என் மலர்
நீங்கள் தேடியது "மின் கட்டணம்"
- வீட்டு வரி செலுத்தியவர்களிடம் மட்டுமே மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று திண்டியூர் ஊராட்சி தலைவர் லட்சுமி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
- இதன் மூலம் ஊராட்சிகளுக்கு வசூலிக்க வேண்டிய வீட்டு வரி சரியாக வசூலாகிவிடும். ஊராட்சியும் சிறப்பாக செயல்படும்.
மதுரை
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திண்டியூர் ஊராட்சி தலைவராக இருப்பவர் லட்சுமி சந்திரசேகர். இவர் இப்பகுதி வாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வழங்கி வருவதுடன் தொலைநோக்கு சிந்தனையுடன் பல திட்டங்க ளையும் இப்பகுதிகளில் நிறைவேற்றி யுள்ளார்.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் திண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தங்களது சொந்த செல வில் ஆசிரியர்களை தேர்வு செய்து வீடுகளில் முடங்கி கிடக்கும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் வீடுகளுக்கே சென்று கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும் மாணவ- மாணவி களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வாங்கி தந்தும் ஆசிரியர்களுக்கு தங்களது சொந்த செலவில் சம்பளம் வழங்கியும் சேவை செய்திருந்தார்.
எனவே இதுபோன்று தொலைநோக்கு சிந்தனை யுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் சாதனைகளை செய்து வந்த லட்சுமி சந்திரசேகர் சமீபத்தில் திண்டியூர் ஊராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணியினை அரசு உத்தரவு பணி செயல்படுத்தினார். அப்போது அரசு நிர்ணயித்த தொகை ரூ.20 லட்சம் போக தனது சொந்த பணம் ரூ.13 லட்சத்தை அலுவலகத்துக்கு செலவு செய்து அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பாராட்டை பெற்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஊராட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சித் தலைவர் லட்சுமி சந்திரசேகர் ஊராட்சியில் வீட்டு வரி, தொழில்வரி, குழாய் வரி போன்ற வரிகளை வசூலிக்க பெரும் சிரமம் ஏற்படுகிறது என்றும், சில வீடுகளில் கணவன்-மனைவி இருவரும் அரசு மற்றும் தனியார் வேலை களில் உள்ளதால் வேலை நாட்களில் ஊராட்சி பணியாளர்கள் வரி வசூலிக்க முடியவில்லை என்றும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வீட்டின் உரிமையாளர்கள் வரி செலுத்த நினைத்தாலும் அவர்களாலும் வரி செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது நிருபர்களிடம் கூறியதாவது:-
இது போன்று வரிப்பாக்கிகளை வசூலிக்க ஒரு அருமையான வழி உள்ளது. அரசு தற்போது வீட்டு வரியை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம் என்ற உத்தரவு பிறப்பித்த நிலையில் மக்கள் வீட்டு வரி, குழாய் வரி ஏன் மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள் பாதாள சாக்கடை வரி மற்றும் வருமான வரி போன்றவைகளை பாக்கி வைத்துள்ளனர். ஆனால் யாரேனும் மின்சார வரியை பாக்கி வைத்திருக்கி றார்களா? என்றால் இல்லை.
எனவே மக்களுக்கு அவசியம் தேவைப்படுவதி னால் மின்சார வரியை மட்டும் சரியாக செலுத்துகிறார்கள் என்ப தால் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வீட்டு வரிகளே செலுத்திய நபர்களுக்கு தான் ஏப்ரல் மாதம் மின்சார கட்டணம் வசூலிக்க வேண்டும். அப்படி வீட்டு வரி உள்ளிட்ட பிற வரிகளை செலுத்தாத நபர்களுக்கு மின் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும்.
மின் கட்டணம் செலுத்த வில்லை என்றால் மின்சாரம் தடைபடும் என்பதால் மக்கள் வீட்டு வரி உள்ளிட்ட பல வரி களை சரியாக செலுத்தி விடுவார்கள். இதன் மூலம் ஊராட்சிகளுக்கு வசூலிக்க வேண்டிய வீட்டு வரி சரியாக வசூலாகிவிடும். ஊராட்சியும் சிறப்பாக செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.45,225 இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தியுள்ளார்.
