என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மெட்ரோ ரெயில் சேவை"
- பயணிகளின் வசதிக்காக கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என அறிவிப்பு.
- காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.
கனமழை காரணமாக பயணிகளின் வசதிக்காக கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் ரெயில் சேவை இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலை 8 மணி முதல் 11 மணி வரை பச்சை வழித்தடத்தில் 5 நிமிட இடைவெளியிலும், நீல வழித்தடத்தில் 6 நிமிட இடைவெளியிலும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் 2ம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.
- வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு கடைகள் ஆகிய இடங்களையும் கடந்து வந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழத்தடம் 3ல் பாலாறு என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் பாலாறு என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை நிலையத்தை வந்தடைந்தது
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் இரண்டாம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.
வழித்தடம் 3-ல், சேத்பட் முதல் ஸ்டெர்லிங் சாலை வரையிலான சுரங்கப்பாதை பணிகள் செப்டம்பர் 2023-ல் சிறுவாணி மற்றும் பாலாறு என்ற இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மூலம் தொடங்கப்பட்டன.
ஒவ்வொரு சுரங்கப்பாதையின் நீளமும் 708 மீட்டர் ஆகும். சுரங்கம் தோண்டும் இயந்திரம் சிறுவாணி ஆகஸ்ட் 2024-இல் (downline) ஸ்டெர்லிங் சாலையை வெற்றிகரமாக வந்தடைந்தது.
இதற்கிடையில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் பாலாறு 2024 ஜனவரியில் (upline) சேத்பட் நிலையத்திலிருந்து சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு இன்று 09.10.2024 ஸ்டெர்லிங் சாலையை வந்தடைந்தது.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் பாலாறு பூமிக்கு அடியில் களிமண், மணல் மற்றும் பாறை பிரிவுகளையும், மேலும், சேத்பட் மாநகராட்சி பள்ளி, சேத்பட் தோபி காட், கருகாத்தம்மன் கோயில் மற்றும் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு கடைகள் ஆகிய இடங்களையும் கடந்து வந்துள்ளது.
இருப்பினும், பல குடியிருப்பாளர்கள் தங்கள் கட்டமைப்புகளின் கீழ் நடைபெறும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் செயல்பாடுகளை அறியாமலே இருந்தனர், இது வேலையின் துல்லியத்தை எடுத்துக்காட்டுகிறது.
குறிப்பாக சுரங்கப்பாதைக்கு மேலே 6 மீட்டர் களிமண்ணுடன் 52 மீட்டர் நீளமுள்ள கூவம் ஆற்றின் அடியில் கடந்தது சவாலாக இருந்தது. இந்த நுட்பமான செயல்பாடு குறைபாடற்ற முறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.
மேலும், இந்த சுரங்கப்பாதை பணிகளை முடிக்க 260 நாட்கள் ஆனது, இது சென்னை மெட்ரோ ரெயிலின் கட்டம்-2 பணிகளின் தற்போதைய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது.
இந்நிகழ்வை, சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர் சகாய் மீனா, இ.ஆ.ப., சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் கோனேரு பவானி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஒலிம்பிக் தொடக்க விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.
- 10,714 விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் இந்த தொடரில் இடம் பெற்ற 10,714 விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரெயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் நாசவேலை செய்து முடக்கியிருக்கும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஒட்டுமொத்த போக்குவரத்து அமைப்பும் சீர்குலைக்கப்பட்டு இருப்பதாக, அரசு போக்குவரத்து நிறுவனமான எஸ்என்சிஎப் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்து தாக்குதலால், பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து காரணமாக, பாரிஸ் மற்றும் லில்லி இடையே அதிவேகப் பாதை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாரிஸூக்கு செல்லும் மற்றும் வரும் அதைத்து அதிவேக ரெயில்களும் இன்று கிளாசிக் பாதை வழியாக திருப்பி விடப்படுகின்றன. இது பயண நேரத்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நீட்டிக்கிறது.
ரெயில்கள் வெவ்வேறு தடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. ஆனால் அவற்றில் அதிக எண்ணிக்கையை நாங்கள் ரத்து செய்ய வேண்டியிருக்கும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஜூலை 29 திங்கட்கிழமை இயல்பான போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று ரெயில் புறப்படும் மண்டபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கடைசி சேவை இரவு 12 மணி வரை நீட்டிப்பு.
- இரு நாட்களில் இரவு 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை இருக்கும்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வரும் ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மெட்ரோ ரெயிலின் கடைசி சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரவு 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு ரெயில் சேவை இருக்கும் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- திருச்சியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- மெட்ரோ துரித போக்குவரத்திற்கு உகந்த வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பின் மெட்ரோ ரெயில் போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்ற மேல் நடவடிக்கை எடுக்கப்படும்
திருச்சி:
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருச்சி மாநகராட்சி பகுதியில் மெட்ரோ ரெயில் சேவை தொடர்பான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயலாளருமான எம்.ஏ.சித்திக் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில் முதன்மை செயலாளர் எம்.ஏ.சித்திக் பேசியதாவது:-
தற்போது சென்னையில் மெட்ரோ ரெயில் துரித போக்குவரத்து சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதேபோல், திருச்சி மாநகராட்சியிலும், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலும் மற்றும் விரைவாக்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் துரித போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
அதற்கான முதற்கட்ட ஆலோசனைதான் இது. இந்த சாத்தியக்கூறு ஆய்வின் மூலம் திருச்சி மாநகராட்சிக்கு உகந்த துரித போக்குவரத்து முறை மற்றும் மெட்ரோ துரித போக்குவரத்திற்கு உகந்த வழித்தடங்கள் கண்டறியப்படும்.
மேலும் இதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பின் மெட்ரோ ரெயில் போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்ற மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி மெட்ரோ ரெயில் துரித போக்குவரத்து திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்வதற்கு தேவையான ஒருங்கிணைந்த நகர்வுத்திட்டம் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த அறிக்கை விரைவில் கிடைக்கப்பெறும்.
ஒருங்கிணைந்த நகர்வுத் திட்டத்தை அடிப்படையாக கொண்டு விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னரே திருச்சி மாநகரத்திற்கு உகந்த மெட்ரோ ரெயில் போக்குவரத்து அமைப்பினை தேர்வு செய்ய முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன முதன்மை மேலாளர்கள் ஆர்.எம்.கிருஷ்ணன், லிவிங்ஸ்டன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கேசவன், மாநகராட்சி செயற் பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் முத்தையா, உதவி கோட்ட பொறியாளர் சத்தியன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்