search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்ற கூட்டம்"

    • வாழப்பாடி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் கவிதா சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.
    • இக்கூட்டத்தில், தம்மம்பட்டி சாலையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிக்கு ரூ.1 கோடி செலவில் வாய்க்கால் அமைத்தல், கிழக்குக்காடு பகுதிக்கு ரூ.1.25 கோடியில் புதிய தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் கவிதா சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் கணேசன், துணைத் தலைவர் எம்.ஜி.ஆர்.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சத்தியக்குமாரி சரவணன், வசந்தி வெங்கசேன், சத்தியா சுரேஷ், பெரியம்மாள், ரஞ்சித்குமார், வெங்கடேஷ்வரன், லட்சுமி செல்வம், புவனேஸ்வரி மதியழகன், ராணி மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், தம்மம்பட்டி சாலையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிக்கு ரூ.1 கோடி செலவில் வாய்க்கால் அமைத்தல், கிழக்குக்காடு பகுதிக்கு ரூ.1.25 கோடியில் புதிய தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும், திட்டத்தை செயல்படுத்த பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு கொடுத்து வரும் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் செல்வகனி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ நம்பிகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் விமலா, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் செல்வன், கணேசன், தங்ககுமார், கிறிஸ்டோபர் சந்திரமோகன், சரோஜா, சரிபா, பொன்முடி, நாகம்மாள், ரெத்தினம், இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட2-வது வார்டு பகுதியான மந்தாரம்புதூர் பஸ் நிறுத்தம் அருகில் அமைந்துள்ள ஆழ்குழாய் கிணற்றை ரூ.1லட்சத்து 85 ஆயிரம் செலவில் சுத்தம் செய்து மினி குடிநீர் திட்டம் அமைப்பது என்றும்

    3-வது வார்டு பகுதியான அச்சங்குளம் படிப்பகம் அருகில் உள்ள ஆழ்குழாய் கிணற்றை ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் செலவில் சுத்தம் செய்து மினி குடிநீர் திட்டம் அமைப்பது என்றும்

    ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள கிணற்றை ரூ.2 லட்சத்து 50ஆயிரம் செலவில் சுத்தம் செய்து மினி குடிநீர் திட்டம் அமைப்பது என்றும்

    12-வது வார்டு பகுதியான நாராயணன்புதூரில் ரூ.2லட்சத்து 35 ஆயிரம் செலவில் கிணற்றை சுத்தம் செய்து மினி குடிநீர் திட்டம் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இது தவிர கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் ரூ.5லட்சம் செலவில் மேலும் பல குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    • மன்றத்தின் நடவடிக்கைகளை பார்வையிட அனுமதி கேட்டோம். ஆனால் பொதுமக்களை அனுமதிக்கவில்லை
    • கூட்டம் முடிந்ததும் சந்திப்பதாகவும் அதுவரை வெளியில் காத்து இருக்கும் படியும் பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள தளி ஊராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் வெ. உதயகுமார் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கல்பனா மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் திருமூர்த்தி மலை அருகே உள்ள இலங்கைத்தமிழர்கள் முகாமிற்கு ரூ. 4 லட்சம் செலவில் 10.000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைப்பது உட்பட மே மாதத்திற்கான தொழில், சொத்து ,குடிநீர் வரி வசூல் விவரங்கள் உட்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தின் போது தளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மன்றக் கூட்டத்தை பார்வையாளர் பகுதியில் இருந்து காண வந்தனர். இதற்கு மன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர் அதனால் அவர்கள் கூட்ட அரங்கிற்கு வெளியே அமர்ந்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, மன்றத்தின் நடவடிக்கைகளை பார்வையிட அனுமதி கேட்டோம். ஆனால் எங்களை அனுமதிக்கவில்லை இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து செயல் அலுவலர் கல்பனாவிடம் கேட்டபோது, மன்ற கூட்டம் நடைபெறும் போது பொதுமக்கள் வந்து பார்வையாளர் பகுதியில் அமர முற்பட்டனர். அப்போது சில கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக வந்ததாக தெரிவித்தனர். எனவே கூட்டம் முடிந்ததும் சந்திப்பதாகவும் அதுவரை வெளியில் காத்து இருக்கும் படியும் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. அதன்படி கூட்டம் முடிந்ததும் அவர்களை அழைத்து கோரிக்கை விபரம் கேட்கப்பட்டது என்றார்.

    ×