search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில் காசி"

    • காசி மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார்.
    • இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக பழகி அதை வீடியோவாக பதிவு செய்வதோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமானது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி (வயது 29). இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குமரி மாவட்ட போலீசார் காசியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக பழகி அதை வீடியோவாக பதிவு செய்வதோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமானது.

    காசி மீது கோட்டார், வடசேரி மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் பாலியல் வழக்கு, கந்துவட்டி வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் பதிவானது. பின்னர் இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் காசி மீது தொடரப்பட்ட ஒரு பாலியல் வழக்கில் காசிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இதையடுத்து மீதமுள்ள 3 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொடுத்த பாலியல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள 1-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 900 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

    • பாளையங்கோட்டை சிறையில் காசி அடைக்கப்பட்டுள்ளார்.
    • பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி (27). இவர், பல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அந்தப் பெண்களிடம் பணம் பறித்துள்ளார். இது தொடர்பான புகாரில் கடந்த 2020-ல் கைது செய்யப்பட்ட காசி பின்னர் குண்டர் சட்டத்திலும் கைதானார்.

    120 பெண்களின்400 வீடியோக்கள் மற்றும் 1900 ஆபாச படங்கள் காசியின் லேப்டாப்பில் இருந்து கைப்பற்றப்பட்டன.

    காசி மீது போக்சோ வழக்கு, பாலியல் பலாத்கார வழக்குகள் என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    • காசிக்கு உதவும் வகையில் பல்வேறு சாட்சியங்களை அழித்ததாக அவரது தந்தை தங்க பாண்டியனும் கைது செய்யப்பட்டார்.
    • கவுதம் வந்ததும் அவரை அதிரடியாக கைது செய்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் காசி (வயது 28). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர், நாகர்கோவில் பகுதியை சோ்ந்த 27 வயதுடைய இளம்பெண், பள்ளி மாணவி என அடுத்தடுத்து பாலியல் புகார் அளித்தனர். தங்களுடன் நெருங்கி பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக அந்த புகாரில் இளம்பெண்கள் கூறியிருந்தனர். மேலும் காசி மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி புகாரும் அளிக்கப்பட்டது. இந்த புகார்கள் தொடர்பாக காசி மீது போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அந்த வகையில் அவர் மீது மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த வழக்குகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி காசியின் நண்பர் ஒருவரை கைது செய்தனர். மேலும் காசிக்கு உதவும் வகையில் பல்வேறு சாட்சியங்களை அழித்ததாக அவரது தந்தை தங்க பாண்டியனும் கைது செய்யப்பட்டார். பின்னர் காசி மற்றும் அவருடைய தந்தை தங்க பாண்டியன் ஆகியோர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். காசி மீது கந்துவட்டி, போக்சோ உள்பட 6 வழக்குகளுக்கு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள 2 வழக்குகளுக்கு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    அதே சமயத்தில் பெண்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசியின் நண்பர் கவுதம் (வயது 29) என்பவரும் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் காசிக்கு உதவி புரிந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் கவுதம் வெளிநாட்டில் இருந்ததால் அவரை கைது செய்ய முடியவில்லை.

    எனவே அவர் எப்போது சொந்த ஊருக்கு வந்தாலும் உடனே கைது செய்வதற்காக அனைத்து விமான நிலையங்களும் கவுதமனின் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. அதோடு திருவனந்தபுரம் விமான நிலையத்திலும் கவுதம் தொடர்பான தகவல்கள் கொடுக்கப்பட்டு அவர் எப்போது வந்தாலும் உடனே தகவல் தெரிவிக்கும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் கவுதம் நேற்று குவைத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வருவதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு சென்றனர்.

