என் மலர்
நீங்கள் தேடியது "தமிழ்"
- நாகர்கோவில், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
- ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் ஆகிய தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை யொட்டி அக்டோபர் 11-ந்தேதி அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளை யொட்டி அக்டோபர் 12-ந் தேதி அன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு நாகர்கோவில், தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாண வர்களை நெல்லை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் ஒரு கல் லூரிக்கு இரண்டு மாண வர்கள் பெயர்ப்பட்டியலையும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். அண்ணா பிறந்தநாள் பேச்சு போட்டிக்கு பள்ளிக்கு காஞ்சி தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா ஆகிய தலைப்புகளும், கல்லூரிக்கு அண்ணாவும் மேடை பேச்சும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய் மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம் ஆகிய தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் பள்ளி களுக்கு வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள் என்ற தலைப்புகளும், கல்லூரிக்கு பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற் காசியாவின் சாக்ரடீஸ், தன்மானப் பேரொளி, தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள் ஆகிய தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
கல்லூரிப் போட்டியில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு மாவட்ட அள வில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. பள்ளிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு மாவட்ட அள வில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர் களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர் கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப் புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்
- பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "அறுவடையை கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கைகளையும், புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும். இது புதிய விருப்பங்களை ஒளிரச் செய்து மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
- மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம்.
- இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள, சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிப்பேரரசு வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
ஆண்டுக்கு ஆண்டு திருவள்ளுவர் திருநாளுக்கு பெருகி வரும் ஆதரவு திருவள்ளுவரின் செல்வாக்கு பெருகுவதை காட்டுகிறது. திருவள்ளுவர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். கடந்த வாரம் அதிகம் பேசப்பட்ட இரு மொழி கொள்கை குறித்து பேச வேண்டும். திருக்குறளை படிக்கும்போது நாங்கள் தமிழையே படிக்கிறோம். மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம் எனக் கூறினார்.
இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள். இங்கிருந்து வட மாநிலத்திற்கு செல்வர்கள் இந்தியை கற்றுக் கொள்கிறார்கள். அங்கிருந்து இங்கு தொழிலுக்காக வருபவர்கள் தமிழை கற்றுக் கொள்கிறார்கள். மூன்றாவது மொழி என்பது சூழலாலே உருவாகிறது என்றார்.
எப்படி கரையான் புகுந்து ஒரு மரத்தை அரிக்கிறதோ, அதுபோல் வடமொழி நிலத்தை அரித்து விட்டது. அப்படி நாங்கள் அதிகம் இழந்திருக்கிறோம். இனியும் எங்கள் மொழியையும், நிலத்தையும், இனத்தையும் இழக்க தயாராக இல்லை. இந்தி மொழி மீது எங்களுக்கு கோபம் இல்லை. அச்சம் தான் உள்ளது. இந்த நியாயமான அச்சத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை கொடுக்காமல் பாதுகாப்பை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
- இயக்குனர் தமிழ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இந்த படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
'சேத்துமான்' என்ற இயல்பான படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இயக்குனர் தமிழ். இப்போது அவர் பெருமாள் முருகன் கதை வசனத்தில் செ. வினோத்குமார் தயாரிப்பில் தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். லவ் ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் பேசப்பட்டுள்ளது.

சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, எஸ்.வினோத் குமார் வழங்கும் இந்த படத்தில் 'கனா' புகழ் தர்ஷன், 'ஹிருதயம்' தர்ஷனா ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், ஆதிரா, ஆதித்யா கதிர் மற்றும் பல புதுமுக நடிகர்களும் நடித்துள்ளனர். தீபக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு பிந்துமாலினி- வேதாந்த் பரத்வாஜ் இசையமைத்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இரவு- பகல் என ஒரேக்கட்டத்தில் நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு மைசூர், பெங்களூர், மாதேஸ்வரன் மலைப்பகுதிகள், தர்மபுரி, மேட்டூர் ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெற்றது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்.

