என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்"
- சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாய்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
- சன்னி லாய்டு ஏற்கனவே சில வழக்குகளில் சிக்கி 3 முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்.
சென்னை:
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே கடந்த மாதம் முகமது கவுஸ் என்பவரை கத்தி முனையில் கடத்தி ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங், வருமான வரித்துறை அதிகாரிகள் பிரபு, தாமோதரன், பிரதீப் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங், வருமானவரித்துறை அதிகாரி தாமோதரன் ஆகிய இருவரையும் திருவல்லிக்கேணி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது இவர்களுக்கு மூளையாக செயல்பட்டது சைதாப்பேட் டை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாய்டு என்பது தெரிய வந்தது. அவர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழிப்பறி செய்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங், சன்னி லாய்டு மற்றும் கைது செய்யப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஆகியோர் கூட்டு சேர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து அதை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக கூறி அவர்களே பங்கு போட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சன்னி லாய்டை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாய்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் அருண், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். சன்னி லாய்டு ஏற்கனவே சில வழக்குகளில் சிக்கி 3 முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்.
கோடிக்கணக்கில் ஹவாலா பணத்தை வழிப்பறி செய்த சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாய்டு அந்த பணத்தை கிழக்கு கடற்கரை சாலையில் ரிசார்ட் வாங்கி இருப்பதாகவும் ஜாம்பஜாரில் அதிநவீன உடற்பயிற்சி கூடம் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகின.
மேலும் அவர் எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார், எத்தனை கோடி வழிப்பறி செய்துள்ளார் என்பது போன்ற விவரங்களை சேகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அதனால் அவரை ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
பொங்கல் விடுமுறை முடிந்ததும் அடுத்த வாரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அவரை விசாரணைக்கு எடுத்து மேலும் பல தகவல்களை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.
- கோவை போலீஸ் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.
- அனைத்து அசல் சான்றிதழ்களையும் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.
கோவை:
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு கோவை போலீஸ் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் ஆகஸ்டு 23, 24-ந் தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட தேர்வு மையத்தின் துணைக் குழுத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறனறித் தேர்வு கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் ஆகஸ்டு 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
தகுதித் தேர்வின் முதல் அணி காலை 6.30 மணிக்கும், இரண்டாம் அணி காலை 7.30 மணிக்கும், மூன்றாம் அணி (காவல் துறை ஒதுக்கீடு) காலை 8.30 மணிக்கும் இத்தேர்வில் கலந்துகொள்ள உள்ளது. இதற்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் விண்ணப்பத்தாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அழைப்பு கடிதம் பெறப்படாதவர்கள் இனையதள முகவரியில் அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பதாரர்கள் தோ்வாணையத்துக்கு விண்ண ப்பம் அளி க்கும்போது, தகவல் ஏற்றம் செய்த சான்றி தழ்களின்அனைத்து அசல் சான்றுகளையும் கொண்டு வர வேண்டும். கல்விச்சான்று, ஜாதிச்சா ன்று, விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்று, தமிழ் வழி கற்றலுக்கான சான்று, முன்னாள் ராணுவத்தினருக்கான படையில் விடுவிக்கப்பட்ட சான்று, காவலர் தடையின்மை சான்று ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்களையும் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஈரோடு மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்துத்தேர்வுக்காக 3610 ஆண்கள், 815 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 428பேர் விண்ணப்பித்திருந்தனர்.
- ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் கல்லூரி, கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் நந்தா என்ஜினீயரிங் கல்லூரி என 3 மையங்களில் எழுத்துத் தேர்வு நடந்தது. வேளாளர் கல்லூரியில் நடந்த எழுத்துத்தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரடியாக வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் காவல்து றையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடந்தது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்துத்தேர்வுக்காக 3610 ஆண்கள், 815 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 428பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதுபோக காவல்துறையில் பணி புரியும் 447 ஆண் போலீசார், 108 பெண் போலீசார் என 607 பேரும் எழுத்து தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று காலை நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் கல்லூரி, கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் நந்தா என்ஜினீயரிங் கல்லூரி என 3 மையங்களில் எழுத்துத் தேர்வு நடந்தது. வேளாளர் கல்லூரியில் நடந்த எழுத்துத்தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரடியாக வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் வந்திருந்தார்.
இன்று காலை 4228 பேருக்கு பொதுத்தேர்வு நடந்தது. இதற்காக தேர்வு நடைபெறும் மையங்களில் காலை 8 மணி முதலே தேர்வர்கள் வர தொடங்கினர். தேர்வு மையத்திற்குள் செல்போன் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை மீறி ஒரு சிலர் செல்போன் கொண்டு வந்திருந்தனர். அதை பாதுகாப்பு பணியில் ஈடுப ட்டிருந்த போலீசார் வாங்கி வைத்துக்கொண்டனர். தேர்வு முடிந்ததும் செல்போன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேர்வு எழுதுவோர் ஹால் டிக்கெட், ஆதார் கார்டு நகல் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. பலத்த சோதனைக்கு பிறகே தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வேளாளர் கல்லூரியில் பெண்கள் மட்டுமே தேர்வு எழுதினர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு நிறைவடைந்தது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வுக்காக 16 இன்ஸ்பெக்டர்கள், 70 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு ஹாலில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 300 தேர்வர்களுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் என்ற அடிப்படையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். நாளை காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் இன்று மதியம் பொதுத்தமிழ் தேர்வு தொடங்கியது. இதில் 4,428 பேர், காவல் துறையில் பணியாற்றும் 607 போலீசாரும் பொதுத்தமிழ் தேர்வை எழுதினர். இதைத்தொடர்ந்து நாளை காலை காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு மட்டும் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.