- மின்வாரிய கணக்கிற்கு தொகை சென்று விட்டதாக தெரிவித்தனர்.
பல்லடம் :
பல்லடம் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த நூல் மில் உரிமையாளர் விஸ்வநாதன் .இவர் தனது மில்லுக்கு பயன்படுத்திய மின்சாரத்திற்கு கட்டணம் ரூ.45.225யை ஜனவரி மாதம் 20 ந்தேதிக்குள் செலுத்த மின்சார வாரியம் அறிவுறுத்தி இருந்தது. இந்தநிலையில் கடந்த ஜனவரி 19ந்தேதி அன்று ரூ.45,225 இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் மின்வாரிய இணையத்தளத்தில் பணம் வரவு ஆகவில்லை.
இதையடுத்து வங்கியில் கேட்டபோது, இணையதள சர்வர் கோளாறு, அதனால் பணம் வரவாகவில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து நேரடியாக மின்வாரிய அலுவலகம் சென்று மின் கட்டணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் வங்கி நிர்வாகத்திடம் தான் கட்டிய பணத்தை திரும்பப் பெற புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் மின்வாரிய கணக்கிற்கு தொகை சென்று விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மின்வாரிய அலுவலகத்தில் தான் இருமுறை மின் கட்டணத்தை செலுத்தியது குறித்தும், தனது பணத்தை திரும்பப் தரக்கோரி ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மின்வாரிய அதிகாரிகள், இங்குள்ள மின்வாரிய கணக்குகளில் உங்களது பணம் வரவாகவில்லை.
சென்னை தலைமை அலுவலகத்தை கேட்டு விவரம் சொல்கிறோம் என கூறியதாக கூறப்படுகிறது. மின் கட்டணத்தை முறையாக செலுத்தியும், வீண் அலைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடி நடவடிக்கை எடுத்து தனது பணத்தை திரும்பத் தர வேண்டும் என்று மில் உரிமையாளர் மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
- சுமார் 2 லட்சம் பேர் இன்னும் இணைக்கவில்லை.
- இன்றைக்குள் இணைக்காவிட்டால், மின்கட்டணம் செலுத்தமுடியாது.
சென்னை :
தமிழ்நாட்டில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்றுவருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் மின் பயனாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க அரசு உத்தரவிட்டிருந்தது.
இதற்காக, மின்கட்டணம் செலுத்தும் அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலை மின்சாரம் பயன்படுத்துவோர் 2 கோடியே 67 லட்சம் பேர் உள்ளனர்.
இவர்களில் நேற்று முன்தினம் வரை 2 கோடியே 65 லட்சம் பேர், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்த்துவிட்டனர்.
சுமார் 2 லட்சம் பேர் இன்னும் இணைக்காத நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க அரசு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஏற்கனவே, 3 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டதால், மேற்கொண்டு வழங்கப்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே கூறிவிட்டார்.
இன்றைக்குள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால், மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் வழியாக ஆதார் எண்ணை இணைத்தவர்கள் சிலருக்கு, ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்று குறுந்தகவல் சென்றுள்ளது. எனவே, உடனடியாக அவர்கள் மீண்டும் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும்.
இதேபோல், வீட்டு உரிமையாளர் அனுமதியின்றி வேறு ஒருவரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததால், அதையும் சரி செய்யும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
- இரு மாதங்களுக்கு ஒரு முறை 2 கோடி பேர் மின் கட்டணம் செலுத்துகின்றனர்.
- 95 லட்சம் பேர் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துகின்றனர்.
திருப்பூர் :
மின் கட்டணத்தை வசூல் மையங்கள், அரசு, இ - சேவை மையங்களில் ரொக்க பணம், காசோலை, வரைவோலையில் செலுத்தலாம். அவற்றில் அலுவலக நேரத்தில் மட்டுமே செலுத்த முடியும்.மின் வாரிய இணையதளம், செல்போன் செயலி, பாரத் பில் பே போன்ற டிஜிட்டல் முறையில் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தலாம்.