இப்படம் குறித்து இயக்குனர் தமிழ் கூறியதாவது, நம் நாட்டில் எங்கும் அரசியல் , எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி ,சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமர்சையாக சித்தரிக்கும் படம் இது என்றார்.
- கவுண்டரில் வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.
- டிக்கெட் முன்பதிவு செய்யவந்தவர்கள் கூறிய விபரங்களை புரிந்து கொள்ள முடியமால் அந்த பணியாளர் பரிதவித்து உள்ளனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ரெயில் நிலையம் மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரெயில்வே நிலையங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி என 4 மாவட்ட மக்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ரெயில் பயணிகள் கட்டணத்தில் அதிகளவில் கோவில்பட்டி ரெயில்வே நிலையம் வருமானத்தினை ஈட்டி வருகிறது.
இவ்வாறு அதிகமாக மக்கள் வரும் ரெயில்வே நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற ஒரு கவுண்டர் தான் செயல்பட்டு வருகிறது. இதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க அந்த ஒரே ஒரு கவுண்டரில் வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர் கவுண்டரில் இருந்துள்ளார். அவருக்கு தமிழ், ஆங்கிலம் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்தி மட்டும் தெரிந்து இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்தவர்கள், தட்கல் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யவந்தவர்கள் கூறிய விபரங்களை புரிந்து கொள்ள முடியமால் அந்த பணியாளர் பரிதவித்து உள்ளனர்.
மேலும் இந்தியில் பேசினால் மட்டும் தான் விரைந்து தன்னால் டிக்கெட் கொடுக்க முடியும். இல்லை என்றால் மெதுவாக தான் தருவேன் என்று கூறியுள்ளார். இதனால் தட்கலில் முன்பதிவு செய்ய வந்தவர்கள் பரிதவித்துள்ளனர். மேலும் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க வந்தவர்களும் சிரமம் அடைந்துள்ளனர்.
30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை டிக்கெட் எடுக்க நேரமானதால் ஆத்திரமடைந்த பயணிகள் அங்குள்ள ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தும் ரெயில்வே நிலைய போலீசார் மற்றும் கிழக்கு காவல்நிலைய போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இது குறித்து நிலைய மேலாளரிடம் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நிலைய மேலாளர் அலுவலகம் சென்று புகார் கொடுக்க சென்ற போது அங்கு பணியில் இருந்த ஊழியர் அலட்சியமாக பதில் கூறியதால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினையும் சமதானப்படுத்தி புகார் அளிக்குமாறு கூறினர். அடுத்தடுத்து நடைபெற்ற இந்த பிரச்சினையினால் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இது குறித்து கோவில்பட்டி ராகவேந்திரா சேவை அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கூறியதாவது:-
கோவில்பட்டி ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டர், முன்பதிவு கவுண்டர் என இருந்தாலும் ஒரு ஒரு கவுண்டர் தான் செயல்படுகிறது. அந்த கவுண்டரிலும் தமிழ், ஆங்கிலம் தெரியாத நபர்களை பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இந்தி மட்டும் அவர்களுக்கு தெரிவதால், தமிழ், ஆங்கிலத்தில் பேசினால் புரியவில்லை என்று கூறி டிக்கெட் தர மறுக்கின்றனர். அப்படியே தந்தாலும் நீண்ட நேரம் காக்க வைத்து டிக்கெட் வழங்கி வருகின்றனர். குறிப்பாக தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. திருநெல்வேலிக்கு டிக்கெட் கேட்டால் திண்டுக்கலுக்கு டிக்கெட் வழங்கிவிடுகின்றனர். இதனால் சரியான நேரத்தில் டிக்கெட் எடுக்க முடியாத நிலை இருப்பதால் ரெயில் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்த ஊழியரை பணியில் அமர்த்த வேண்டும். இல்லையென்றால் தமிழ் தெரிந்த பணியாளரை உதவிக்கு அமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அன்னை மொழிக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் இன்றைய நிலை வருத்தமும், வேதனையும் அளிப்பதாக உள்ளது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தாய்க்கு இணையான மரியாதை தாய்மொழிக்கும் வழங்கப்பட வேண்டும்; அன்னை மொழிக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் உலகத் தாய்மொழி நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், அந்நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தி ஆதிக்கத்திலிருந்து அன்னைத் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக 500-க்கும் மேற்பட்டோர் உயிர்த்தியாகம் செய்த தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் இன்றைய நிலை வருத்தமும், வேதனையும் அளிப்பதாக உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு தான் இருக்கிறது. இதை உணர்ந்து அன்னைத் தமிழ் தொடர்பான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஷ்வேதா மோகன் மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு புதிய பாடலை அவரே இசையமைத்து,பாடி உள்ளார்.
