என் மலர்
நீங்கள் தேடியது "பரிசோதனை"
- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சித்துறையின் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
- இதில் 400-க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சி துறையின் சார்பில் அரசு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது. வட்டார அளவிலான அரசு அலுவலர்கள், ஊராட்சி அளவிலான பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த முகாமில் பங்கேற்றனர். சிங்கம்புணரி யூனயின் துணைத்தலைவர் சரண்யா ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். துணை இயக்குநர்கள் ராஜசேகரன், விஜயசந்திரன், ஒன்றிய கவுன்சிலர் உதயசூரியன் பெரிய கருப்பி முத்தன், சிவபுரிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி திரவியம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், லட்சுமணராஜ், முதன்மை மருத்துவ அலுவலர் அயன்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட விரிவாக்க கல்வியாளர் மதியரசு, துணை இயக்குநர் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சாகுல் அமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 400-க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர்கள் செந்தில்குமார், முத்தமிழ் செல்வி, செந்தில், சித்தா மருத்துவர் சரவணன், எஸ்.புதூர் மருத்துவ அலுவலர் சினேகா, நெற்குப்பை மருத்துவர் இளவதனா ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
- பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகளை வழங்கப்பட்டது.
- முகாமில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்தி ற்குட்பட்ட விக்ரமம் ஊராட்சியில் ஐடிஎப்சி பர்ஸ்ட் பாரத் நிறுவனம் சார்பில் தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் மருத்துவர் குருநாதன் தலைமை தாங்கினார்.
தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பயனாளிகளக்கு ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, இசிஜி பரிசோதனை செய்து , மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்.
இதில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
முகாமில் முகாம் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், ஐடிஎப்சி பஸ்ட் பாரத் நிறுவனத்தின் மேலாளர் ஜான்பால் அசோக், சந்துரு கிளை மேலாளர் ஏசுராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் மற்றும் ஊராட்சி செயலாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மதுக்கூர் ரோட்டரி சங்கர் சார்பில் முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.
- வேளாண்மையில் தரமான விதைகளை தேர்வு செய்து விதைப்பது அவசியம். இதற்கு விதை பரிசோதனை செய்யப்பட்ட சான்றளிக்கப்பட்ட விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.
- விதைக்கும் முன் முளைப்பு திறன் பரிசோதனை செய்து தேர்ச்சி பெற்ற விதைகளை விதைத்தால் அதிக மகசூல் பெறலாம்.
ஈரோடு:
வேளாண்மையில் தரமான விதைகளை தேர்வு செய்து விதைப்பது அவசியம். இதற்கு விதை பரிசோதனை செய்யப்பட்ட சான்றளிக்கப்பட்ட விதைகளை தேர்வு செய்ய வேண்டும். விதைக்காக சேமிக்கப்பட்ட விதைகள் தரமானதா? என்பதை பரிசோதனை செய்து சேமித்து வைத்தல் அவசியமாகும்.
இதன்படி ஆடிப்பட்டத்துக்கு தானிய பயிர்களை விதைக்கும் விவசாயிகள், நெல் பயிரில் ஐ.ஆர்.20, கோ–43, கோ–51, ஏ.டீ.டி.36, ஏ.டீ.டி.53, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, சி.ஆர்.1009 (சாவித்ரி), வி.ஜி.டி.1 ரகங்கள், மக்காசோளத்தில், கோ–6, கோ (எச்.எம்.,) 7, கோ (எச்.எம்.)8 ரகங்கள், சோளத்தில் கோ(எஸ்)8, கோ–30, பி.எஸ்.ஆர்.1, பையூர் 2 ரகங்கள், கம்பில் கோ– 7, கோ (சி.யூ.)9 போன்ற ரகங்களை இருப்பு வைத்துள்ள விவசாயிகள், விற்பனையாளர்கள், விதைக்கும் முன் முளைப்பு திறன் பரிசோதனை செய்து தேர்ச்சி பெற்ற விதைகளை விதைத்தால் அதிக மகசூல் பெறலாம்.
விதை பரிசோதனைக்கு நெல்–50 கிராம், மக்காசோளம்– 500 கிராம், சோளம் –100 கிராம், கம்பு– 25 கிராம், ராகி– 25 கிராம், பாகல் மற்றும் புடலை 250 கிராம், பூசணி, சுரைக்காய், வெண்டை, தர்பூசணி– 100 கிராம், தக்காளி, காலிபிளவர், கத்தரி, வெங்காயம், முட்டைகோஸ், நுால்கோல், முள்ளங்கி, மிளகாய் – தலா, 10 கிராம் என வழங்க வேண்டும்.
வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஆனுார் கம்மன் காம்ப்ளெக்ஸ், 2-ம் தளம், 68 வீரபத்திர வீதி, சத்தி சாலை, ஈரோடு–-3 என்ற முகவரிக்கு விதைகளை அனுப்ப வேண்டும் என விதை பரிசோதனை அலுவலர் கேட்டு கொண்டார்.