search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்"

    • இந்தி தெரிந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசின் அறிக்கையால் சர்ச்சை வெடித்தது.
    • தவறுதலான அறிவிக்கையைப் பதிவேற்றிய இணை இயக்குநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

    மகளிர் உதவி கட்டுப்பாட்டு மைய விளம்பரத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி தெரிந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற தவறுதலான அறிவிக்கையைப் பதிவேற்றிய இணை இயக்குநர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும். சமூக நல ஆணையரகம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவிட பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம், "மகளிர் உதவி எண்.181" சென்னையில் செயல்பட்டு வருகிறது. மகளிர் உதவி எண்.181 பணியிடத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெற்றிட tn.gov.h என்ற இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் "அழைப்பு ஏற்பாளர்" (Call Responders) roன்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

    இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்தவுடன், அவ்விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கை உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

    மேலும், தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தாய்மொழியாம் தமிழ் மொழியினை உயிருக்கும் மேலாய் மதிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. மாண்பமை நீதிமன்றம். ஒன்றிய அரசுடனான கடிதப் போக்குவரத்து போன்றவற்றிற்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

    தமிழ்த்தாய் வாழ்த்து, அய்யன் திருவள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டமும், 133 அடியில் வானுயர சிலையும் அமைத்தது. உலகத் தமிழ் மாநாடு நடத்தியது. தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத் தந்தது என எண்ணிலடங்கா பெருமைகள் கொண்டதுதான் திராவிட முன்னேற்றக் கழக வரலாறு. தமிழர் பெருமை கூறும் கீழடி அருங்காட்சியகம் அமைத்து, உலகத்தின் பார்வையை நம் மீது திருப்பியது அண்மைக் கால வரலாறு. மேலும், அரசுப்பணிகளில் தமிழ் மொழியில் பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்ட அரசு, நமது திராவிட மாடல் அரசு.

    தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது என தமிழ்மொழி வளர்ச்சிக்கான இவ்வரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

    ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் மக்கள் ஏமாறப் போவதில்லை.

    நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சியில், தமிழ் மொழி மென்மேலும் சிறப்புகள் பெற்று வளர்ந்து வருகிறது. இதனைக் காண சகிக்காதவர்கள் தான் இப்போது கூக்குரல் இடுகிறார்கள். அதனை புறம் தள்ளி, எங்கள் தாய்மொழியாம் தமிழ் வழி பயணத்தை சிறப்புற தொடர்வோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ் திரைப்பட பாடல்களால் நமது தமிழ் மொழி பல்வேறு நாட்டினருக்கு சென்றடைந்துள்ளது.
    • பிறமொழியைத் தாய் மொழியாகக் கொண்டோரையும் நம் தமிழ் மொழியை உச்சரிக்கத் தூண்டும் திரை இசைக்கு நன்றி

    தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகும். உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் தமிழ் மொழியை பேசி வருகின்றனர். இணையம் உருவான பிறகு கணினி மொழியாகும் இந்தியாவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழியாகவும் தமிழ் மொழி உள்ளது.

    குறிப்பாகத் தமிழ் திரைப்பட பாடல்களால் நமது தமிழ் மொழி கண்டங்களை கடந்து மொழிகளை கடந்து பல்வேறு நாட்டினருக்கு சென்றடைந்துள்ளது.

    அவ்வகையில் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அழகிய குரலால் தமிழ் பாடல்களை பாடும் வீடியோ நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

    தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற 'அடியாத்தி' பாடலையும் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற அனல் மேலே பனித்துளி பாடலையும் அச்சு பிசகாமல் தமிழில் அப்பெண் அழகாக பாடியுள்ளார்.

    இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நபர், "நமது தாய் மொழியை பிறர் உச்சரிக்கக் கேட்கும் போது பிறக்கும் உவகை, சொல்லால் விளக்க முடியாத உணர்வு. பிறமொழியைத் தாய் மொழியாகக் கொண்டோரையும் நம் தமிழ் மொழியை உச்சரிக்கத் தூண்டும் திரை இசைக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

    • கொள்கை அளவுல திராவிடத்தையும் தமிழ்தேசியத்தையும் நாம பிரித்து பாக்க போறது இல்ல.
    • மதச்சார்பற்ற கொள்கையை நமது கொள்கை கோட்பாடாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதனையடுத்து மக்களிடையே உரையாற்றிய விஜய், "கொள்கை அளவுல திராவிடத்தையும் தமிழ்த்தேசியத்தையும் நாம பிரித்து பாக்க போறது இல்ல. திராவிடமும் தமிழ்த்தேசியமும் இந்த மண்ணுடைய இரு கண்கள். நாம் எந்தவொரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளும் நம்மை சுருக்கி கொள்ளாமல் தமிழ்நாட்டுக்கு உரிமைகளை சார்ந்த மதச்சார்பற்ற கொள்கையை நமது கொள்கை கோட்பாடாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம்.

    ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், சமய நல்லிணக்கம், பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை, மாநில தன்னாட்சி, இருமொழி ஆட்சி கொள்கை, இயற்கை வளப்பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வளர்ச்சி, உற்பத்தித் திறன், போதையில்லா தமிழகம் என்கிற கொள்கையின் அடைப்படையில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற புரட்சிகர தத்துவத்தின் அடிப்படையில் சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது தான் நமது நோக்கம். கால மாறுதலுக்கு ஏற்ப கொள்கையில் மாற்றமும் மாறுதலும் வந்துதான் தீரும். அதை தவிர்க்க முடியாது" என்று தெரிவித்தார்.

    • தமிழ் மொழியில் அனைவரும் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தி வீடியோ ஒன்றை செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.
    • வெளிநாட்டுக்காரங்க தமிழ் கத்துக்கிட்டு தமிழ்ல பேசுறத பெருமையா நினைக்கிறாங்க..உலகத்துலேயே பழமையான மொழியும் தமிழ்தான்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான செல்வராகவன், தற்போது பல படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    செல்வராகவன் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மக்களுக்கு தேவையான கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். அவ்வகையில் தமிழ் மொழியில் அனைவரும் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "தமிழ்நாட்டு மக்களை நான் கெஞ்சிக் கேட்கிறேன். தமிழ் இனி மெல்லச் சாகும்ன்னு பாரதியார் சொன்னாரு. அது எந்த அளவுக்கு உண்மைன்னா தமிழ் இப்போது ஐசியு-வுல வெண்டிலேட்டர்ல இருக்கு. தமிழ்ல பேசுறத அவமானமா அருவருப்பா நினைக்குறாங்க.

    எனக்கு இங்கீலீஷ்ல பேசுறதோட அவசியம் புரியுது. ஸ்கூல்ல காலேஜ்ல இங்கீலீஷ்ல பேசமுடியாம அவமானப்பட்டு எவ்ளோ தடவை அழுதுருக்கேன். கூனி குறுகிறுக்கேன். புல் கிளாஸே இங்கீலீஷ்ல தான் பேசும். இங்கிலீஷ் தெரிஞ்ச பசங்க தான் கையை காட்டி பேசுவாங்க.

    இங்கிலீஷே தெரியாம எப்படியோ கடைசி பென்ச்சுல இருந்து படிச்சு வெளியே வந்துட்டோம். அதுக்குப் பிறகு தான் ஒரு வெறி வந்துச்சு.. என்ன இங்கீலீஷ் தானா? இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், இங்கீலிஷ் புத்தகங்கள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். அர்த்தம் தெரியாததற்கு பக்கத்துலயே டிக்ஸ்னைரி வச்சுக்கிட்டு இதுக்கு இதான் அர்த்தம் என தெரிஞ்சுகிட்டேன்.

    கொஞ்சம் கஷ்டமான பிராசஸ்தான். ஆனா படிக்கப் படிக்க கொஞ்சம் சரளமா பேச ஆரம்பிச்சு, ஸ்டேஜ்ல பேச ஆரம்பிச்சு அதுக்கப்புறம் சினிமாவுக்கு வந்த பின்னாடி தான் ஓரளவுக்கு நல்லா பேச ஆரம்பிச்சேன்.

    எங்க போனாலும் தமிழ்ல தான் பேசுவேன். நீங்களும் எங்க போனாலும் தமிழ்-லேயே பேசுங்க. தலைநிமிர்ந்து பேசுங்க. அவங்க உங்கள அவமானமா பார்த்தா முறைச்சுப் பாருங்க.

    தமிழ்ல பேசுவதை ஃபிகர் அவமானமாக பார்த்தால் அப்படிப்பட்ட ஃபிகரே தேவையில்லை விடுங்க. தமிழ்ல பேசுற தமிழ்நாட்டுப் பொண்ணே போதும். உலகத்துல எந்த நாட்டுக்கு வேணும்னாலும் போய் பாருங்க. அவங்க அவங்க தாய் மொழியிலதான் பேசுவாங்க.

    இங்கிலிஷ்ல சப்-டைட்டில்தான் போடுவாங்க. வெளிநாட்டுக்காரங்க தமிழ் கத்துக்கிட்டு தமிழ்ல பேசுறத பெருமையா நினைக்கிறாங்க..உலகத்துலேயே பழமையான மொழியும் தமிழ்தான். உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன். காலம் காலமா மனசுக்குள்ள இருந்ததை உங்ககிட்ட ஷேர் பண்ணிக்றேன்" என்று பேசியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் முன்னணி நடிகர் கார்த்தி நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் முன்னணி நடிகர் கார்த்தி நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார். இப்படம் மக்கள் மத்தியிலும் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது. 

    இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தில் ராஷி கன்னா, லைலா, ராஜீஷா விஜயன், யுகி சேது உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

    மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அடுத்த மாதம் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    கார்த்தி சர்தார் 2 படப்பிடிப்பு முடிந்தப் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன் இயக்கிய இயக்குனர் தமிழ் உடன் இணைந்து படம் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளனர். டாணாக்காரன் திரைப்படத்தைப் போல் இப்படம் மாபெரும் வெற்றிப் பெறும் என எதிர் பார்க்கப் படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.

    கார்த்தி அடுத்ததாக பிரேம் குமார் இயக்கத்தில் மெய்யழகன், நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
    • வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு விக்ரமன் கொடுத்துள்ளார்.

