search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி மீட்பு"

    • 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
    • பள்ளிக்கு செல்லாமல் தனது காதலனுடன் படம் பார்ப்பதற்காக கோவைக்கு வந்தார்.

    பொள்ளாச்சி

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் பள்ளிக்கு செல்லாமல் தனது காதலனுடன் படம் பார்ப்பதற்காக கோவைக்கு வந்தார்.

    பள்ளிக்கு சென்ற தங்களது மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிக்கு திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று தேடினர். ஆனால் மாணவி பள்ளிக்கு வரவில்லை என ஆசிரியர்கள் கூறி விட்டனர்.

    இதனால் பயந்த பெற்றோர் இது குறித்து மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி தனது காதலனுடன் கோவைக்கு படம் பார்க்க சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கோவைக்கு வந்து மாணவியை தேடினர். அப்போது உக்கடம் பஸ் நிலையத்தில் காதலனுடன் சுற்றித்திரிந்த மாணவியை மீட்டனர். பின்னர் பொள்ளாச்சிக்கு அழைத்து சென்ற போலீசார் மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    மாணவியை படத்துக்கு அைழத்து சென்ற வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

    • வடமதுரை பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி மாயமானார்
    • அவரை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

    வடமதுரை:

    வடமதுரை அருகில் உள்ள செங்குறிச்சி ஆலம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் 11-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். அவரை மீண்டும் படிக்க சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறினார்.

    இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் நாகசாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவி காங்கேயம் பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து மாணவியை மீட்டு அவருக்கு அறிவுரை கூறி போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    ×