search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்பேட்டை"

    • தொழிற்பூங்கா அமைக்க கடந்த சூலை 11 அன்று திமுக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது ஏற்க முடியாத கொடுஞ்செயலாகும்.
    • ஏறத்தாழ 10000 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, நிலம், நீர், காற்று அனைத்தும் நஞ்சாக மாறிவிடும்.

    ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையம் பகுதியில் விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து வேளாண் விளை நிலங்களைப் பறித்து நச்சு தொழிற்சாலைகள் அமைக்க தி.மு.க அரசு முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

    மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அருகே திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் நிறைந்த கள்ளிமந்தையம் பகுதிகளில் செழிப்பான வேளாண் நிலப்பகுதி என்பதால் இங்கு அனைத்து வகையான காய், கனிகளும் விளைவிக்கப்படுகிறது. வேளாண்மையை முதன்மையாக கொண்டு இங்கு வாழும் மக்களால் விளைவிக்கப்படுகிற காய்கறிகள், பழங்கள் மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

    அத்தகைய வளமிக்க கள்ளிமந்தையம், ஈசக்கம்பட்டி, வல்லக்குண்டாபுரம், தேவத்தூர், ஒத்தையூர், மற்றும் சிக்கமநாயக்கம்பட்டி கிராமங்களை சுற்றியுள்ள ஏறத்தாழ 700 ஏக்கர் விளை நிலங்களையும், பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 220 ஏக்கர் நிலங்களையும் வலுக்கட்டாயமாக அபகரித்து தொழிற்பூங்கா அமைக்க கடந்த சூலை 11 அன்று திமுக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது ஏற்க முடியாத கொடுஞ்செயலாகும்.

    வேளாண்மையை மட்டுமே நம்பி வாழும் விவசாயிகளிடம் எவ்வித கருத்துக் கேட்பும் நடத்தாமல் அரசாணை வெளியிட்டதோடு, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என பச்சை பொய்களைப் பரப்பி, மக்களை அச்சுறுத்தி நிலங்களைப் பறித்து பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்க முடிவெடுத்துள்ளது கொடுங்கோன்மையாகும்.

    திமுக அரசின் திட்டப்படி இப்பகுதியில் நாசகார நச்சு ஆலைகளை அமைக்க அனுமதித்தால் சற்றேறக்குறைய 50 கி.மீ சுற்றளவுக்கு நிலம், நீர் மற்றும் காற்று மாசுபடுவதோடு, பன்னெடுங்காலமாக நிலைத்து வாழ்கிற பூர்வகுடி மக்கள் தங்கள் வாழ்விடத்தைவிட்டு வெளியேற வேண்டிய அவலநிலையும் ஏற்படும். மேலும் கொத்தையம் அணைக்கு அருகில் நச்சு தொழிற்சாலைகள் அமைவதால், அணையின் நீர் வடிகால் மற்றும் பாசன பகுதிகளான பொருளூர் கரிசல் குளம், பருத்தியூர் குளம், சாலக்கடை, நல்லதங்காள் அணை வழியாக அமராவதி ஆறு வரை செல்லும் நீரோடை முழுவதும் ரசாயன கழிவுகள் நிறைந்த கால்வாயாகவும் மாறிவிடும்.

    இதனால் ஏறத்தாழ 10000 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, நிலம், நீர், காற்று அனைத்தும் நஞ்சாக மாறிவிடும். அதிகாரத் திமிரிலும், பசப்பு வார்த்தைகளிலும் மக்களை ஏமாற்றி சொந்த நிலத்திலேயே அதிகாரமற்ற அடிமைகளாக, ஏதிலிகளாக மாற்ற முயலும் திமுக அரசின் திட்டமிட்ட சதிச்செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

    விளை நிலங்கள் எல்லாம் விலைநிலங்களாகி வேளாண் பரப்பளவு குறைந்துகொண்டே போகும் தற்கால கொடுஞ்சூழலில், அரச அதிகாரத்தின் கொடுங்கரங்கள் மூலம் மக்களை அடக்கி – ஒடுக்கி வானூர்தி நிலையம், எட்டு வழிச்சாலை, நிலக்கரி சுரங்கம், தொழிற்பேட்டை அமைப்பது என ஆளும் அரசுகளும் தன் பங்கிற்கு விளைநிலங்களை அழிப்பது இந்த நாட்டில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்படவே வழிவகுக்கும். ஏற்கனவே அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் நிலையில், விளை நிலங்களைப் பறித்து அரசே நச்சுத் தொழிற்சாலைகள் அமைப்பது மக்களை வாழவே முடியாத வறுமை நிலைக்கு தள்ளிவிடும்.