- இப்பாடலை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
பின்னணி பாடகி ஷ்வேதா மோகன் மிகவும் பிரபலமான ஒரு பாடகி. இவரை நாம் அனைவரும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்ச்சியின் நடுவராக பார்த்திருக்கிறோம். சமீபத்தில் தனுஷ் நடித்த வாத்தி படத்தில் இவர் பாடிய "வா வாத்தி" எனும் பாடல் மிகவும் ஹிட்டானது.
அதை தொடர்ந்து இப்பொழுது ஷ்வேதா மோகன் மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு புதிய பாடலை அவரே இசையமைத்து,பாடி உள்ளார். இப்பாடலுக்கு 'பெண் - ஆந்தம்' என்று பெயர் வைத்துள்ளனர்.
பெண்களின் சிறப்பை போற்றும் இப்பாடலை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். " இந்த மகளிர் தினத்திற்க்கு சிறந்த சமர்ப்பணமாக இப்பாடல் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
- மோகன் ராஜாவுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.
- இப்படத்திற்கு 2015 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதில் சிறந்த கதையாசியருக்கான விருது மோகன் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி,நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் வெளிவந்த படம் "தனி ஒருவன்".
இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அரவிந்த சாமிக்கும், ஜெயம் ரவிக்கும் இந்த படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிக பெரிய ஹிட் ஆனது.
இப்படம் தெலுங்கு,கன்னடம் மொழியிலும் ரீமேக் செய்தார்கள்.2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைபடங்களில் மிக பெரிய வசூல் செய்த படம் தனி ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் ரிலீஸ் ஆகி 8 ஆண்டு முடிந்த நிலையில் மோகன்ராஜா தனி ஒருவன் இரண்டாம் பாகம் வெளியிட போவதாக வீடியோவை வெளியிட்டு அறிவித்தார்..இந்நிலையில் இப்படத்திற்கு 2015 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதில் சிறந்த கதையாசியருக்கான விருது மோகன் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.
இன்று முத்தமிழ் மன்றத்தில் நடைப்பெற்று வரும் விழாவில் மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மோகன் ராஜாவுக்கு விருது வழங்கி கவுரவித்தனர். .
- பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஊர்வசி நடிப்பில் "ஜே பேபி" படம் நாளை வெளியாக உள்ளது.
- ஹன்சிகா மோத்வானி நடிப்பில் நாளை வெளியாக உள்ளது கார்டியன் திரைப்படம்.
பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஊர்வசி நடிப்பில் "ஜே பேபி" படம் நாளை வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை சுரேஷ் மாரி இயக்கியுள்ளார். ஒரு தாய் திடீரென்று தன் குடும்பத்தை விட்டு யாரிடமும் சொல்லாமல் வெளியே செல்கிறார். மகன் எப்படி அவரை கண்டுபிடித்தார் என்பதே கதைக் களம்.
ஹன்சிகா மோத்வானி நடிப்பில் நாளை வெளியாக உள்ளது கார்டியன் திரைப்படம். இப்படத்தில் ஹன்சிகா திகிலூட்டும் வேடத்தில் நடித்துள்ளார். சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு திகில் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்த ஷில்பா மஞ்சுனாத் அடுத்து சமூத்திரகனியுடன் சேர்ந்து சிங்கப்பெண்ணே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சதீஷ் குமார் இயக்கியுள்ளார். நாளை இந்த படம் வெளியாக இருக்கிறது.
