search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறந்த"

    • தோட்டப் பகுதியில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தேங்கி நின்ற ஒரு குழியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.
    • இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள தேவி பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.

    இவர் தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகன் ஹரிக்குமார் (வயது 14). இவர் பரமத்தியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாணவர் ஹரிக்குமார் காலையில் அங்கிருந்த தோட்டப்பகுதிக்கு‌ சென்றவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் தோட்டப் பகுதியில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தேங்கி நின்ற ஒரு குழியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.

    பின்னர் இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக

    பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் குழியில் தவறி விழுந்து இறந்தது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • பவானிசாகர் அருகே கணவர் இறந்த சோகத்தில் விஷம் குடித்த இளம் பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அடுத்த பகுத்தம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி வளர்மதி (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடத்த விபத்தில் தர்மராஜ் இறந்து விட்டார். கணவர் இறந்ததால் வளர்மதி சோகத்தில் இருந்து வந்தார். மேலும் கணவரை நினைத்து கொண்டு அவரின் படத்தை பார்த்து வளர்மதி அழுது கொண்டே இருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் சமாதானம் படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் வளர்மதி வீட்டில் சானி பவுடர் (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். அவரை பார்த்து அவரது மகன் அழுது கொண்டு இருந்தார். இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தனர்.

    அப்போது வளர்மதி மயங்கி கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பவானி அருகே தாய் இறந்த சோகத்தில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த கண்ணாடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் தேவராஜ் (46) கூலித் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.தனது தாயாருடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் தாயார் இறந்து போனார். இந்நிலையில் தேவராஜுக்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்துள்ளது. தாயார் இறந்த பின்பு குடிப்பழக்கம் அதிகமானது.

    இதனால் தனியே வசித்து வந்த தேவராஜ் அதே பகுதியில் வசித்து வரும் தனது தம்பி பொங்கி யண்ணன் 43 அவரிடம் நான் வாழ விரும்பவில்லை என்றும் இனிமேல் வாழ எனக்கு என்ன இருக்கிறது என்று சொல்லி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு தனது தம்பி வீட்டுக்கு வந்து விஷம் குடித்து விட்டதாக சொல்லி மயங்கி விழுந்தார். மயங்கி கீழே விழுந்தவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேவராஜை மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவராஜ் இறந்தார். இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×