மொத்தம் உள்ள 3.40 கோடி மின் நுகர்வோர்களில், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட இலவச திட்ட பயனாளிகள் போக, இரு மாதங்களுக்கு ஒரு முறை 2 கோடி பேர் மின் கட்டணம் செலுத்துகின்றனர். அதில் 95 லட்சம் பேர் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தற்போது பல்பொருள் அங்காடி முதல் தள்ளுவண்டி காய்கறி கடை வரை, கூகுல் பே போன்ற டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கப்படுகிறது.எனவே அனைத்து மின் நுகர்வோர்களிடம் இருந்தும், டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் எப்படி கட்டணம் செலுத்துவது என்பது தொடர்பாக பிரிவு அலுவலகங்கள், மின் கட்டண மையங்களில் விளம்பரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதனால் கட்டண மையங்களுக்கு வந்து நுகர்வோர்கள் சிரமப்பட வேண்டியதில்லைங வசூல் பணமும் உடனே மின் வாரிய வங்கி கணக்கில் சேர்ந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வங்கி நிர்வாகத்திடம் தான் கட்டிய பணத்தை திரும்பப் பெற புகார் அளித்துள்ளார்.
- மில் உரிமையாளர் விஸ்வநாதன் கட்டிய தொகை ரூ.45.225 மீண்டும் அவருக்கு திரும்ப கிடைத்தது.
பல்லடம் :
பல்லடம் பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நூல் மில் உரிமையாளர் விஸ்வநாதன். இவர் தனது மில்லுக்கு பயன்படுத்திய மின்சாரத்திற்கு கட்டணம் ரூ.45.225யை ஜனவரி மாதம் 20 ந்தேதிக்குள் செலுத்த மின்சார வாரியம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரி19ந்தேதி அன்று ரூ.45,225 இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் மின்வாரிய இணையத்தளத்தில் பணம் வரவு ஆகவில்லை.
இதையடுத்து வங்கியில் கேட்டபோது, இணையதள சர்வர் கோளாறு அதனால் பணம் வரவாகவில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து நேரடியாக மின்வாரிய அலுவலகம் சென்று மின் கட்டணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் வங்கி நிர்வாகத்திடம் தான் கட்டிய பணத்தை திரும்பப் பெற புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் மின்வாரிய கணக்கிற்கு தொகை சென்று விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மின்வாரிய அலுவலகத்தில் தான் இருமுறை மின் கட்டணத்தை செலுத்தியது குறித்தும், தனது பணத்தை திரும்பத் தரக்கோரி ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.புகாரை பெற்றுக் கொண்ட பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவகர், பல்லடம் வட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு ) அரி பாஸ்கர், ஆகியோர் இது குறித்து நடவடிக்கை எடுத்து, மில் உரிமையாளர் விஸ்வநாதன் இணையதளத்தில் செலுத்தப்பட்ட மின் தொகையை திரும்ப அவரது வங்கி கணக்கிற்கு செலுத்த நடவடிக்கை எடுத்தனர்.இதையடுத்து மில் உரிமையாளர் விஸ்வநாதன் கட்டிய தொகை ரூ.45.225 மீண்டும் அவருக்கு திரும்ப கிடைத்தது.
- அத்தியாவசிய சேவை வழங்கும் அரசுத்துறைகள் தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் இதர அரசுத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தெருவிளக்கு, குடிநீர் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகளுக்கு 7 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்துமாறு நோட்டீசு அனுப்ப வேண்டும்.
சென்னை:
சென்னையில் மின் வாரிய உயர் அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மின்வாரிய செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மின்வாரிய தலைவர் வழங்கிய அறிவுறுத்தல்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள மின்வாரியம் முடிவெடுத்துள்ளது.
இதன்படி அத்தியாவசிய சேவை வழங்கும் அரசுத்துறைகள் தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் இதர அரசுத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெருவிளக்கு, குடிநீர் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகளுக்கு 7 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்துமாறு நோட்டீசு அனுப்ப வேண்டும் என்றும் இந்த பணிகளை இன்றைய தேதிக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்கள் மின்வாரிய துணை நிதி கட்டுப்பாட்டாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த சில மாதங்களாக 500, 700 ரூபாய் என சொற்ப அளவிலேயே மின் கட்டணம் வந்துள்ளது.
- ஒருவேளை அவர் தவறுதலாக வேறு மின் மோட்டாரை இயக்கி இருக்கலாம். இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்துகிறோம் என தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர், வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த ஊருக்கு திரும்பினார்.
