என் மலர்
நீங்கள் தேடியது "தங்கம் தென்னரசு"
- நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர்
- இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகரில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 மாதத்தில் நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்" என்றார்.
கடந்த 29ஆம் தேதி சட்டசபையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது" என்றார் எனத் தெரிவித்திருந்தார்.
- மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார்.
- பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தங்கம் தென்னரசு மேலும் கூறியிருப்பதாவது:-
மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை ராகுல் காந்தி அவர்களையும் அளிக்கச் செய்திருந்தார்.
டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று 'பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை' என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே!
பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மானியக் கோரிக்கையில், விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
- எப்படியும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க இயலாது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
மானியக் கோரிக்கையில் விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் எந்த நிதியை வைத்து மடிக்கணினி வழங்கப்போகிறார், எப்போது வழங்கப்போகிறார் என்பதையும் அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
விளம்பரத்துக்காக திட்டங்களை அறிவித்துவிட்டு, அதைச் செயல்படுத்த நிதி ஒதுக்காமல், வெறும் கையில் முழம் போடுவதை திமுகவினரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வாங்க இந்த ஆண்டு ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, சட்டசபையில் தமிழக நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.
ஆனால், உயர்கல்வி மானியக் கோரிக்கையிலோ அல்லது தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையிலோ இந்தத் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் அமைச்சர்? தமிழக மாணவர்களையா?
எப்படியும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க இயலாது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பிறகு ஏன் இந்த வெற்று அறிவிப்பு? நிதியே ஒதுக்காமல், இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என எப்படி கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் சட்டமன்றத்தில் பேசுகிறார் தமிழக நிதியமைச்சர்?
மானியக் கோரிக்கையில், விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எந்த நிதியை வைத்து, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப் போகிறார், எப்போது வழங்கப் போகிறார் என்பதை அமைச்சர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.2000 கோடியில் தரமான லேப்டாபை வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்கு தக்க விளக்கம்.
- கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் திமுக அரசின் தரம் பற்றி.
யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்த துறையையும் விட்டுவிடாத all-round TNBudget2025 என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான Laptop வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார் அமைச்சர் தென்னரசு அவர்கள்.
கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் கழக அரசின் தரம் பற்றி!
யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத all-round #TNBudget2025 அளித்து, பதிலுரையிலும் centum வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்குப் பாராட்டுகள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது.
- முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளது.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வௌியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது.
மேலும், முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் இதர கலைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதை உறுதிசெய்யும் வகையில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
- 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
அதன்படி, சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்தது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி" என அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " தாயுமானவராக நின்று தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வரலாற்று சிறப்புமிக்க 2025 நிதிநிலை அறிக்கையை உருவாக்க உறுதுணையாக இருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில் 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படும்.
- நாவாய் அருங்காட்சியம் 21 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* அகழாய்வு, தொல்லியல் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* தமிழகத்தில் 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படும்.
* பூம்புகார் முதல் நாகை வரை ஆழ்கடல் அகழாய்வு நடத்தப்படும்.
* நொய்யல் அருங்காட்சியகம் 22 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
* நாவாய் அருங்காட்சியம் 21 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
* வரும் நிதியாண்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் கான்கிரிட் வீடுகள் கட்டப்படும்.
* முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.29,465 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* வரும் நிதியாண்டில் கான்கிரிட் வீடுகள் கட்ட ரூ.3500 கோடி செய்யப்படும்.
* 25 ஆயிரம் வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- 500 தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
- இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து தான் தொடங்க வேண்டும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* திருக்குறள் மேலும் 45 மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* 500 தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
* ஓலை சுவடிகளை மின்பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* சிங்கப்பூர், துபாய், கோலாலம்பூரில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்திட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஐ.நா.வின் அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு பெற்ற நூல் என்ற பெருமையை திருக்குறள் பெறும்.
* தமிழின் தொன்மை தொடர்ச்சியை அறிய மதுரையில் உலகத் தமிழ் கண்காட்சி மையம் அமைக்கப்படும்.
* இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து தான் தொடங்க வேண்டும்.
* தமிழ் புத்தக திருவிழா இனி மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற மற்ற நகரங்களிலும் நடத்தப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
- அண்ணாவின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* இந்திய திருநாட்டில் 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்.
* In equality is a choice bus we can choose different path என்பதன் அடிப்படையில் வெற்றி நடைபோடும் தமிழகம்.
* ஏழை, எளிய நகர்ப்புற குடியிருப்புக்கு தனிவாரியம், மகளிருக்கு வாக்குரிமை, சொத்துரிமை என தமிழகம் அனைத்திலும் சிறப்பானது.
* 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
* இருமொழி கொள்கையால் உலகம் எல்லாம் தமிழர்கள் தடம் பதித்து வருகின்றனர்.
* இருமொழி கொள்கை தொடர்ந்து சமரசமின்றி முன்னெடுக்கப்படும்.
* எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பட்ஜெட் அமையும்.
* அண்ணாவின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
* திருக்குறளை உலகெங்கும் பரப்புவது நமது தலையாய கடமையாகும்.
* தமிழகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- புனைந்துரைகள் நிரம்பிய புழுகுமூட்டைகளை ஆளுநரிடம் கோரிக்கை மனுவாக அளித்ததாக அமைச்சர் விமர்சனம்
- பாஜக தினமும் ஒரு அறிக்கையை வெளியிட்டு ஊடக வெளிச்சத்தை உருவாக்குகிறது
சென்னை:
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது, திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 10 பக்க மனுவை கவர்னரிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக தெரிவித்தார். கமிஷன், கலெக்சன், கரெப்சன் தான் திராவிட மாடலாக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
இந்நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரை சந்தித்து, பொய்களின் ஒட்டுமொத்த வடிவமாக புனைந்துரைகள் நிரம்பிய புழுகுமூட்டைகளை கோரிக்கை மனுவாக அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார்.
அதிமுகவை யார் கைப்பற்றுவது என்று அவர்களுக்கிடையே ஒரு பெரிய யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. அதில் தான் வெற்றி பெற வேண்டி தன் எஜமானர்களை சந்தித்துவிட்டு அதே கையோடு இப்போது தான் எதிர்க்கட்சி தலைவர் என்ற நினைப்பு திடீரென வந்தவுடன் ஆளுநரை சந்தித்திருக்கிறார்.
அந்த அறிக்கையில் அவர் சொன்னதாக பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார். கோவை கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் அக்டோபர் 23ம் தேதி நடந்தது. கனியாமுர் பள்ளி சம்பவம் ஜூலை 17ல் நடந்தது. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் நவம்பர் 15ல் நடந்தது. இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் பல மாத இடைவெளியில் இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், திடீரென ஞானோதயம் வந்தவராக, இன்று ஆளுநரிடம் கூறியிருப்பதற்கு என்ன உண்மையான காரணம்? என்ன என்று தெரியவில்லை.
ஒருவேளை ஓ.பன்னீர்செல்வத்தை தன்னுடன் இணைத்து வைத்து அப்போதைய ஆளுநர் சமரச உடன்படிக்கை உருவாக்கியதுபோல், இப்போது இருக்கக்கூடிய உள்கட்சி போட்டா போட்டி காட்டா குஸ்தியில் தனக்கு ஒரு சாதகமான நிலையை உருவாக்குவதற்கு ஆளுநரிடம் போய் முறையிட்டாரா? என்ற சந்தேகம் எனக்கு வலுவாக எழுகிறது.
இன்னொரு பக்கம், தினமும் ஒரு அறிக்கையை வெளியிட்டு ஊடக வெளிச்சத்தை உருவாக்கி அதன் வாயிலாக நாங்கள்தான் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி என்கிற தோற்றத்தை தொடர்ச்ச்சியாக எழுப்பி அதை நிலைநிறுத்தக்கூடிய முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறபோது, பாஜகவுக்கு பதிலடி கொடுக்க முடியாத எடப்பாடி பழனிசாமி, மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் என்ற நினைப்போடு மட்டும் ஆளுநரை சந்தித்திருப்பது ஏன்? இப்போதாவது இந்த விழிப்பு வந்திருக்கிறதே?
அவர்கள் யாரை கொழுகொம்பாக நம்பி பற்றியிருக்கிறார்களோ, அவர்களே அவர்களுக்கு சத்ருவாக உள்ளே இருக்கிறார்கள் என்ற ஞானோதயம் இப்போதாவது அவருக்கு வந்திருக்கிறதே என எண்ணுகிறேன்.
ஒருவேளை, பாஜகவில் இப்போது உள்ள உட்கட்சி பிரச்சனையை திசைதிருப்புவதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு கருவியாக மாறி ஆளுநரை சந்தித்து நாடகத்தை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
- வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
- குற்றம் செய்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை என இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. இவர் மீதும், இவரது மனைவி மணிமேகலை மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கில் இருவரும் குற்றம் செய்ததற்கான எந்த விதமான முகாந்திரமும் இல்லை என அறிவித்து இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார்.
- பொருளாதாரத்தில் இந்தியாவில் 2-வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.
- தமிழ்நாட்டிற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடியது விவசாயம்.
விருதுநகர் :
விருதுநகர் மாவட்டம மல்லாங்கிணற்றில் கூட்டுறவுத்துறை சார்பில் சுயஉதவி குழுவினருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய கடன்கள் வழங்கும் விழா அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.
இதில் 179 மகளிர் குழுக்களை சேர்ந்த 1777 பேருக்கான கடன்தொகை ரூ.3 கோடியே 5 ஆயிரம் மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றிதழை சுயஉதவி குழு பெண்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
மகளிருக்கான உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், இதே போன்று, இன்னும் 3 அல்லது 4 மாதத்தில் வழங்கக்கூடிய நாள் வரும். இந்த மண்ணில் பெண்ணாக பிறந்ததற்காக உரிமைத்தொகை ரூ.1,000 இன்னும் மூன்றே மாதத்தில் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பொருளாதாரத்தில் இந்தியாவில் 2-வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடியது விவசாயம். எனவே விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அதிகம் ஏற்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.