என் மலர்
நீங்கள் தேடியது "பொதுக்குழுக் கூட்டம்"
- சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.
- கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டமானது மார்ச் மாதம் 28ஆம் தேதி (28.03.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கழக விதிகளின்படி, கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டிருக்கிறது.
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தந்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட மையத்தின் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.
- இக்கூட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் பலா் கலந்து கொண்டனா்.
நாமக்கல்:
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட மையத்தின் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் ஆனந்தன் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் அா்த்தநாரி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் தாமோதரன், மாவட்டப் பொருளாளா் பிரகாஷ் மற்றும் சங்க செயலாளா் விஜயகாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோரிக்கை
இதில் வருவாய்த் துறையில் அனைத்து அலுவலா் நிலையிலும், ஒரே அலுவலக நிா்வாகத்தின் கீழ் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு அலுவலா்களாக பணியமா்த்த வேண்டும், பணி மாறுதல்களை கலந்தாய்வு முறையில் நடத்த வேண்டும், ஊழியா் விரோத போக்கை கைவிட வேண்டும். கைவிடவில்லையென்றால் ஆா்ப்பாட்டத்தை நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் பலா் கலந்து கொண்டனா்.
- வேடசந்தூரில் வட்டார நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மற்றும் நலச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
- இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேடசந்தூர்:
வேடசந்தூர் –வட்டார நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மற்றும் நலச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சங்க கவுரவத் தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. தலைவர் தில்லை சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
செயலாளர் பூவை நேருமாணிக்கம் வரவே–ற்புரை நிகழ்த்தி சங்க செயல்பாடுகளை எடுத்து–ரைத்தார். இக்கூட்டத்தில் வேடசந்தூர் - சென்னை விரைவு பஸ் முன்புபோல் முறையாக வேடசந்தூரில் இருந்து இயக்க வேண்டும்.
வடமதுரை - கோயம்புத்தூர் பஸ் காலையும் மாலை–யும் தொடக்கத்தில் இயக்கியதைப் போல் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அழகாபுரி அணை ஷட்டர் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் பரசு–ராமன், பொம்முசாமி, சவுந்திரராஜன், முருகன், பாலாஜி, மகேஸ்வரன், சிவக்குமார் உட்பட. உறுப்பினர்கள் கலந்து–கொண்டு சிறப்பித்தனர். முடிவில் வெக்காளி முருகன் நன்றி கூறினார்.