என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பஞ்சாயத்து தலைவர்"
- அஞ்சாங்கட்டளை ஊராட்சி மன்ற தலைவராக முப்புடாதி என்பவர் பதவி வகித்து வருகிறார்.
- ஊராட்சி தலைவரின் கணவர் பெரியசாமி ஊராட்சி பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் தலையீடு செய்து வருகிறார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் அஞ்சாங்கட்டளை ஊராட்சி மன்ற தலைவராக முப்புடாதி என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் மீது பல்வேறு புகார்களை கூறி தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அஞ்சாங்கட்டளை வார்டு உறுப்பினர்கள் மனு அளித்துள்ளனர்.
அதில், அஞ்சாங்கட்டளை கிராம ஊராட்சியில் பொது மக்களிடம் இருந்து குடிநீர் இணைப்பு பணிகளுக்காக வசூலிக்கப்பட்ட தொகை சுமார் ரூ.85 ஆயிரத்தை ஊராட்சி கணக்கில் செலுத்தாமல் பஞ்சாயத்து தலைவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை வார்டு உறுப்பி னர்களுக்கு தெரிவிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு தனக்கு ஆதாயம் கிடைக்கும் பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறார்.
வார்டு உறுப்பினர்கள் மற்றும் பஞ்சாயத்து துணைத்தலைவரிடம் கலந்து ஆலோசிக்காமல் அவர்களது ஒப்புதல் இல்லாமல் தீர்மானங்களை நிறைவேற்றி அரசின் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தனது சொந்த மகளின் கணவர் ஆறுமுகம் என்பவரது பெயரில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தனக்கு நெருக்கமான ஒருவரை 100 நாட்கள் பணி முடிந்த பின்னரும் தொடர்ந்து பணித்தள பொறுப்பாளராக நியமித்து மற்ற நபர்களுக்கு பணித்தள பொறுப்பாளர் பணி கிடைக்க விடாமல் அடாவடி செய்து வருகிறார். இவர் ஊராட்சி தலைவராக பதவியேற்ற நாள்முதல் இதுநாள் வரையில் அவரது கணவர் பெரியசாமி என்பவர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளை மேற்பார்வை செய்வதோடு மட்டுமில்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் தலையீடும் செய்து வருகிறார்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து இனி ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடு செய்யக்கூடாது என எச்சரித்து உத்தரவு பிறப்பித்தும் அதை மதிக்காமல் இன்றளவும் செயல்பட்டு வருகிறார். ஊராட்சி தலைவரும் தனது அதிகாரத்தை மீறி இதனை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205-ன் படி, கட்டாய கடமைகளை செய்யாமல் இருத்தல், நிதி முறைகேடுகளில் ஈடுபடுதல் போன்ற காரணங்களுக்காக அஞ்சாங்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் முப்புடாதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவினங்குடி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் கலையரசி (வயது 34). இவர் ஆவினங்குடி ஊராட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் காரணமாக ஊராட்சிகள் சட்ட விதியின்படி பஞ்சாயத்து தலைவர் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்துள்ளார். தொடர்ந்து ஆவினங்குடி பஞ்சாயத்து நிர்வாகம் பி.டி.ஓ. கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. ஊராட்சி செயலாளர் இளவரசி நேற்று மாலை துப்புரவு பணி யாளர்களுக்கு சம்பளம் போடுவதற்காக கேஸ் புக் மற்றும் தீர்மானம் நோட் தருமாறு பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டார்
அதற்கு பஞ்சாயத்து தலைவர் கலையரசி அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்க்குமாறு கூறியுள்ளார். இதில் ஊராட்சி செயலாளர் இளவரசி வீட்டில் எழுதி எடுத்துக்கொண்டு பி.டி.ஓ.விடம் கையெழுத்து வாங்கி கொள்கிறேன் என கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த பஞ்சாயத்து தலைவர் கலையரசி உடனடியாக ஊராட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு அலுவலக வெளிப்புறத்தில் அமர்ந்து ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்ய கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த மங்களூர் பி.டி.ஓ. முருகன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பஞ்சாயத்து தலைவரிடம் கூறியதை அடுத்து பஞ்சாயத்து தலைவர் போராட்டத்தை கைவிட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பெண்ணாடம் அருகே பஞ்சாயத்து தலைவர் மகளிடம் நகைகளை திருடிச் சென்றனர்.
- வீட்டின் அருகில் இருந்த உறவுக்கார பெண்ணான காரையூர் ஊராட்சி மன்ற தலைவியின் மகள் கலையரசியும் அன்பழகன் வீட்டிற்கு வந்து வீட்டின் வரண்டாவில் படுத்து தூங்கி உள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே காரையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன். விவசாயி. இவர் தனது மனைவியுடன் நேற்று வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். நள்ளிரவு ஒரு மணி அளவில் அக் கிராமத்தில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டதின் காரணமாக அனைவரும் வீட்டின் வரண்டாவில் படுத்துள்ளனர். அப்போது வீட்டின் அருகில் இருந்த உறவுக்கார பெண்ணான காரையூர் ஊராட்சி மன்ற தலைவியின் மகள் கலையரசியும் அன்பழகன் வீட்டிற்கு வந்து வீட்டின் வரண்டாவில் படுத்து தூங்கி உள்ளார். நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே சென்று பீரோவில் இருந்த 13 சவரன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு வெளியே வரும் பொழுது வராண்டாவில் படுத்து இருந்த கலையரசியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை பரித்துள்ளனர்.
அப்போது தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட கலையரசி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வருவதை அறிந்த மர்ம நபர்கள் கலையரசியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஊர் மக்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. நகைகளை திருடிச் சென்ற திருடர்கள் வீட்டின் அருகில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளை அங்கிருந்து துணியால் மூடி மறைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து அன்பழகன் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற பெண்ணாடம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கலையரசி கூறும்போது மர்ம நபர்கள் கால் சட்டை அணிந்தும், லுங்கியை கழுத்தில் போட்ட படியும் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்