மேகனா இலன், சார்லி, இமான் அண்ணாச்சி நடிப்பில் நாளை வெளியாகும் படம் "அரிமாபட்டி சக்திவேல்". ரமேஷ் கந்தசாமி என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குனர் பிரசாத் ராமர் இயக்கத்தில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், தமிழ் செல்வி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே. பாடகர் மற்றும் இசையமைப்பாளார் ப்ரதீப் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படமும் நாளை வெளியாக உள்ளது.
- அடுத்ததாக கார்த்தி அவரின் 26-வது படத்தில் நடித்து வருகிறார்
- பூஜை விழா நடைப்பெற்று முடிந்த நிலையில் அதன் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியிட போவதாக பட குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் வெளியானது. இதை ராஜூ முருகன் இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கார்த்தி மற்றும் அனு இம்மானுவேல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், ஜப்பான் படம் அதனை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் அடுத்ததாக கார்த்தி அவரின் 26-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்குகிறார். நலன் குமாரசாமி எடுத்த இந்த இரண்டு திரைப்படமுமே மிகவும் வித்தியாசமான படம் மிக பெரிய வசூலை ஈட்டியது . அதனால் அவர் கார்த்தியை வைத்து இயக்கும் இந்த படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை விழா நடைப்பெற்று முடிந்த நிலையில் அதன் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியிட போவதாக பட குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

- 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
- இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கவிருக்கிறார்
மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் நடிகர் பிரபு தேவா,வடிவேலு,விவேக்,கவுசல்யா போன்ற பலர் நடித்து இருந்தனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட்டானது.
விவேக்,வடிவேலு, பிரபு தேவாவின் காம்போ மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது. அதில் வரும் சிங் இன் தி ரெயின். வொய் ப்ளட் சேம் ப்ளட், வடிவேலு ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலம். இன்று வரை நாம் அனைவராலும் பார்த்து ரசிக்கப் பட்ட காட்சிகள் அவை. இன்றும் அவை இன்ஸ்டாகிராமில் மீம் டெம்ப்லேட்டுகளாக உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.
மனதை திருடிவிட்டாய் படத்திற்கு அடுத்து பிரபு தேவாவும், வடிவேலும் இணைந்து படம் நடிக்கவில்லை.
இவர்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் படம் நடிக்க மாட்டார்களா என்று ஏக்கம் ரசிகர்களுக்கு இப்போதும் உண்டு.
இந்நிலையில், 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு "லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்" என பெயரிட போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூடிய விரைவிலேயே படகுழுவினரால் அறிவிக்கப்படும் என நம்பபடுகிறது. தற்போது வடிவேலு ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து மாரீசன் எனும் படத்தில் நடித்து வருகிறார். பிரபு தேவா தளபதி விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அசோக் செல்வன் மீண்டும் போர் தொழில் இயக்குனரான விக்னேஷ் ராஜாவுடன் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
- போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
போர் தொழில் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளியானது. பிரகாஷ் எழுத்தில் இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கினார்.ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்தார் . நடிகர் சரத்குமாருக்கு இந்த படம் மிக பெரிய புகழைப் பெற்றுக் கொடுத்தது. அதேவேளை, தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மிகவும் நேர்த்தியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு இருப்பவர் அசோக் செல்வன். நித்தம் ஒரு வானம், ஓ மை கடவுளே,சபா நாயகன் , ப்ளூ ஸ்டார் ஆகிய சிறந்த படங்களில் நடித்து ஒரு முன்னணி கதாநாயகனாக வளர்ந்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் அசோக் செல்வன் மீண்டும் போர் தொழில் இயக்குனரான விக்னேஷ் ராஜாவுடன் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது, போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. விரைவில் அதிகாரப் பூர்வமான தகவல் படகுழுவினரிடம் இருந்து வெளியிடப்படும்.

