search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பதியினர்"

    • ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
    • மகனின் நோயை தீர்க்க முடியாத அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 40). எம்.இ., பி.எல். பட்டதாரி. இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெ னியில் பணியாற்றி வந்தார். இவருக்கும், தக்கலை மணலி பகுதியை சேர்ந்த சைலஜா என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஜீவா (7) என்ற மகன் இருந்தார்.

    பெங்களூரில் வசித்து வந்த தம்பதியர் கடந்த 3 வருடங்களுக்கு முன் தக்கலை யில் ஒரு வாடகை வீட்டில் குடிபெயர்ந்த நிலையில் மணலி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறி யுள்ளனர். முரளிதரனும் ஐ.டி. கம்பெனி பணியை விட்டு விட்டு நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பணி யாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று இவர்களது வீட்டுக் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

    இதையடுத்து சைலஜாவின் தந்தை கோபால் மகளை கூப்பிட்டு பார்த்தார். ஆனா லும் கதவு திறக்காத நிலையில் சந்தேகமடைந்த அவர் கத வின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மருமகன் முரளிதரன் வீட்டின் ஹாலில் மின் விசிறி யில் தூக்கிட்ட நிலையிலும், மகள் சைலஜா மற்றொரு அறையில் தூக்கிட்ட நிலையிலும் காணப்பட்டனர். பேரன் ஜீவா முகத்தில் பாலித்தீன் கவர்கள் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் பிணமாக கிடந்துள்ளான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கோபால், தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    தகவல் அறிந்து துணை சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட முரளிதரன் எம்.இ., பி.எல். முடித்து பெங்களூரில் ஐ.டி. கம்பெனி யில் பணியாற்றி வந்தார்.

    திருமணத்துக்கு பிறகு மனைவி சைலஜா உடன் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்களாக குழந்தை இல்லாத நிலை இருந்தது. அதன்பிறகு மகன் பிறந்தான். அவனுக்கு ஜீவா என்று பெயரிட்டு பாசத்துடன் வளர்த்துள்ளனர்.

    முதலில் ஆரோக்கியமாக இருந்த குழந்தை ஜீவா பின்னர் மெல்ல மெல்ல ஆட்டிசம் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படு கிறது. இந்த நோய்க்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்த முரளிதரன் மனைவி யின் சொந்த ஊரான தக்க லைக்கு குடி பெயர்ந்துள்ளார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன் சொந்தமாக புதிய வீடு கட்டி குடியேறிய முரளிதரன்-சைலஜா தம்பதியருக்கு மகன் ஆட்டிசம் குறைபாடு நோயால் பாதிப்படைந்தது மன வேதனையை ஏற்படுத்தியது. பணம் இருந்தும் மகனின் நோயை தீர்க்க முடியாத அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

    இந்த நிலையில் தான் மனமுடைந்த தம்பதியர் முதலில் மகன் ஜீவாவிற்கு அவரது நோய்க்காக மருத்து வர்களால் வழங்கப்பட்ட டானிக் மருந்தை அதிக அளவில் கொடுத்து மயக்க மடைய செய்து அவரது முகத்தை பாலித்தீன் கவரால் கட்டி கட்டிலில் போட்டு விட்டு முரளிதரன் வீட்டில் ஹாலில் மின் விசிறியிலும், சைலஜா அறையில் தனது மகன் கட்டிலில் கிடந்த அந்த அறையிலேயே மின் விசிறியி லும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீ சார் விசாரணையில் தெரிய வந்தது. தற்கொலை செய்த 3 பேரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரி யில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராள மானோர் அங்கு திரண்டு உள்ளனர்

    • தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் ரெயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
    • 23 பேரிடம் தலா ரூ.4லட்சம் வீதம் ரூ.92 லட்சம் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் 23 பேருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

    நாகர்கோவில், ஆக.28-

    இரணியல் அருகே உள்ள ஆளூர் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி ஜமுனா (வயது 47).இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறி யிருப்பதாவது:-

    எனக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில் வில்லுக்குறி குதிரை பந்தவிளை பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (29), அவரது மனைவி நிஷா வருணி (26) ஆகியோர் எனது வீட்டின் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.அப்போது அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.

    ராம்குமார் ரெயில்வே அதிகாரி என்றும், நிஷா வருணி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்ப்பதாகவும் தெரிவித்தனர். ராம்குமார் தனக்கு ரெயில்வே துறையில் பல அதிகாரிகளை தெரியும் என்று கூறினார்.தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் ரெயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து எனது உறவினர்கள் உறவினர் ஒருவரிடம் ரூ.4 லட்சம் வாங்கி கொடுத்தேன். இதே போல் 23 பேரிடம் தலா ரூ.4லட்சம் வீதம் ரூ.92 லட்சம் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் 23 பேருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவானார்கள். எனவே அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராம்குமார், நிஷா பரணி மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தினார்கள்.விசாரணை யில் பல திடுக்கிடும் தக வல்கள் வெளியானது.

    ராம்குமார், நிஷா வருணி தம்பதியினர் பொது மக்களிடம் நெருங்கி பழகி வந்துள்ளனர். ராம்குமார் ெரயில்வே அதிகாரி என்றும் நிஷாவருணி டாக்டர் எனவும் கூறியுள்ளனர். 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் இருந்து அவர்கள் மோசடியை தொடங்கி யுள்ளனர். ெரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பொது மக்களிடம் ஏமாற்றி பணம் வாங்கியது தெரிய வந்துள்ளது.

    குமரி மாவட்டம் மட்டு மின்றி கோயம்புத்தூரிலும் பொதுமக்களிடம் பணம் வாங்கி ஏமாற்றி உள்ளனர். குமரி மாவட்டத்தில் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியதை யடுத்து இவர்கள் கடந்த ஆண்டு கோயம்புத்தூருக்கு சென்றுள்ளனர்.

    கோயம்புத்தூரில் 7 மாத காலமாக இருந்துள் ளனர். அங்கு உள்ள மக்களிடமும் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் டாக்டர் என்று கூறி சிகிச்சை அளித்ததில் சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இரு வரும் பண மோசடியில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட ராம்குமார், நிஷாவருணி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி னர். பின்னர் ராம்குமார் நாகர்கோவில் ஜெயிலி லும், நிஷாவருணி தக்கலை ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவர் மீதும் மேலும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 376 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 285 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • தீர்வு தொகையாக ரூ.87,93,151 வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் பல்லடத்தில் மக்கள் நீதிமன்றம் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 376 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 285 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது தீர்வு தொகையாக ரூ.87,93,151 வழங்கப்பட்டது. இதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்த மெரின் ரம்சானா- நித்திய பிரகாஷ் தம்பதியினரிடம் குடும்ப வன்முறை குறித்த வழக்கில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.இதில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதித்ததையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டு நீதிபதிகள் முன்னிலையில் கருத்து வேறுபாடால் பிரிந்த இளம் தம்பதிகள் மீண்டும் குடும்ப வாழ்வில் இணைந்தனர்.

    • 159 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 76 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • தம்பதியினர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் பல்லடத்தில் மக்கள் நீதிமன்றம் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 159 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 76 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது .தீர்வு தொகையாக ரூ.70,88,492 வழங்கப்பட்டது. இதில் பல்லடத்தை சேர்ந்த இளம் தம்பதியினர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். குடும்ப வன்முறை குறித்த வழக்கில் தம்பதியினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்ததையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டு நீதிபதிகள் முன்னிலையில் கருத்து வேறுபாடால் பிரிந்த இளம் தம்பதிகள் மீண்டும் குடும்ப வாழ்வில் இணைந்தனர்.

    ×