search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகர்மன்ற தலைவர்"

    • கபடி போட்டியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
    • இரு அணிகளும் சம பலத்துடன் மோதியது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-வது மணிவிழா ஆண்டு கபடி போட்டிகள் தொடங்கியது. ராஜபாளையம் ஊர்க்காவல் படை மைதானத்தில் மின்னொளி விளையாட்டு அரங்கில் நகர்மன்ற தலைவர் பவித்ரா சியாம் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    விருதுநகர் மாவட்ட தலைவர் கபடி சுப்பிரமணிய ராஜா வரவேற்றார். கோவில்பட்டி தொழில் பிரமுகர் வெங்கடசுப்பிரமணிய ராஜா, கவுன்சிலர் சோலைமலை, அரிமா சங்கம் சார்பில் ராம் சிங் மற்றும் சிவக்குமார், முத்துராமலிங்க பாண்டியன், விளையாட்டு மன்ற செயலாளர் கனி முத்து குமரன் உள்பட பலர் பேசினர்.

    விளையாட்டு மன்ற பொருளாளர் சம்சுதீன் வரவேற்றார். முன்னணி விளையாட்டு வீரர் காளிதாஸ் தொகுத்து வழங்கினார். முதலாவது போட்டியாக முகவூர் நண்பர்கள் அணியும், வத்திராயிருப்பு அணியும் மோதின. இரு அணிகளும் சம பலத்துடன் மோதியது. 

    • தண்ணீர் தேங்கிய பகுதியில் நகர்மன்ற தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.
    • மொத்த அளவு-235.90, சராசரி-14.74 மி. மீ, மழை பதிவாகியுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 4 நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் குளம் போல தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் நகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

    ராமநாதபுரத்தில் 9-வது வார்டு செய்யதுஅம்மாள் பள்ளியின் பின்புறம் பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் மின்கம்பம் சாய்ந்தது. நகர்மன்ற தலைவர் கார்மேகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இன்று காலை நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் கேணிக்கரை, புதிய பஸ் நிலையம், அண்ணா நகர், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை பார்வையிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    கடலாடி - 4.80, வாலிநோக்கம் -4.60,கமுதி - 1.50, பள்ளமோர்க்குளம்-5, மண்டபம்- 11, ராமநாதபுரம்- 41.20, பாம்பன்-40.40, ராமேசுவரம்- 77.60, தங்கச்சிமடம்-35.80, திருவாடானை-9.20, தொண்டி- 4.80,

    மொத்த அளவு-235.90, சராசரி-14.74 மி. மீ, மழை பதிவாகியுள்ளது.

    • தாராபுரம் நகரின் 14 -வது வாா்டு பகுதியில் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.
    • மக்கும் குப்பை-மக்காத குப்பைகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறதா என்றும் மக்களிடம் கேட்டறிந்தாா்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகரில் கழிவு நீா்க் கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.இதையடுத்து, தாராபுரம் நகரின் 14 -வது வாா்டு பகுதியில் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.

    அப்போது, சாக்கடைக் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா, மக்கும் குப்பை-மக்காத குப்பைகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறதா என்றும் மக்களிடம் கேட்டறிந்தாா்.  

    • நகர்மன்ற தலைவர் தயாரிக்கும் சினிமா படபிடிப்பு நடந்தது.
    • இதன் படப்பிடிப்பு சிவகங்கையை சுற்றியுள்ள வேம்பங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை நகர்மன்ற தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான துரைஆனந்த், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் சிறந்த நகர்மன்ற தலைவர் என்கிற விருதை பெற்றார்.

    இந்த நிலையில் அவர் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விழித்தெழு என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை சிநேகாவின் கணவர் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பருத்திவீரன் சரவணன், சுஜாதா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிக்கும் இந்த படத்தை தமிழ்ச்செல்வன் இயக்குகிறார்.

    இதன் படப்பிடிப்பு சிவகங்கையை சுற்றியுள்ள வேம்பங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது. 

    • கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசு நகர்மன்ற தலைவரால் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி நகராட்சி மன்ற தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகதலைவருமான சுப்ராயலுதலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி நகராட்சி மன்ற தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகதலைவருமான சுப்ராயலுதலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் அபுபக்கர், துணை தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 12-ஆ ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் சாய்பிரசன்னா 516 மதிப்பெண்களும், 2-வது இடம் ஹரீஷ் ராகவேந்திரா 515 மதிப்பெண்களும், 3-வது இடம் பிடித்த மூவேந்திரன் 506 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    மேலும் 10- ஆம் வகுப்பு தேர்வில் முதல் இடம் பெற்ற சமீர் 466 மதிப்பெண்களும், 2வது இடம் பிடித்த பூவரசன் 433 மதிப்பெண்களும், மூன்றாவது இடம் பெற்ற அதியமான் 426 மதிப்பெண்ணும்பெ ற்றுள்ளனர். இவ்வாறு பள்ளியளவில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல்3 இடங்களை பிடித்த மாணவர்களை நகர மன்ற தலைவர் சுப்ராயலு பாராட்டி ரொக்க பரிசு மற்றும் நினைவு பரிசு வழங்கினார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ராமசந்திரனுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அப்போது தி.மு.க. நகர துணை செயலாளர்அப்துல்ரசாக், இயக்குனர் அருண்கென்னடி, நகராட்சி கவுன்சிலர்கள் செல்வம்மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    ×