search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொட்டும் மழை"

    • ஒருபுறத்தில் சாலை ஓரமாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறு வருகிறது. இதில் நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து கீழ்பட் டாம்பாக்கம் வரை ஒருபுறத்தில் சாலை ஓரமாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை நெல்லிக்குப்பத்தில் கன மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வடிகால் வாய்க் காலுக்காக தோண்டப் பட்ட பள்ளத்திலும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. ஆனால் கொட்டும் மழையிலும் தேங்கி இருந்த மழை நீரில் விடாப்படியாக ஊழி யர்கள் தலையில் துண்டு அணிந்து கொண்டு சிமெண்ட் கலவை கொட்டி வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை செய்து கொண்டிருந்தனர்.

    இதனை பார்த்த பொது மக்கள் கடும் அதிர்ச்சி அறிந்து மக்கள் வரிப் பணத்தை வீணாக்குவதில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மழை, வெயில் என்று பாராமல் வேலை செய்து வருவதாக கடும் குற்றச்சாட்டை வைத்தனர். மேலும் தற்போது இந்த பணிகள் அவசர அவசரமாக நடைபெற்று வருவதால் சில மாதங்களில் தரமற்ற பணியால் வடிகால் வாய்க்கால் இடிந்து விழுவதோடு சாலை ஓரத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அல்லது பொதுமக்கள் விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் நெல்லிக்குப்பம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் சரியான முறையில் அளவீடு செய்யாமல் ஆக்கிரமிப்பு கள் அகற்றம் செய்யாமல் கடமைக்கு பணி செய்து வருவதாக கடந்த 3 நாட்கள் முன்பு வரை சுமார் 8 மாதமாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் கலெக்டர் கடும் எச்சரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறை யினர் சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது கொட்டும் மழையிலும் சிமெண்ட் கலவை அமைத்து வடிகால் அமைக்கும் பணியை எந்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்பது தெரியாமல் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளனர். ஆகையால் கலெக்டர் அருள் தம்புராஜ், சாலை விரிவாக்க பணி மற்றும் வடிகால் அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பாரா? என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • ஊட்டியில் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர்.
    • பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசிக்கின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வருவது தொடர்கின்றது.

    குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர்.

    கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    பள்ளிகள் திறந்த பின்னரும் கனிசமான அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை உள்ளது. கடந்த சில தினங்களாக ஊட்டியில் தினமும் மழை பெய்து வருகிறது.

    ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்து கொண்டும் சுற்றுலா தலங்களை ரசித்து வருகின்றனர்.

    ஊட்டி அரசு தாவிரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி, பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசிக்கின்றனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் மலர்களின் முன்பு நின்று செல்பி மற்றும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.f

    ×