    பின்னர் கவுதம் வந்ததும் அவரை அதிரடியாக கைது செய்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் 2½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் கவுதம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காசி தொடர்பான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டன.
    • காசிக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி (வயது 27). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர், நாகர்கோவிலை சேர்ந்த இளம்பெண் ஆகியோர் பாலியல் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கடந்த 2020-ம் ஆண்டு காசியை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் காசி மீது மேலும் பல பெண்கள் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் பாலியல் தொல்லை உள்ளிட்ட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    போலீசாரின் விசாரணையில் அவர் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் பழகி காதலிப்பதாக ஏமாற்றி, பண மோசடி செய்தது மட்டுமின்றி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டியது தெரிய வந்தது.

    இதையடுத்து காசி தொடர்பான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டன. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் காசி பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் அவரது லேப்டாப்பில் நூற்றுக்கணக்கான இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் இருந்தன.

    இந்த வழக்கில் காசிக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பான தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டார்.

    காசி மற்றும் அவரது தந்தை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தனக்கு ஜாமீன் வழங்குமாறு மதுரை ஐகோர்ட்டில் காசியின் தந்தை தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் ஜாமீன் கேட்டு மீண்டும் அவர் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்கினார். மேலும் அவர் சாட்சிகளை மிரட்டக்கூடாது, சாட்சிகளை கலைக்கும் நோக்கில் செயல்பட கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காசி மற்றும் அவரது தந்தை பலமுறை ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    • இளம்பெண்ணிடம் நீதிபதி சசிரேகா விசாரணை நடத்தினார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவரது மகன் காசி (வயது 27). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் என்ஜீனியர், நாகர்கோவில் பகுதியை சோ்ந்த 27 வயது இளம்பெண் ஆகியோர் பாலியல் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்கள் உள்பட பலரை ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு காசி மிரட்டியது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து காசி மீது நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் குமரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கில் காசியின் நண்பர்களான 2 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே காசிக்கு உதவும் வகையில் பல்வேறு சாட்சியங்களை அழித்ததாக அவரது தந்தை தங்கபாண்டியனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் காசி மற்றும் அவரது தந்தை தங்க பாண்டியன் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பலமுறை ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    ஏற்கனவே கந்துவட்டி, போக்சோ உள்பட 6 வழக்குகளுக்கு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள 2 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இந்த 2 வழக்குகளுக்கு சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவில் இளம்பெண் அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை கடந்த 18-ந் தேதி முதல் நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடத்து வந்தது.‌

    விசாரணையில் காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் நேரில் ஆஜராகினர். தொடர்ந்து 4-வது நாளாக இன்று காசி மற்றும் தங்கபாண்டியனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் முக்கிய சாட்சியான இளம்பெண்ணிடம் நீதிபதி சசிரேகா விசாரணை நடத்தினார். கடந்த 4 நாட்களில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் நேரில் வந்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து காசி மற்றும் தங்கபாண்டியனிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காசி மற்றும் தங்க பாண்டியன் மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காசியின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த சில ஆதாரங்கள் அழிக்கப்பட்டதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்தனர்.
    • அதனை அழித்தது காசியின் தந்தை தங்கபாண்டியன் என தெரியவந்தது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், கணேச புரம் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் சுஜி என்ற காசி.

    காசி மீது சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு புகார் கொடுத்தார்.

    அதில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரம் மூலம் காசியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட நெருக்கத்தை பயன்படுத்தி காசி தன்னை ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

    இந்த புகாரை அவர் சென்னையில் இருந்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி இருந்தார். இது தொடர்பாக நாகர்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் காசியின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி ஆய்வு செய்த போது அதில் நூற்றுக்கணக்கான பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்தது.

    அதிர்ச்சி அடைந்த போலீசார் காசியுடன் தொடர்பில் இருந்த பெண்கள் பற்றிய விபரங்களை சேகரித்தனர். அப்போதுதான் காசி, நாகர்கோவில் மட்டுமின்றி சென்னை, பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்களுடன் தொடர்பில் இருந்ததும், அவர்களுடன் நெருங்கி பழகி, அந்த பெண்களை ஆபாச படம் எடுத்ததும் தெரியவந்தது.