    ஆகவே, வேளாண் பெருமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் பகுதியில் புதிய நச்சு தொழிற்சாலைகள் அமைக்கும் முடிவினை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்றும், வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தக் கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இதையும் மீறி வேளாண் நிலங்களை அபகரிக்க திமுக அரசு முயன்றால், போராடும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஆதரவாகத் துணை நின்று இக்கொடுந்திட்டத்தை நாம் தமிழர் கட்சி போராடி தடுத்து நிறுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • காக்களூர் தொழிற்பேட்டையில் ரூ. 8.34 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டார்.
    • ரூ. 2.92 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பொது உற்பத்தி மைய கட்டிடத்தினையும் ஆய்வு செய்தார்.

    சென்னையை அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில், 475 தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.72 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார். தொழில் முனைவோர்களுக்கு உதவிடும் வகையில் 9,000 சதுர அடி பரப்பளவில் ரூ.2.92 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பொது உற்பத்தி மைய கட்டிடத்தினையும் ஆய்வு செய்தார். காக்களூர் தொழிற்பேட்டையில் ரூ8.34 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டார்.

    அதனை தொடர்ந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.60.55 கோடி மதிப்பீட்டில் 1.31 லட்சம் சதுர அடியில் 112 தொழிற்கூடங்களுடன் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி தொழில் வளாகத்தினை பார்வையிட்டு அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், ரூ.1.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.29.47 கோடி மதிப்பில் 5 தளங்களுடன் 810 தொழிலாளர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர் தங்கும் விடுதியினை ஆய்வு மேற்கொண்டார்.

    • ராமநாதபுரத்தில் அமைய இருந்த கடல் பூங்கா திட்டத்தை தொழிற்பேட்டையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்குஅடுத்து பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கடல் சார்ந்த தொழில் நிறுவனங்கள் தொடங்கும் வகையில், ரூ.22 கோடியில் 50 ஏக்கரில் கடல் பூங்கா அமைக்கும் பணி நடந்தது.

    வலை தயாரித்தல், மீன்பிடித்தல், பதப்ப டுத்துதலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொழில் தொடங்க முன் வரவில்லை. இதனையடுத்து பொது தொழிற்பேட்டையாக மாற்ற 'சிட்கோ' திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்குஅடுத்து பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் அதிகளவில் வெளிநாடு, மாநிலங்களுக்கு செல்கிறது. ஆனால் மீன்களை பதப்படுத்தும், சுத்தப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் ராமநாதபுரத்தில் இல்லை. அவை தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தனியார் தொழிற்சா லைகளில் பத ப்படுத்தி வெளி யூர்களுக்கு அனுப்புகின்றனர்.

    ராமநாதபுரம் சிறுதொழில் வளர்ச்சி கழகம் சார்பில் தூத்துக்குடி போல் கடல் உணவு நிறு வனங்கள் கொண்டு வருவதற்காக ஜப்பான் பன்னோக்கு கூட்டுறவு முகவை உதவியுடன் சக்கரக்கோட்டை ஊராட்சி கிழக்கு கடற்கரை சாலையில் 100 ஏக்கரில் ரூ.22 கோடியில் கடல் பூங்கா அமைக்க திட்டமிட்டு 2019-ம் ஆண்டு முதற்கட்டமாக 50 ஏக்கரில் பணிகள் தொடங்கின.

    தொழில் மனை வளாகங்கள், மீன்பிடி தொழில் தொடர்பான கட்டமைப்புகள், தண்ணீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டிடங்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்தப்பகுதியில் போதுமான தண்ணீர், அடிப்படை வசதியில்லாத காரணத்தினால் எதிர்பார்த்த அளவிற்கு வலைதயாரித்தல், மீன்பிடி, பதப்படுத்துதல் தொழில் நிறுவனங்கள் தொடங்க யாரும் முன்வரவில்லை. இதனால் கடல்பூங்காவை தொழிற்பேட்டையாக மாற்ற சிட்கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கு உரிய கட்டமைப்பு ஏற்படுத்த உள்ளனர்.

    இந்த தொழிற்பேட்டை யில் பெரிய நிறுவனங்கள் பல கோடி முதலீடு செய்யவும், இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று சிட்கோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை
    • 42 உயர்நிலை பள்ளிகளை உருவாக்கி உள்ளோம்.

