search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.எஸ்.எல்.சி."

    • எஸ்.எஸ்.எல்.சி. -மதுரை மாவட்டத்தில் 91.79 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை மாவட்டம் 18-வது இடத்தை பிடித் துள்ளது.

    மதுரை

    மாணவ-மாணவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படை யில் அவர்கள் உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கிறது.

    எனவே மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மிகவும் சிரத்தை எடுத்து எழுதுவார்கள். அதில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ப தற்காக கூடுதல் நேரம் நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொண்டு அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற முடிந்த வரை முயற்சி எடுப்பார்கள்.

    இந்த ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவ டைந்து பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியானது.

    அதனை மாணவ-மாணவிகள் தங்களது செல்போன்களிலேயே பார்த்து தெரிந்து கொண்ட னர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ -மாணவி களுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் படித்த பள்ளிகளிலும் சக மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மதுரை மாவட்டத்தில் மொத்தம் 38 ஆயிரத்து 63 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதி னர். இதில் 19 ஆயிரத்து 190 பேர் மாணவர்கள். 18 ஆயிரத்து 823 பேர் மாணவி கள். இதில் 16 ஆயிரத்து 982 மாணவர்களும், 17 ஆயிரத்து 957 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மொத்தம் 34 ஆயிரத்து 939 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.79 சதவீத தேர்ச்சி யாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை மாவட்டம் 18-வது இடத்தை பிடித் துள்ளது.

    • விடைத்தாள் திருத்தும் பணி 24-ந் தொடங்கி 28-ந் தேதி நிறைவு பெறும்.
    • 1,950 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கி வரும் 20-ந் தேதி நிறைவு பெறுகிறது. விடைத்தாள்கள் 4 மையங்களில் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

    விடைத்தாள் திருத்தும் பணி வரும் 24-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை திருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.

    விடைத்தாளில் உள்ள மதிப்பெண் உடனுக்குடன் கணினி மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தம் செய்து முடிக்கப்பட்ட உடன் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தம் செய்யப்பட உள்ளது.

    இதேப்போல் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த ஈரோடு செங்கோடம்பாளையம் யு.ஆர்.சி பள்ளி, கோபி குருகுலம் பள்ளி, சக்தி ராகவேந்திரா பள்ளி, அந்தியூர் விஸ்வேஸ்வரய்யா பள்ளியில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    1,950 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள். விடைத்தாள் திருத்தும் பணி 24-ந் தொடங்கி 28-ந் தேதி நிறைவு பெறும்.

    விடைத்தாள்கள் பாட வாரியாக பிரிக்கப்பட்டு ஒன்றோடு ஒன்றோடு கலந்து வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்.

    பின்னர் பிற மாவட்ட விடைத்தாள்கள் ஈரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு கொண்டுவரப்பட்டு பாட வாரியாக பிரித்து திருத்தம் செய்து அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் சி.இ.ஒ.ஏ. மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் பாராட்டினர்.

    மதுரை

    மதுரை கோசாக்குளம் மீனாம்பாள் புரம் மேலூர், விருதுநகர், காரியாபட்டி, சாத்தூர், தேனி ஆகிய இடங்களில் சி.இ.ஒ.ஏ. மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வில் மாணவர் நித்திஷ்வர் 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் விஸ்வேஸ்வரர் 595 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளார். மாணவி கவின்மலர் 594 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளார்.

    கணித பாடத்தில் 30 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 20 பேரும், உயிரியல் பாடத்தில் 12 பேரும், இயற்பியல் பாடத்தில் 10 பேரும், வேதியியல் பாடத்தில் 9 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 30 பேரும், வணிகவியல் பாடத்தில் 15 பேரும், வணிக கணிதம் பாடத்தில் 12 பேரும் என மொத்தம் 132 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    தமிழ் பாடத்தில் 26 பேர், 100-க்கு 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவர் மட்டும் 99 மதிப்பெண் பெற்றுள்ளார். 590-க்கு மேல் 12 பேரும், 585-க்கு மேல் 26 பேரும், 575-க்கு மேல் 60 பேரும், 550-க்கு மேல் 149 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    இதே போல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர் ஸ்ரீநாத், திவ்யா ஸ்ரீ ஆகியோர் 500-க்கு 497 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். ஸ்ரீ நிரஞ்சனா, விக்னேஷ் ஆகியோர் 496 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளனர். ஹரிணி மீனாட்சி, அஸ்மிதா, கவுசல்யா, திவ்யபாலா ஆகியோர் 495 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளனர்.

    அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் பாராட்டினர்.

    ×