தொடர்ந்து, விவசாயம் செய்யலாம் என முடிவு செய்து, லத்தேரி அடுத்த காளாம்பட்டு பகுதியில் 2 ஏக்கர் நிலம் வாங்கினார். இதையடுத்து, அங்கு விவசாயம் செய்வதற்காக இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், கிடைக்காததால் மும்முனை மின் இணைப்பு பெற்றார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக 500, 700 ரூபாய் என சொற்ப அளவிலேயே மின் கட்டணம் வந்துள்ளது. கடந்த மாதம் 8 யூனிட் மின்சாரம் மட்டுமே அவர் பயன்படுத்தி இருந்ததாக தெரிகிறது.
ஆனால் அவருக்கு 7,275 ரூபாய் மின் கட்டணம் செலுத்தவேண்டும் என அறிவிப்பு வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து லத்தேரி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அவர் கேட்ட போது, அங்கிருந்த ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை அதுமட்டுமின்றி.
பணத்தை செலுத்தியே ஆகவேண்டும் என திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதனால் செய்வதறியாது தவித்த சுந்தர்ராஜன், குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தியதற்கு அதிக கட்டணம் செலுத்த கூறியதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், மெத்தனமாக பதிலளிக்கும் மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் விசாரித்தபோது, விவசாய தேவைக்கு அனுமதி பெறும்போது மின் மோட்டாரின் வேகத்தை 5 எச்பி, 10 எச்பி என குறிப்பிட்டிருப்பார்கள்.
பிறகு அதை மாற்றி பயன்படுத்தினால் மின்பளு அதிகரிக்கும். அதற்கான கட்டணத்தை டிஜிட்டல் மீட்டர் தானாகவே பதிவு செய்துவிடும்.
ஒருவேளை அவர் தவறுதலாக வேறு மின் மோட்டாரை இயக்கி இருக்கலாம். இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்துகிறோம்' என தெரிவித்தனர்.
- பொங்கலூர் பிரிவு அலுவலகத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் மார்ச் மாதத்தில் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.
- மின் கட்டணம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செலுத்தும் பட்சத்தில் எதிர்வரும் மே மாத மின் கட்டணத்தில் சரி செய்யப்படும்.
பல்லடம் :
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பல்லடம் பகிர்மான வட்டத்தின் செயற்பொறியாளர் ஜி.ரத்தினகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்சாரவாரிய கிராமியம் பொங்கலூர் பிரிவு அலுவலகத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த (மார்ச்) மாதத்தில் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. எனவே கிராமியம் பொங்கலூர் பிரிவு அலுவலகத்தைச் சார்ந்த கெங்கநாயக்கன்பாளையம் பகிர்மானம் மின் நுகர்வோர்கள் கடந்த ஜனவரி மாதம் செலுத்திய மின்கட்டணத்தையே செலுத்தலாம். மின் கட்டணம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செலுத்தும் பட்சத்தில் எதிர்வரும் மே மாத மின் கட்டணத்தில் சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் சைபர் குற்றத்தில் சிக்கி ரூ. 7 லட்சம் வரை இழந்துள்ளார்.
- மின்துறையில் இருந்து குறுந்தகவல் அனுப்புவது போல் மோசடி பேர்வழிகள் மும்பை பெண்மணியை ஏமாற்றியுள்ளனர்.
மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்த 65 வயது பெண்மணி சைபர் ஊழலில் சிக்கி ரூ. 7 லட்சம் வரை இழந்துள்ளார். மின் கட்டணத்தை செலுத்தவில்லை என பெண்மணிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதற்கு பதில் அளித்த பெண்மணி ஹேக்கர்களிடம் சிக்கி, தனது பணத்தை இழந்திருக்கிறார்.
மின் கட்டணம் செலுத்தவில்லை என ஹேக்கர்கள் அனுப்பிய குறுந்தகவலை நம்பி, அவர்களை பாதிக்கப்பட்ட பெண் தொடர்பு கொண்டிருக்கிறார். மறுபுறம் பெண்மணிக்கு பதில் அளித்த ஹேக்கர்கள் பெண்ணின் கணினியில் டீம் வியூவர் (வேறொரு இடத்தில் இருந்தபடி மற்றவர் கணினியை இயக்கச் செய்யும் சேவை) எனும் செயலியை இன்ஸ்டால் செய்யக் கூறி இருக்கின்றனர்.