    வேலூர்:

    வேலூர் கோட்டை மைதானம் விழாவில் நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    வேலூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரும் வழியில் சாலையோரம் மலைகளை போன்று மக்கள் நின்று வரவேற்பு அளித்தார்கள். இதுபோன்ற வரவேற்பை என் வாழ்நாளில் முதன்முறையாக பார்க்கிறேன். முதல்-அமைச்சரான பிறகு மு.க.ஸ்டாலின் வேலூருக்கு முதன் முறையாக இலங்கை தமிழர்களின் கண்ணீரை துடைக்க வந்தார்.

    தற்போது வேலூர் கோட்டை மைதானத்துக்கு வாக்களித்த மக்களின் கண்ணீரை துடைப்பதற்காக வந்துள்ளார். இந்த கோட்டை மைதானம் பல வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்திய சுதந்திர போராட்டத்தில் முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்த கோட்டையில் தேசிய கொடியை 3 நாட்கள் பறக்க விட்ட சம்பவம் இந்தியாவில் மிகவும் பிரபலமானது.

    இந்த கோட்டையில் உள்ள ஜெயிலில் தான் திப்புசுல்தானின் பிள்ளைகளை சாகும் வரை அடைத்திருந்தார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பிகள், பல சுதந்திர போராட்ட வீரர்களையும் அடைத்துள்ளனர். தி.மு.க. கட்சிக்கும் கோட்டை மைதானம் பிரபலமானது. முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா இந்த கோட்டைக்கு முன்னால் நின்று மறியல் செய்தார்.

    அதேபோன்று கோட்டை மைதானத்தில் நடந்த கூட்டத்தில் தான் திராவிட நாடு கொள்கையை ஒத்தி வைக்கிறேன் என்ற அறிவிப்பை அண்ணா கூறினார்.

    காட்பாடி தனி தாலுகா

    கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எவ்வித முன்னேற்றமும் வேலூர் மாவட்டத்தில் இல்லை. பாலாற்றில் இருந்து காட்பாடிக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தேன். காட்பாடியில் இருந்து குடியாத்தம் செல்வதற்கு 40 கிலோ மீட்டர் தூரமாகும். ஒரு மாணவன் அல்லது விவசாயி ஏதாவது சான்றிதழ் பெறுவதற்கு 40 கிலோ மீட்டர் சென்று வர வேண்டியது இருந்தது. இதுகுறித்து மு.கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தேன்.

    அதன்பேரில் காட்பாடி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. காட்பாடி தொகுதி மக்கள் என்னவெல்லாம் கேட்டார்களோ அதையெல்லாம் மு.கருணாநிதியின் ஆட்சி காலத்தில் கொண்டு வந்து விட்டேன்.

    காட்பாடி, கே.வி.குப்பம் யூனியனில் ஒரே ஒரு மேல்நிலைப்பள்ளி தான் இருந்தது. தற்போது 42 உயர்நிலை பள்ளிகளை உருவாக்கி உள்ளோம். கல்வியியல் கல்லூரி, 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள், விவசாயிகளுக்காக மோர்தாணா அணை தண்ணீரை கால்வாய் மூலம் கொண்டு வந்துள்ளேன்.

    பொன்னை, திருவலம், குடியாத்தம் ரெயில்வேகேட், அம்முண்டி, பள்ளிக்குப்பம், மேல்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டி கொடுத்துள்ளேன். காட்பாடி தொகுதியில் ஒரு பல்கலைக்கழகம் கொண்டு வந்தேன்.

    பாலாற்று தண்ணீர் போதவில்லை என்றபோது காவிரி கூட்டுக்குடிநீரை முதல்-அமைச்சராகிய நீங்கள் தான் கொடுத்தீர்கள். சாலை வசதி, பஸ்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிலேயே சிறந்த விளையாட்டு மைதானம் காட்பாடியில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. காட்பாடி தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தாலும் ஒன்று என் கண் முன்னே நிற்கிறது.

    காட்பாடி தொகுதியில் ஒரு தொழிற்பேட்டை இல்லை. அதனால் படித்த மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக உள்ளது. எனவே இந்த நல்ல நேரத்தில் காட்பாடி தொகுதியில் ஒரு தொழிற்பேட்டை அமையும் என்று சொல்ல வேண்டும். அதனை வரவேற்க மட்டற்ற மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    ×