search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேகம்"

    • தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையான இந்த ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன.
    • நேரம் பெருமளவில் குறைவதும், இந்த ரெயிலுக்கான வரவேற்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

    திருப்பூர்:

    இந்தியாவின் 14வது வந்தே பாரத்ரெயில் சேவை சென்னை-கோவை இடையே கடந்த ஏப்ரல் 8-ந்தேதி சென்னையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ெரெயில் சேவையான இந்த ரெயிலில்,7 ஏ.சி. பெட்டிகள், ஒரு எக்ஸிகியூட்டிவ் பெட்டி என மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன. இதில் 500க்கும் அதிகமானவர்கள் பயணம் செய்ய முடியும்.

    புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ெரயிலில் கட்டணம் அதிகம் என்பதால் எல்லா நாட்களிலும் இது நிரம்புமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் 8-ந்தேதியில் இருந்து இப்போது வரையிலும் ஒரு நாள் விடாமல் இந்த வண்டியில் இடம் கிடைக்காத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த மாதம் 15-ந் தேதி வரையிலுமே ஒரு இடம் கூட இல்லாத அளவுக்கு ஹவுஸ்புல் ஆகியுள்ளது.

    வந்தே பாரத் ரெயில்  ரெயில்யில் சேவை துவக்கப்பட்ட நாளில் இருந்து 100 நாட்கள் வரையிலும் புல் ஆகி இருப்பது கோவைக்கும், சென்னைக்கும் இடையிலான ெரயில் தேவையை உணர்த்துவதாக உள்ளது. இதற்கு இந்த ரெயிலில் உள்ள வசதிகளும், சேவையும் முக்கியக் காரணமாக இருப்பதுடன் நேரம் பெருமளவில் குறைவதும், இந்த ரெயிலுக்கான வரவேற்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

    இந்த ரெயிலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது போலவே கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ெரயிலை இயக்கினால் அமோக வரவேற்பு கிடைக்குமென்ற வாதமும் வலுத்துள்ளது. கோவையில் கேரள மக்கள் அதிகமிருப்பதால் திருவனந்தபுரம், மங்களூருக்கும் வந்தே பாரத் ரெயில்களை இயக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    வேகத்தைப் பொறுத்தவரையில் முதல் 14 வந்தே பாரத்ரெயில்களில் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயிலின் வேகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.டில்லி-வாரணாசி வந்தே பாரத் 96.37 கி.மீ., வேகத்திலும், நிஜாமுதீன்- ராணி கம்லாபதி வந்தே பாரத் 95.89 கி.மீ., வேகத்திலும் இயக்கப்படும் நிலையில், இந்த ரெயிலின் சராசரி வேகம் தற்போது 90.36 கி.மீ., என்ற அளவில் உள்ளது.

    ஜோலார்பேட்டையிலிருந்து கோவை வரையிலான 280 கி.மீ., தூரத்துக்கு வேகத்தை அதிகரிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் நடந்து வருகின்றன.ஈரோட்டில் காவிரி ஆற்றின் மேலே பாலத்தை பலப்படுத்தும் பணியும் நடக்கிறது.இந்தப் பணிகள் முடிந்தபின்பு, சென்னை-கோவை வந்தே பாரத் ரெரயிலின் வேகம், 110 கி.மீ.,லிருந்து 130 கி.மீ., வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதன் காரணமாக இப்போது 5:50 மணி நேரமாகவுள்ள பயண நேரம் மேலும் 20ல் இருந்து 30 நிமிடங்கள் வரை குறையும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னை - கோவை சதாப்தி உள்ளிட்ட ரெயில்கள் வேகம் நடப்பாண்டு ஜூன் முதல் அதிகரிக்கப்பட உள்ளது.
    • ரெயில் வேகம் அதிகரிப்பால் ஒட்டுமொத்த செயல் திறனும் மேம்படும்.

    திருப்பூர் :

    வந்தே பாரத் ரெயில் வருகையை தொடர்ந்து குறிப்பிட்ட சில ெரயில்களின் வேகத்தை அதிகரிக்க ெரயில்வே முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக சென்னை - பெங்களூரு, சென்னை - கோவை சதாப்தி உள்ளிட்ட ெரயில்கள் வேகம் நடப்பாண்டு ஜூன் முதல் அதிகரிக்கப்பட உள்ளது.இதற்காக 1,445 கி.மீ., நீளத்துக்கான இணைப்பு பாதைகளின் வேகமும் அதிகரிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 413 கி.மீ., தூரத்துக்கு ரெயில் பாதைகளில் அதிகபட்ச வேகம் உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை - ரேணிகுண்டா இடையே 134.3 கி.மீ., தூரம், 110 கி.மீ., வேகத்தை 130 கி.மீட்டராகவும், அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே 145.54 கி.மீ., தூரம், 110 கி.மீ., வேகத்தில் இருந்து 130 கி.மீ., ஆக அதிகரிக்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் கோட்ட ரெயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ரெயில் வேகம் அதிகரிப்பால் ஒட்டுமொத்த செயல் திறனும் மேம்படும். பயண நேரம் குறைவதுடன், சரக்கு போக்குவரத்தும் தடையின்றி சீராகும். கடந்த 2022ம் ஆண்டு 2,037 கி.மீ., நீளமுள்ள பாதையில் வேகத்தை மேம்படுத்தும் பணிகள் தெற்கு ரெயில்வேயால் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

    இந்தாண்டு பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் ரெயில்களின் வேகம் சூழலுக்கு ஏற்ப அதிகரிக்கப்படும். சென்னை - காட்பாடி, அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடங்களில் வேகம் அதிகரிக்கும் போது, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வந்து சேரும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கும். நேரமும் குறையும். விரைவில் இது குறித்த விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்றனர்.