இதை கேட்ட பெண், ஹேக்கர்களிடம் தனது கணினியை பயன்படுத்த அனுமதித்துள்ளார். இவ்வாறு செய்த சிறிது நேரத்தில், பெண்மணியின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் எடுக்கப்பட்டதை கூறும் நோட்டிஃபிகேஷன்கள் வந்துள்ளது. இதை பார்த்த பெண்மணி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இருக்கிறார்.
வங்கி பரிவர்த்தனைகள் குறித்து எஸ்பிஐ வங்கியை சேர்ந்த குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்தேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின் கட்டண பாக்கி இருப்பதை கூறும் எஸ்எம்எஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மொபைல் போனிற்கு வந்துள்ளது. இவ்வாறு வந்த எஸ்எம்எஸ்-இல் பணத்தை திரும்பி செலுத்த தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் நம்பர் இடம்பெற்று இருக்கிறது. இதில், மின் கட்டண பாக்கியை செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக அந்த பெண் எஸ்எம்எஸ்-இல் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்தே ஹேக்கர்கள் நூதனமாக பேசி பெண்ணிடம் இருந்து அவரின் கணினியை பயன்படுத்தும் வசதியை பெற்றுள்ளனர். இவ்வாறு செய்த பின் பாதிக்கப்பட்ட பெண்ணின் வங்கியில் இருந்து ரூ. 4 லட்சத்து 62 ஆயிரத்து 959, ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 89 ஆயிரம் பரிவர்த்தனைக்கான எஸ்எம்எஸ் வந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ந்து போன பெண் உடனே எஸ்பிஐ வங்கியை தொடர்பு கொண்டு மோசடி பரிவர்த்தனைகள் பற்றி புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அந்தேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் பலருக்கு நடந்துள்ளன. இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- விசைத்தறிக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டண த்தை, தமிழக அரசு 50 சதவீதம் குறைந்தது
- முதல் 1,000 யூனிட் வரை இலவச மின்சார சலுகையையும் அளித்தது.
மங்கலம் :
தவணை முறையில் மின் கட்டணத்தை செலுத்த அனுமதி வழங்க கோரி அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விசைத்தறி யாளர்கள் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.
விசைத்தறிக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டண த்தை, தமிழக அரசு 50 சதவீதம் குறைந்தது. முதல் 1,000 யூனிட் வரை இலவச மின்சார சலுகையையும் அளித்தது. இந்நிலையில் நிலுவை யில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த தவணை கேட்டும், மின் கட்டணத்துக்கான அபராத தொகையை ரத்து செய்ய கோரியும், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டு ள்ளனர்.அங்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, மின்வா ரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி ஆகி யோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.கூட்டமை ப்பு நிர்வாகிகள் கூறுகையில், ஒவ்வொரு விசைத்தறி குடோன்களுக்கும் 3 முதல்4 மின் கட்டண பில்கள் வந்து ள்ளன. அவற்றை தவணை முறையில் கட்ட அனுமதி கேட்டும், அபராத தொகையை ரத்து செய்ய வலியுறுத்தியும் அமைச்சரை சந்தித்து மனு அளித்து ள்ளோம் என்றனர்.
- மின் கட்டண உயர்வை கண்டித்து கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் வருகிற 20-ந் தேதி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடக்கிறது.
- அரசு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டுமென கப்பலூர் தொழிலாளர்கள் சிட்கோ சங்கத்தலைவர் ரகுநாதராஜா தெரிவித்துள்ளார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சிட்கோ தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. பல ஏக்கரில் உள்ள இந்த தொழிற் பேட்டையில் 500-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்து அங்கிருந்து விற்ப னைக்கு அனுப்பி வைக்கின்றன. இந்த சிட்கோ மூலம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் அண்மையில் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது மாநிலம் முழுவதும் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் நிலங்களை ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி குத்தகைக்கு விடாமல் புதிதாக 99 ஆண்டுகளுக்கு குத்தகை அல்லது வாடகைக்கு விட முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும் சிட்கோவில் இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கான நிலையான மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கண்ட 2 முடிவுகளுக்கும் சிட்கோ தொழிலதிபர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேற்கண்ட உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கையும் வைக்கப் பட்டது. ஆனால் தமிழக அரசு இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க வில்லை.