    இதில் குடும்ப பெண்கள், கல்லூரி பேராசிரியை, பெண் என்ஜினீயர், பள்ளி, கல்லூரி மாணவிகள் என பலரும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களை பட்டியலிட்ட போது சுமார் 120 பேர் காசியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    முக்கிய பிரமுகர்களின் மனைவியர், மகள்களுக்கும் இதில் தொடர்பு இருந்ததால் இந்த விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் மாற்றப்பட்டது.

    அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த சாந்தி இந்த வழக்கை சவாலாக எடுத்து விசாரித்தார். இதையடுத்து காசி மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடந்த போது சுமார் 120 பெண்கள் காசியால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களில் 60 பேரிடம் போலீசார் ரகசிய வாக்குமூலம் பெற்றனர். அதன்மூலம் 6 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டது. இதில்தான் காசியின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த சில ஆதாரங்கள் அழிக்கப்பட்டதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்தனர். அதனை அழித்தது காசியின் தந்தை தங்கபாண்டியன் என தெரியவந்தது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

    கடந்த 2 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் தங்க பாண்டியன் மற்றும் காசி ஆகியோரில் தங்கபாண்டியன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த போது, சி.பி.சி.ஐ.டி. போலீசார் காசி பற்றிய விபரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    அதில் இருந்த தகவலை பார்த்துதான் நீதிபதி அதிர்ந்து போனார். 1000-க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள், வீடியோக்கள் இருப்பதாக போலீசார் கூறிய தகவல் அதிர்ச்சியாக இருப்பதாக கூறிய நீதிபதி, வழக்கு விசாரணை முடியாத நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதுபற்றி சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் கேட்டபோது, காசி மீது இன்னும் 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளோம்.

    இந்த வழக்கில் இன்னும் பலர் சாட்சியம் அளிக்க வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம். அவர்களிடமும் விசாரித்து குற்றப்பத்திரிகை தயாரிக்கப்படும், என்றனர்.

    காசி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

    • சோதனையில் சிக்கிய காசியின் லேப்டாப் மற்றும் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் ஏராளமான இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தன.
    • காசிக்கு எதிரான 8 வழக்குகளில் 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயார் செய்து கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    மதுரை:

    நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த வாலிபர் காசி. இவர் சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை மயக்கி, காதலிப்பதாக கூறி அவர்களை ஆபாச படங்கள் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. காசி மீது சென்னை பெண் டாக்டர் உள்பட 8 பெண்கள் பாலியல் புகார் அளித்தனர்.

    அதன் அடிப்படையில் நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் காசி மீது 8 வழக்குகள்பதியப்பட்டன. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி காசி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்களை கைது செய்தனர்.

    மேலும் காசியின் தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த காசியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் சிக்கிய காசியின் லேப்டாப் மற்றும் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் ஏராளமான இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. மேலும் காசியுடன் பல பெண்கள் இணைந்திருந்த புகைப்படங்களும் இருந்தன.

    போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிகள், இளம்பெண்கள் என ஏராளமானோரை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அதிர்ச்சி தகவல் வெளியானது. போலீஸ் காவலில் அவர் கூறிய தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட தடயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிந்தனர்.

    காசிக்கு எதிரான 8 வழக்குகளில் 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயார் செய்து கோர்ட்டில் தாக்கல் செய்தனர். காசியின் லேப்டாப்பில் இருந்த தகவல்களை அழித்ததாகவே காசியின் தந்தை தங்கபாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அந்த வழக்கில் சிறையில் உள்ள அவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதுரை ஐேகார்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணை செய்யப்பட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    காசியின் தந்தைக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் அதிர்ச்சியான சம்பவங்களை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    வழக்கு விசாரணையின்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார், காசியின் வீட்டில் இருந்து மொபைல் போனும், அவர் பயன்படுத்திய லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த லேப்டாப்பை தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தபோது முதல் குற்றவாளியான காசி 100-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆசைவார்த்தை கூறியும், மிரட்டியும் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆயிரக்கணக்கான முழு மற்றும் அரை நிர்வாண படங்கள் வீடியோ இருந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிக்கை தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. எனவே வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான காசியின் தந்தை தங்கபாண்டிக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    ×