என் மலர்
நீங்கள் தேடியது "பணியிடங்கள்"
- கொரோனாவுக்கு பின், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
- ஆசிரிய பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
உடுமலை:
தமிழகத்திலுள்ள உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆண்டுக்காண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பின், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில், வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி, வணிகவியல், கணக்கியல் சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.தனியார் கல்லூரிகள் போன்று அரசு கல்லூரிகளிலும், பல்வேறு தொழில் அமைப்பினர் 'கேம்பஸ் இன்டர்வியூ' வாயிலாக, மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகின்றனர்.மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதால் பல இடங்களில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், போதியளவில் விரிவுரையாளர் பணியிடம் நிரப்பப்படவில்லை.இதனால் கல்வி போதிப்பு பணியில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, உடனே காலியாக உள்ள ஆசிரிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ராமநாதபுரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
- அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்ட ப்படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் கலந்து கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலை வாய்ப்பு அலுவலகபதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்ப டும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
- மாநில தலைவர் ராஜேந்திரன் அரசுக்கு கோரிக்கை
நாகர்கோவில்:
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடந்தது. மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
குமரி மாவட்ட தலைவர் செந்தில்குமார், துணை தலைவர் ராஜேஷ், துணை செயலாளர் மோகன், இணை செயலாளர் மது மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் நாகேஸ்வர காந்த் வரவேற்று பேசினார்.
மாநில பொதுச் செயலா ளர் சுரேஷ் விளக்கவுரை ஆற்றினார். பொருளாளர் முத்துச்செல்வன், செய லாளர் விஸ்வநாதன், துணை தேர்தல் ஆணையர் விஜய பாஸ்கர், சங்க ஆலோ சனை குழு உறுப்பினர் குமார், ஜீவரத்தினம் சசி குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
முன்னதாக மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் காலியாக உள்ள 800- க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கான கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தற்காலிகமாக ஆசிரிய ர்களை தேர்வு செய்வதற்கான பணி நடந்து வருகிறது
- நாகர்கோவில் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் விபரம் கேட்டு குவிந்த பட்டதாரிகள்
நாகர்கோவில் :
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அடுத்து அந்தந்த மாவட்டங்களில் தற்காலிகமாக ஆசிரிய ர்களை தேர்வு செய்வதற்கான பணி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில்
பட்டதாரி ஆசிரியர்கள் 18,முது நிலை ஆசிரியர்கள் 6, இடைநிலை ஆசிரியர்கள் 39 என 63 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் பட்டதாரிகள் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
எந்தெந்த பள்ளிகளில் இடம் காலியாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள அவர்கள் வந்திருந்தனர். வந்தவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் காலியிடங்கள் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.பின்னர் முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தியை சந்தித்தும் அவர்கள் பேசினார்கள்.இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.காலியாக உள்ள பணி இடங்கள் அந்தந்த பள்ளியிலேயே நிரப்பப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சாலைப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் 2 நாள் நடைபெறும் மாநில மாநாடு துவங்கியது. மாநாட்டிற்கு மாநில தலைவர் சண்முகராஜா தலைமை வகித்தார். துணைப்பொது செயலாளர்கள் ராஜாசிதமபரம், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை தலைவர் செல்லச்சாமி மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநில பொதுசெயலாளர் ரவிச்சந்திரன் வேலை அறிக்கை வாசித்தார். மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம், சின்ராசு, ராஜேந்திரன், சங்கரபாண்டி, மாநில செயலாளர்கள் சிவானந்தன், சென்னியப்பன், ராஜமாணிக்கம் உட்பட பலர் பேசினர்.
இதில் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். காலியாக உள்ள 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர் பணியிடங்களை இளைஞர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். பணிக்காலத்தில் இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். தர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அரசு பணியிடங்களை ஒழித்திட வகை செய்யும் பணியாளர் சீரமைப்பு குழுவை கலைக்கவேண்டும். சீருடை, சலவைப்படி, விபத்துப்படி, சைக்கிள் படி வழங்கவேண்டும். வேகமாக வளர்ச்சியடைந்துவரும் பெரம்பலூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். மேகதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் தன்னிச்சையான நடவடிக்கையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லாதவாறு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகியவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.