search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருகை பதிவேடு"

    • ‘எம்மீஸ்’ தளத்தில் பதிவேற்ற கட்டாயப்படுத்துகிறது.
    • மாணவர்களுக்கு கற்பிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மாணவர்கள் பற்றிய விவரங்களையும், வருகைப் பதிவேட்டையும் 'எம்மீஸ்' தளத்தில் பதிவேற்ற கட்டாயப்படுத்துகிறது.

    இதனால், ஆசிரியர்கள் தினமும் காலை, மாணவர்களின் வருகைப் பதிவேட்டை 'எம்மீஸ்' தளத்தில் பதிவேற்றுதிலேயே நேரம் போத வில்லை என்றும், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் நேரத்தைவிட, தங்களது கைப்பேசி இருக்கும் நேரம் அதிகமாகி விட்டதாக ஆசிரியர்கள் இந்த அரசை குற்றம் சாட்டுகிறார்கள்.

    ஒருசில நேரங்களில் 'இன்டர்நெட் இணைப்பு' கிடைக்காமல் 'செல்போனில் எம்மீஸ் தளம் சுற்றிக் கொண்டிருப் பதையே' 'கடவுளைப் பார்ப்பது போல்' பயபக்தியுடன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், மாணவர்களுக்கு கற்பிக்க முடியாத நிலை ஏற்படுவதாக வும் தெரிவிக்கின்றனர்.

    அதேபோல், காவல் துறையில் பணிபுரியும் காவ லர்களை ஆளும் கட்சி நிர்வாகிகள் மிரட்டுவதும், வருவாய்த்துறை ஊழியர்கள் மீது மணல் திருட்டு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்துவதும் என்று, அனைத்து அரசுத் துறைகளை சேர்ந்த ஊழியர் களும் ஏதேனும் ஒரு வகையில் இந்த தி.மு.க. ஆட்சியில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    காலிப்பணியிடங்கள் அனைத்துத் துறைகளிலும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கைத்தறி ஊழியர்கள் சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கங்கள், மருத்துவர் பணியாளர் சங்கங்கள், ஆசிரியர் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர் சங்கங்களையும் அழைத்துப் பேசி, அவர்களுடைய குறைகளை உடனடியாக களையவும், தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், தி.மு.க. அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வருகை பதிவேடு மற்றும் வழக்கு சம்பந்தமான கோப்புகளை ஆய்வு செய்தார்
    • காவல் நிலைய வளாகத்தில் உள்ள பட்டாலியன் பிரிவையும் ஆய்வு செய்தார்

    நாகர்கோவில் : 

    தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு குளச்சல் சரகத்திற்கு உட்பட்ட கொல்லங்கோடு, நித்திரவிளை போலீஸ் நிலையங்களை திடீரென ஆய்வு மேற்கொண்டார். நித்ராவிளை போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர் புகார்தாரர்கள் வருகை பதிவேடு மற்றும் வழக்கு சம்பந்தமான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது கோப்புகளை சரியான முறையில் பராமரித்து வரும் நித்திரவிளை காவல் நிலைய எழுத்தர் ரசல் ராஜீ வை பாராட்டி வெகுமதி வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து பணியில் இருந்த போலீஸாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார். தொடர்ந்து போலீஸ் நிலைய சுற்றுப்புறங்களை எவ்வாறு பராமரிக்கின்றனர் என்பதை பார்வையிட்டார். அப்போது போலீஸ் நிலையத்தின் பின்புறம் காலியாக கிடக்கும் இடத்தில் தங்கும் விடுதி அமைக்கலாம் என்ற ஆலோசனை நடத்தி னார். தொடர்ந்து கொலங்கோடு காவல் நிலையம் சென்று காவல் நிலைய பதிவேடுகளை பார்வையிட்டு வரவேற்பு புத்தகத்தை ஆய்வு செய்தார். அப்போது கோப்புகளை சரியாக பராமரிப்பு செய்ததற்காக கொல்லங்கோடு காவல் நிலைய எழுத்தர் ஜஸ்டின் தேவ அருள்தாஸ் க்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் உள்ள பட்டாலியன் பிரிவையும் ஆய்வு செய்தார் தொடர்ந்து பட்டாலியன் பிரிவு போலீசாரின் குறை களையும் கேட்டு அறிந்தார். அவருடன் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • 60 வார்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடிக்கு புகார்கள் வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகிறது. இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் மக்கள் அதிகம் நிறைந்த பகுதியாக திருப்பூர் மாநகராட்சி உள்ளது. 60 வார்டுகள் உள்ள நிலையில், 60 வார்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குப்பைகளை அகற்ற மற்றும் துப்புரவு பணியாளர்களும் தேவைக்கு ஏற்ப நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு என வருகை பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் எந்தெந்த பணிகள் எங்கு நடந்துள்ளது என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை (56). இவர் 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடுகள் செய்து வருவதாக மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடிக்கு புகார்கள் வந்தது. அதன்படி அடிப்படையில் முதற்கட்டாக நடந்த விசாரணையின்படி 2 வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சையை, மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு செய்து வருவதாகவும், வராத பணியாளர்கள் வேலைக்கு வந்ததாக அதில் பதிவிட்டு முறைகேடு செய்ததாகவும் வந்த புகாரின் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிந்த பின்னர் முறைகேடுகளுக்கு ஏற்ப துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார்.

    • வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் தலைமையாசிரியர்க ளுக்கான கூட்டம் நடைப்பெற்றது.
    • ்கூட்டத்தில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர், மாணவர் வருகை பதிவேட்டை சரியாக பராமரிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    டாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளி தலைமையாசிரியர்க ளுக்கான கூட்டம் வலங்கை மான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி தலைமையில் நடைப்பெற்றது.

    ்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தலைமையா சிரியர்களுக்கு பள்ளி வயது குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்த்தல், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இறுதி வகுப்பை முடித்த மாணவர்கள் மேல்வகுப்பில் சேர்ந்துள்ளதை உறுதி செய்தல், மாணவர் சேர்க்கை.

    நீக்கல் விபரங்களை எமிஸ் தளத்தில் சரியாக பதிவு செய்தல், ஆசிரியர் , மாணவர் வருகைப் பதிவேட்டை சரியாக பராமரிப்பது, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்வது,ஆசிரியர் தினசரி பாடக்குறிப்புகளை தயார் செய்வது,மாண வர்களின் தமிழ்,ஆங்கிலம் வாசிப்பு த்திறனை மேம்படு த்துவது, மாணவ ர்களின் கற்றல் திறன் வெளிப்பாடுகளை சரியாக கண்காணிப்பது.ஜாலி போனிக்ஸ் மூலம் ஆங்கிலம் கற்பிப்பது , கணிதம் கற்றல் திறனை மேம்படுத்துவது ,எழுத்துப் பயிற்சி அளிப்பது, பள்ளியின் அனைத்துப் பதிவேடுகளையும் சரியாக வைத்துக்கொள்வது, இல்லம் தேடி கல்வித்திட்டத்தை மேற்பார்வை செய்யது, பள்ளிகளின் வளாகம் , வகுப்பறை,கழிவறை ஆகியவற்றை தூய்மையாக பராமரிப்பது ஆகியவை களை சரியாக வைத்து க்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    ×