இதனை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) சிட்கோ தொழிற்பேட்டைகளில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கப்பலூரில் உள்ள சிட்கோ தொழிற் பேட்டையிலும் உற்பத்தி நிறுத்த போராட்டம் அன்றைய நாளில் நடைபெறுகிறது. அப்போது கோரிக்கைகள் தொடர்பாக மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டுள்ளது.
எனவே அரசு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டுமென கப்பலூர் தொழிலாளர்கள் சிட்கோ சங்கத்தலைவர் ரகுநாதராஜா தெரிவித்துள்ளார்.
- மக்களுக்கு நல்லது செய்வது போல் இலவச மின்சாரம், மானிய மின்சாரம் என்று கட்டுக்கதைகள் பல சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.
- அரசியல்வாதிகளின் கூட்டு இல்லாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்திருக்க வாய்ப்பே இல்லை.
சென்னை:
தமிழக பா.ஜனதா துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செளத் இந்தியா கார்ப்பரேசன் என்ற நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் கடந்த பல வருடங்களாக மோசடி செய்து வந்து உள்ளது. இரு அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில் தெரிய வந்து உள்ளது. நிலக்கரி கையாள்வதில் இதுவரை 360 கோடி ரூபாய் மதிப்புள்ள நிரந்தர வைப்பு தொகையை அமலாக்கத்துறை முடக்கி உள்ள நிலையில், மேலும் 1000 கோடி ரூபாய் மோசடி நடந்து இருக்கும் என சொல்லப்படுகிறது.
தொகையோடு இதற்கான வட்டியை சேர்த்தால் மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழலின் மதிப்பு உயரும்.
மேற்கண்ட இரு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் சேர்ந்து 2001 முதல் மக்கள் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். பல அரசு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு இருந்தாலும், அரசியல்வாதிகளின் பின்புலன் இல்லாமல் இவை தொடர்ந்திருக்க சாத்தியமே இல்லை. தமிழகம் ஊழலில் மூழ்கி திளைத்திருக்கிறது என்று நாம் தொடர்ந்து கூறிய போதெல்லாம் 'தமிழ், தமிழன், தமிழ்நாடு, மாநில சுயாட்சி' என்று உணர்வுகளை தூண்டிவிட்டு மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். மின் கட்டணம் ஏறும் போதெல்லாம் 'ஐயோ மக்களை துன்புறுத்துகிறார்களே' என்று நீலிக்கண்ணீர் வடித்தவர்கள்தான் கொள்ளையை அரங்கேற்றி கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை. தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதற்கும், அதன் காரணமாக மின் கட்டணம் அதிகளவில் உயர்ந்திருப்பதற்கும் காரணமான கொடியவர்கள் இந்த ஊழல்வாதிகள். ஆனால் தொடர்ந்து மக்களுக்கு நல்லது செய்வது போல் இலவச மின்சாரம், மானிய மின்சாரம் என்று கட்டுக்கதைகள் பல சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.
இலவசம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றாதீர்கள் என்று வலியுறுத்தியே மானியத்தை மக்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்த சொல்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு. ஆனால் அப்படி செய்தால் மக்கள் அரசு இலவசமாக கொடுப்பதை மறந்து விடுவார்கள் என்று எண்ணியே அதை செயல்படுத்த மறுக்கிறது மாநில அரசு. வெளிப்படைத்தன்மை ஏற்பட்டு விட்டால் தங்களின் ஊழல் குட்டு வெளிப்பட்டு விடும் என்பதாலேயே மத்திய அரசின் 'உதய்' மின் திட்டத்தில் மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு உதய் மின் திட்டத்தில் கொண்டு வந்துள்ளதற்கு காரணமே ஊழலை ஒழிக்கத்தான் என்பதை அறிந்து கொண்டே நாடகமாடி தமிழர்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றனர்.
அரசியல்வாதிகளின் கூட்டு இல்லாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இதன் பின்னணியில் உள்ள அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள், இடைத்தரகர்கள், தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள், தொழில் அதிபர் உள்ளிட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மொழி உணர்வை தூண்டிவிட்டு மக்களை ஏமாற்றும் மோசடி பேர்வழிகளை மக்கள் உணர்ந்தால் மட்டுமே இதுபோன்ற ஊழல்களை தடுத்து நிறுத்த முடியும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.