்று முதலிடம் பிடித்தனர். 570க்கு மேல் 14 மாணவ-மாணவியர்களும் 550க்குமேல் 29 மாணவ- மாணவியர்களும், 500க்கு மேல் 92 மாவை, மாணவியர்களும்தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    25 மாணவ மாணவிகள் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனைபடைத்துள்ளனர். மாணவன்ஹரிஹரன் இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகியமூன்று பாடங்களிலும், யோகஸ்ரீ என்ற மாணவி வணிகவியல், பொருளியல், கணினிபயன்பாடு ஆகிய மூன்று பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் வீரதாஸ், பள்ளி முதல்வர் வாலண்டினா லெஸ்லி, தலைமை யாசிரியர் மணிகண்டன், ஆசிரியர்கள் பாராட்டி பரிசு ழங்கினர்.

    ×