search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டைடல் பார்க்"

    • மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைப்பது சரியானது இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
    • தி.மு.க.வின் முப்பெரும் விழா ஸ்டாலினின் புகழ் பாடும் விழாவாக அமைந்ததாக தெரிவித்தார்.

    மதுரை

    மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2.25 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு பேரிடியாக உள்ளது. மதுரைக்கு டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்தது விளம்பர அறிவிப்பு, கள ஆய்வு நடத்தாமல் டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

    மதுரையில் ஏற்கனவே எல்காட் மூலம் உள்ள 2 தகவல் தொழில்நுட்ப பூங்கா முழுமையாக செயல்படுத்தவில்லை. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைவது சரியானது அல்ல, அடிப்படை கட்டமைப்பு இல்லாத இடத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்காமல் டைடல் பார்க் அறிவி க்கப்பட்டுள்ளது,

    கண்ணின் பார்வையை அழித்து விட்டு ராஜபார்வை என சொல்லவது போல டைடல் பார்க் அறிவிப்பு உள்ளது. தி.மு.க.வின் முப்பெரும் விழா ஸ்டாலினின் புகழ் பாடும் விழாவாக அமைந்தது, டைடல் பார்க் கட்டுவது சிறுவர் பூங்கா அமைப்பது போல அல்ல, அனைத்து கட்டமைப்புகளையும் உள்ளடக்கி டைடல் பார்க் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்வு செய்யப்பட்ட இடம், பல காலமாக பாறைக்குழி போன்று உள்ளது.
    • டெண்டர் விடப்பட்டு 3 மாதமாகியும் ஆரம்பக்கட்ட பணி கூட துவங்காமல் இருந்தது.

    அவிநாசி :

    தமிழகத்தில் திருப்பூர், வேலூர், தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ராக்கியபாளையத்தில் 39 கோடி மதிப்பில் 7 அடுக்கில் மினி டைடல் பார்க் கட்ட அரசு புறம்போக்கில் இருந்த 2 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, பணி துவக்க டெண்டரும் விடப்பட்டது.

    தேர்வு செய்யப்பட்ட இடம், பல காலமாக பாறைக்குழி போன்று உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆண்டுக்கணக்கில் அங்கு தேங்கியுள்ளது. அந்த கழிவுநீரை முற்றிலும் வெளியேற்றினால் தான் கட்டுமானப் பணி துவக்க முடியும் என்ற நிலையில், அதற்கான வழி தெரியாமல் கட்டுமான நிறுவனத்தினர் திணறி வந்தனர்.

    இதனால் டெண்டர் விடப்பட்டு 3 மாதமாகியும் ஆரம்பக்கட்ட பணி கூட துவங்காமல் இருந்தது.அந்த இடத்தை பார்வையிட்ட டைடல் பார்க் தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள், மாநிலத்தின் பிற இடங்களில் கட்டுமானப்பணி துவங்கி வேகமாக நடந்து வரும் நிலையில் இங்கு ஆரம்பக்கட்ட பணி கூட துவங்கப்படாமல் இருப்பது சரியல்ல என அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்தநிலையில் தேங்கியிருந்த கழிவுநீர் அங்குள்ள வி.ஜி.வி., கார்டன் குடியிருப்புகளின் இடையே உள்ள வடிகால் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் கடும் துர்நாற்றம் எழுந்ததால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்து கழிவுநீரை வெளியேற்ற ஆட்சேபனை தெரிவித்தனர்.திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன், நகராட்சி தலைவர் குமார், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் மக்களை சமாதானப்படுத்தினர்.

    டைடல் பார்க் கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனத்தினர் கூறுகையில், கட்டுமானப் பணி மேற்கொள்ள உள்ள இடத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றினால் தான் அந்த இடத்தின் வடிவமைப்பை தெளிவாக அறிந்துக் கொள்ள முடியும். அதன் பின்னரே கட்டுமானப் பணிக்கான வடிமைப்பு இறுதி செய்யப்படும் என்றனர்.

    • திருமுருகன்பூண்டியில் 1.77 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை ஒதுக்கியுள்ளது.
    • டைடல் பார்க் திட்ட செயல் இயக்குனர் குமார் நேரில் வந்து அத்திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி சென்றார்.

    திருப்பூர் :

    தமிழக அரசு தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், டைடல் பார்க்உருவாக்கி வருகிறது. சென்னையில் நடந்த விழாவில் திருப்பூரில் டைடல் பார்க் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.இதற்காக அவிநாசி தாலுகா திருமுருகன்பூண்டியில் 1.77 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை ஒதுக்கியுள்ளது.

    டைடல் பார்க் வளாகம், தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன், 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைகிறது.அதற்கான ஆயத்த பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. டைடல் பார்க் துவங்கப்பட்டால், அது திருப்பூரின் வளர்ச்சிக்கு மேலும் வித்திடும் என்கின்றனர் தொழில்துறையினர்.

    கலெக்டர் வினீத் கூறுகையில், முதல்வர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, டைடல் பார்க் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் 1.77 ஏக்கர் நிலம் ஒதுக்கியிருந்தது. டைடல் பார்க் திட்ட செயல் இயக்குனர் குமார் நேரில் வந்து அத்திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி சென்றார். டைடல் பார்க் அமைவதன் மூலம் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப்பெற முடியும் என்றார்.

    ×