    'புது வசந்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரமன், தொடர்ந்து கோகுலம், பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

    மாறுபட்ட யதார்த்த கதை களத்துடன் வந்த அவரது ஒவ்வொரு படைப்பும் இன்றும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. இவரது முதல் படமான 'புது வசந்தம்' படம் பல விருதுகளை பெற்றது.

    இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

    சூர்ய கதிர் இயக்கும் இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது.

    அண்மையில், விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிகர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த வீடியோ அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதையடுத்து இப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெயிட்டார்.

    இந்நிலையில், 'ஹிட் லிஸ்ட்' படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய்யிடம் காண்பித்து படக்குழு வாழ்த்து பெற்றுள்ளது.

    1996-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான 'பூவே உனக்காக' படம் விஜய்யின் திரையுலக பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".
    • இப்படத்தை T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

    அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் கடந்த மாதம் வெளியானது. T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

    வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

    ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன். ஒரு பிளே பாய் கதாப்பாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார்.

    அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு விக்ரமன் கொடுத்துள்ளார்.
    • இவரது முதல் படமான 'புது வசந்தம்' படம் பல விருதுகளை பெற்றது.

    'புது வசந்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரமன், தொடர்ந்து கோகுலம், பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல உள்பட பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

    மாறுபட்ட யதார்த்த கதை களத்துடன் வந்த அவரது ஒவ்வொரு படைப்பும் இன்றும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. இவரது முதல் படமான 'புது வசந்தம்' படம் பல விருதுகளை பெற்றது.

    இந்த நிலையில் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

    சூர்ய கதிர் இயக்கும் இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து கோடை விடுமுறையில் படம் திரைக்கு வர இருக்கிறது.

    இந்நிலையில், விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரை நடிகர் விஜய் சந்தித்துள்ளார். அப்போது கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள விக்ரமன் மகனுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    1996-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான 'பூவே உனக்காக' படம் விஜய்யின் திரையுலக பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • எலக்சன் படத்தை இயக்குநர் தமிழ் இக்கியுள்ளார்.
    • இந்த படத்தில் மரியம் ஜார்ஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "எலக்சன்". இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி வேலன் வெளியிடுகிறார். இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய படத்தின் நாயகனான விஜய்குமார், '' உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் திரைப்படம் இது."

    "களம் தேர்தலாக இருந்தாலும் கருத்துக்களை வலிந்து திணிக்காமல், அரசியலை அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஃபேமிலி டிராமாவாக இந்த படம் தயாராகி இருக்கிறது."

    "படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் படம் எந்த பிரச்சாரத்தையும் செய்யவில்லை. இந்தப் படத்தின் முதுகெலும்பு, இந்த கதையின் முதுகெலும்பு நடிகர் ஜார்ஜ் மரியம் ஏற்று நடித்திருக்கும் நல்ல சிவம் என்ற ஒரு அரசியல் கட்சி தொண்டர் தான்."

    "கட்சி தொண்டன் என்றால் தன்னலம் பார்க்காமல் மக்களுக்காகவும், கட்சிக்காகவும் கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு கேரக்டர். 'அமாவாசை' போன்றவர்கள் இருக்கும் அரசியலில் இப்படி கொள்கைக்காகவும், கட்சிக்காகவும் உழைக்கிற நல்லவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி ஒரு கதாபாத்திரம் பற்றிய கதை இது," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
    • திரைப்படம் மே மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உறியடி படத்தை இயக்கி அதில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் விஜய்குமார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஃபைட் கிளப் படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    அதைதொடர்ந்து 'சேத்துமான்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார்.

    வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். படத்தின் பாடலான எலக்சன் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி யூடியூபில் 1 மில்லியன் பார்வையை இதுவரை பெற்றுள்ளது. திரைப்படம் மே மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அதைதொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான 'தீரா' பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் நேற்று வெளியாகியது. படத்தின் டிரைலரை இன்று மாலை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

    படத்தின் டிரைலர் சாதி அரசியல் பற்றியும், குடும்ப அரசியல் பற்றியும், இளைஞர்கள் அரசியலை எப்படி பார்க்கிறார்கள் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டிரைலர் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உறியடி படத்தை இயக்கி அதில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் விஜய்குமார்.
    • திரைப்படம் மே மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உறியடி படத்தை இயக்கி அதில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் விஜய்குமார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஃபைட் கிளப் படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    அதைதொடர்ந்து 'சேத்துமான்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார்.

    வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். படத்தின் பாடலான எலக்சன் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி யூடியூபில் 1 மில்லியன் பார்வையை இதுவரை பெற்றுள்ளது. திரைப்படம் மே மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அதைதொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான 'தீரா' பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் நேற்று வெளியாகியது. படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.
    • திரைப்படம் மே மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார்.

    வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். படத்தின் பாடலான எலக்சன் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி யூடியூபில் 1 மில்லியன் பார்வையை இதுவரை பெற்றுள்ளது. திரைப்படம்  மே மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அதைதொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான 'தீரா' பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் கபில் கபிலன் பாடியுள்ளார். பாடலில் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×