search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 236806"

    • சென்னை - ராமேஸ்வரம் விரைவு ர‌யி‌லை மீண்டும் ரயில்வே இயக்க எடுக்க வேண்டும்.
    • விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் பயன்படும் பேராவூரணி - சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இயக்க வேண்டும்.

    பேராவூரணி:

    விரைவு ரயில்கள் பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்லவும், ஏற்கனவே பேராவூரணி வழித்தடத்தில் தினசரி இயக்கப்பட்ட சென்னை - ராமேஸ்வரம் விரைவு ர‌யி‌லை மீண்டும் தொடர்ந்து இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, சுதந்திரப் போராட்ட வீரர்கள், வாரிசுதாரர்கள் நலப்பிரிவு மாநிலச் செயலாளர் சமூக ஆர்வலர் எஸ்.ஏ.தெட்சணாமூர்த்தி, தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, பேராவூரணி தாலுகா தலைநகரமாகவும், சட்டமன்றத் தொகுதி தலைமை இடமாகவும், தேர்வுநிலை பேரூராட்சியாகவும் உள்ளது.

    இப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் விவசாயம், மீன், கருவாடு, உப்பு, தேங்காய் ஏற்றுமதி தொழில், வேலை, கல்வி, மருத்துவம், ஆன்மீகம் என பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் வெளியூர் சென்று வருகின்றனர்.

    பேராவூரணி ரயில் நிலையம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ரயில் நிலையம். சென்னை, மதுரை, ராமேஸ்வரம் செல்வதற்கும் பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி பகுதி மக்கள் ரயில் போக்குவரத்தை பெரிதும் நம்பி உள்ளனர்.

    இந்த வழித்தடத்தில் ஏற்கனவே தினசரி விரைவு ரயில் ராமேஸ்வரம் - சென்னைக்கு இயக்கப்ப ட்டது. தற்போது, சிறப்பு ரயில் மட்டுமே அவ்வப்போது இயக்கப்படுகிறது.

    எனவே, இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் பயன்படும் வகையில், பேராவூரணி வழியாக சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இரு வழிகளிலும் இயக்க வேண்டும்.

    மேலும், தற்போது இயக்கப்பட்டு வரும் செகந்திராபாத் - எர்ணாகுளம் சிறப்பு விரைவு ரயில் உள்ளிட்ட விரைவு ரயில்கள், பேராவூரணி ரயில் நிலையத்தில், ஒரு நிமிடம் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    மனுவின் நகல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ச.சு.பழனி மாணிக்கம் (தஞ்சாவூர்), சு.திருநாவுக்கரசர் (திருச்சி) கார்த்திக் சிதம்பரம் (சிவகங்கை), சட்டமன்ற உறுப்பினர்கள் என்.அசோக்குமார் (பேரா வூரணி), டி.ராமச்சந்திரன் (அறந்தாங்கி) மாங்குடி (காரைக்குடி) ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    • தண்டவாளத்தை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ரெயில் மாணிக்கம் மீது மோதியது.
    • திருப்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர், வஞ்சிபா ளையத்தை சேர்ந்தவர், மாணிக்கம் (58).இவர் கோவையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக, திருச்சி - பாலக்காடு டவுன் ரயிலில் ஏற, வஞ்சிபாளையம் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார்.

    அப்போது தண்டவா ளத்தை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ரெயில் மாணிக்கம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் கிடைத்ததும் திருப்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பூர் வரும் ரயில்களில் போதை பொருள்கள் கடத்தி வருவதாக ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • தன்பாத்திலிருந்து கேரளா மாநில செல்லும் விரைவு ரெயிலில் பொது பெட்டியில் போலீசார் சோதனை செய்தனர்.

    திருப்பூர் :

    மாநிலங்களிலிருந்து திருப்பூர் வரும் ரயில்களில் போதை பொருள்கள் கடத்தி வருவதாக திருப்பூர் ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவல்களின் அடிப்படையில் திருப்பூர் ரயில்வே சாப்- இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, போலீஸ்கா ரர்கள் ராஜலிங்கம், சையது முகமது, கோபால் ஆகியோர் தன்பாத்திலிருந்து கேரளா மாநில செல்லும் விரைவு ரெயிலில் பொது பெட்டியில் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது பாத்ரூம் அருகில் ஒரு மூட்டை ஒன்று கிடந்தது அதனை சோதனை செய்து பார்த்தபோது அதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் 12 கிலோ இருப்பது தெரிய வந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அதை யார் கடத்தி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயிலம் அருகே ரயில் மோதி மூதாட்டி பலியானார்.
    • காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் அருகே மயிலம் போலீஸ் சரகம் சின்ன நெற்குணம் கிரா மத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி குப்பம்மாள் (வயது70). இவர் இன்று அதி காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள ெரயில் பாதை–யை கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ெரயில் மூதாட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு மூதாட்டி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ெரயில்வே இரும்பு பாதை போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடலூர் அருகே ரயில் மோதி பெண் இறந்தார்.
    • எதிர்பாராதவிதமாக ரயில் மோதி மூதாட்டி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார் .

    கடலூர் :

    திருப்பதியில் இருந்து மன்னார்குடி நோக்கி எக்ஸ்பிரஸ் ெரயில் நெல்லிக்குப்பம் வழியாக நேற்று மாலை சென்று கொண்டிருந்தது . அப்போது கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே 50 வயது மூதாட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் மோதி மூதாட்டி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார் . இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மூதாட்டி உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர் . இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×