    • சேலம்- விருத்தாசலம் இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் இந்த ரெயிலின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதனால் பயண நேரம் 15 நிமிடம் குறையும்.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம்- விருத்தாசலம் இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் இந்த ரெயிலின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதனால் பயண நேரம் 15 நிமிடம் குறையும்.

    அதன்படி விருத்தாசலம்- சேலம் பயணிகள் ரெயில் (06121) விருத்தாசலத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 9.05 மணிக்கு சேலம் வந்தடையும்.

    சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரெயில் (06122) சேலத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு விருத்தாசலம் சென்றடையும். இதேபோல் சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரெயில் (06896) சேலத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு விருத்தாசலம் சென்றடையும்.

    விருத்தாசலம்- சேலம் பயணிகள் ரெயில் (06895) விருத்தாசலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு சேலம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருநெல்வேலி-திருச்செந்தூர் பாதையில் 110 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
    • இந்தப் பகுதிகளில் 30 கி.மீ. வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரை இணைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து 61 கி.மீ. தூர ரெயில் பாதை அமைந்துள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு 7 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து இந்த 7 ரெயில்கள் பல்வேறு பகுதிக்கு செல்கின்றன. தற்போது இந்த பகுதியில் ரெயில்கள் 70 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடந்தன. ரெயில் வேக சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இதையடுத்து திருநெல்வேலி-திருச்செந்தூர் ரெயில்வே பிரிவில் ரெயில்களை 110 கி.மீ. வேகத்தில் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பகுதியில் ரெயில்கள் 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.

    மேலும் செங்கோட்டை-கொல்லம், திண்டுக்கல்-பழனி-பொள்ளாச்சி, மதுரை-விருதுநகர் ஆகிய பிரிவுகளில் உள்ள ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நேரடி ரெயில் பாதையில் இருந்து அருகில் உள்ள ரெயில் பாதையில் பயணிக்கும் போது இதுவரை 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. இதுவும் தற்போது இந்தப் பகுதிகளில் 30 கி.மீ. வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெயில்களை வேகமாக இயக்குவதால் பயணிகளின் பயண நேரம் குறைய வாய்ப்புள்ளது.

    • மதுரை-மணியாச்சி, சென்னை-திண்டுக்கல் ரெயில் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
    • 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ.ராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ்நாட்டில் முக்கிய வழித்தடங்களில் பயணிகள் ரெயிலை அதிகபட்ச வேகத்தில் இயக்குவது என்று தென்னகரெயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக அந்தப் பகுதிகளில்ரெயில் பாதையை பலப்படுத்துதல், மின்மயமாக்கல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    ரெயில் பாதைகளை பலப்படுத்துதல், நவீன மின்மயம், ரெயில் இயக்க சைகை விளக்குகள் மற்றும் கம்பங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம்ரெயில்களின் வேகத்தை ரெயில்வே வழிகாட்டு கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி முறையே மணிக்கு 160 கி.மீ. மற்றும் 130 கி.மீ. என அதிகரிக்க முடியும்.

    134.78 கி.மீ. தூரமுள்ள தங்க நாற்கர பாதையான சென்னை - ரேணிகுண்டா பிரிவில்ரெயில்களின் வேகம் மணிக்கு 110 கி.மீ. லிருந்து 130 கி.மீ.ராக அதிகரிக்கப்பட்டுள்ளது.ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்கு பிறகு இந்த பிரிவில் நடப்பு ஆண்டில் ரெயில்களின் வேகத்தை மேலும் அதிக ரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை - திண்டுக்கல் பிரிவில் ரெயில் வேகத்தை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் தற்போதைய வேகமான மணிக்கு 110 கி.மீ.-ல் இருந்து 130 கி.மீ. என்று அதிகரிக்கப்பட உள்ளது. மதுரை-வாஞ்சி மணியாச்சி பிரிவில் 100 கி.மீ.-ல் இருந்து 110 கி.மீ. வேகத்துக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்திய ரெயில்வேயில் 8 வழித்தடங்களில்ரெயில் வேகத்தை மணிக்கு 160 கி.மீ. -க்கு அதிகரிக்கரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ரெயில்வே மண்டலங்கள் பல்வேறு பிரிவுகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரித்து வருகின்றன.

    • சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 74ஆக உயர்வு பரிசோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
    • பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வலியுறுத்தல்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சேலம் மநாகராட்சியில் 14 பேர், சங்ககிரி, தாரமங்கலம், பனமரத்துப்பட்டியில் தலா 2, கெங்கவல்லி, வாழப்பாடி, மேட்டூர் பகுதிகளில் தலா ஒருவரும் இதில் அடங்குவர்.

    ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 55 பேரில் 5 பேர் குணமாகினர். தற்போது 73 பேர் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மே மாதம் வரை கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் படிப்படியாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறி யதாவது:-

    சென்னை சுற்று வட்டார பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சேலத்திலும் தொற்று அதிகரித்து உள்ளது. தற்போது அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் பரிசோதனையை அனைவருக்கும் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    வரும் நாட்களில் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வேண்டும், மேலும் தடுப்பூசி போடாத அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும், வரும் நாட்களில் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    ×