search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னிமலையில்"

    • குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்தது.
    • தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீ பரவாமல் தடுத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட அறச்சலூர் ரோட்டில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் உள்ள ஒரு குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.

    இந்த தீ விபத்தில் சில பொருட்கள் எரிந்துள்ளது.

    யாரோ புகை பிடிப்பதற்காக பற்ற வைத்த தீயை அணைக்காமல் சென்றதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    • அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டிருந்த செந்தில் முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செல்லச்சாமி மகன் செந்தில் முருகன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதைபோல் ஹாசனூர், ஈ.செட்டிபாளையம் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மது அருந்திய குற்றத்திற்காக வட மாநிலத்தை சேர்ந்த பிதான் குமார், ஈ.செட்டிபாளையம் தங்கராசு (36) பழையசூரிபாளையம் அருள்குமார் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    • தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

    சென்னிமலை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் உத்தரவின்படி சென்னிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    சென்னிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், துணைத்தலைவர் கவுந்தர்ராஜன், செயல் அலுவலர் ஜெயராமன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செவிலியர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து சீர் செய்தனர்.
    • 5 வகை உணவுடன் விருந்தும் நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதாரநிலையம், யாம் அறக்கட்டளை இணைந்து 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடத்தினர்.

    வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் நடந்த விழாவில் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் புடவை, தாம்பூலம், மஞ்சள், குங்குமம், கனி வகைகள் வழங்கப்பட்டது.

    விழாவில் செவிலியர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து சீர் செய்தனர். பின்பு 5 வகை உணவுடன் விருந்தும் நடந்தது. இதில் கர்ப்பிணி பெண்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத போது சுதாகரன் தூக்குபோட்டு கொண்டார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 42). தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    சுதாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும் கடந்த 2 வாரங்களாக இவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி கொண்டு இருந்துள்ளார். இதனால் கடன் தொல்லை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது சுதாகரன் தூக்குபோட்டு கொண்டார்.

    இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    ஆனால் செல்லும் வழியில் சுதாகரன் இறந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏ.ஐ.டி.யு.சி. விசைத்தறி மற்றும் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சென்னிமலை வட்டார சிறப்பு பேரவைக் கூட்டம், சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இந்த பேரவைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    ஏ.ஐ.டி.யு.சி. விசைத்தறி மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சென்னிமலை வட்டார சிறப்பு பேரவைக் கூட்டம், சங்க அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

    ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர் பொன்னுசாமி, கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் நாகப்பன், கட்டடத் தொழி லாளர் சங்க ஒன்றியத் தலைவர் ராஜ்குமார், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டக்குழு உறுப்பினர் பாபு உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

    சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். இந்த பேரவைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் சென்னிமலை வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான விசைத்தறி நெசவாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது கூலி மற்றும் போனஸ் கோரிக்கைகள் தொடர்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவிற்கும், சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தி யாளர்கள் சங்கத்திற்கும் கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட 3 ஆண்டு கால ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது.

    ஆகவே இந்த ஆண்டு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து வாழ்க்கை செலவுகள் கணிசமாக அதிகரி த்துள்ளதை கருத்தில் கொண்டு பின்வரும் கோரி க்கைகளை முன்வை ப்பதென ஏகமனதாக முடிவு செய்ய ப்பட்டது.

    அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் 2021, 2022-ம் ஆண்டுக்கான போனசாக அவர்கள் ஈட்டிய கூலியில் 25 சதவீதம் வழங்க வேண்டும். கூலி உயர்வாக தற்போது பெற்று வரும் கூலியில் 40 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.

    அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் தேசிய, பண்டிகை விடுமுறை நாட்கள் சட்டப்படி வருடத்திற்கு 9 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் வழங்க வேண்டும்.

    விசைத்தறி தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் மருத்துவ வசதி பெறும் வகையில் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்கான பிரீமியத் தொகையை விசைத்தறி உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கை கள் மீது உடன டியாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்தி, தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே போனஸ் வழங்க வேண்டும் என சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தி யாளர்கள் சஙகத்தை பேரவை கூட்டம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

    மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 12-ந் ேததி மாலை 4 மணிக்கு சென்னிமலையில் கோரிக்கை பேரணி - ஆர்ப்பாட்டம் நடத்துவ தென்று முடிவு செய்யப்பட்டது.

    சென்னிமலை பி.ஆர்.எஸ்.ரோடு சங்க அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. மேலும் 12-ந் தேதி மதியத்திற்கு மேல் விசைத்தறிகளை நிறுத்திவிட்டு அனைத்து தொழிலாளர்களும், பேரணி-ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

    • வெங்கமேடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இந்த மறியலால் அவ்வழியே சுமார் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ளது புஞ்சை பாலதொழுவு பஞ்சாயத்து.

    இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலமரம், வெங்க மேடு, ஓலப்பாளையம் உட்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு கொடு முடியில் உள்ள காவேரி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக காங்கேயம் வழியாக கடந்த சில ஆண்டுகளாக காவிரி ஆற்று நீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 2 மாத காலமாக காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பம்பிங் நிலையம் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் ஆற்றில் இருந்து முறையாக தண்ணீர் சப்ளை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு வெங்கமேடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த அதிகாரிகள் சில நாட்களில் குடிநீர் சப்ளையை சரி செய்து முறையாக கிடைக்கச் செய்வதாக உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.

    இந்நிலையில் கடந்த 40 நாட்களாக மீண்டும் முறையாக குடிநீர் சப்ளை செய்யப்படாமல் பல நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை நடைபெற்றதாக பொது–மக்கள் கூறினர். முறையாக குடிநீர் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரி–களிடம் பொது மக்கள் முறையிட்டனர். இருப்பினும் போதுமான அளவு குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

    இதையடுத்து வெங்கமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று மதியம் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே ஊத்துக்குளி செல்ல வந்த அரசு டவுன் பஸ் மற்றும் வாகனங்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கவுன்சிலர் செல்வம், புஞ்சை பாலதொழுவு பஞ்சாயத்து தலைவர் தங்கமணி விஜயகுமார், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது 10 நாட்களில் முறையாக குடிநீர் சப்ளை செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் அதுவரை லாரி தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். இதனையேற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த மறியலால் அவ்வழியே சுமார் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை, பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல் பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம், திப்பம் பாளையம், அம்மா பாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலை பாளையம், வெப்பிலி, மு.பு.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு, பி.என்.நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
    • இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் இண்டேன் கேஸ் ஏஜென்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இரவு வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர். நள்ளிரவில் நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    பின் தரைத்தளத்தில் உள்ள கேஸ் ஏஜென்சியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனையடுத்து மறுநாள் காலை பணிக்கு வந்த ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்தியதில் இச்சம்பவத்தில் 3 வாலிபர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    மேலும் அஸ்சூரன்ஸ் அலுவலகத்தில் பல ஆயிரமும், கேஸ் ஏஜென்சியில் பல ஆயிரமும் கொள்ளை அடிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விட்டனர். சி.சி.டி.வி. கேமராவில் பதிவான உருவங்களை வைத்து வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த சென்னி மலை வட்டாரத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதன் அடிப்படையில் சென்னிமலை அருகில் உள்ள எம்.பி.என். நகரில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது உறுதியானது.

    விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த அனோவார்ஹுசைன் (21), சைக்குள் இஸ்லாம் (29), மன்சூர் அலி (23) ஆகிய 3 வாலிபர்கள் கியாஸ் ஏஜென்சி மற்றும் அஸ்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் இருந்து மொத்தம் ரூ.45 ஆயிரம் கொள்ளையடித்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    ×