search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்-அமைச்சருக்கு"

    • கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தின் அளவு உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • இந்த அறிவிப்பு காரணமாக 1.60 லட்சம் விசைத்தறியாளர்கள் பயனடைவார்கள்.

    ஈரோடு:

    விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தின் அளவு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்தி அரசாணை பிறப்பி க்கப்பட்டுள்ளது. இதற்கு விசைத்தறி யாளர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பின் அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தின் அளவு 1000 யூனிட்டாக உயர்த்தப்படும் என தி.மு.க. வாக்குறுதி அளித்தது.

    இதை நிறைவேற்ற வேண்டும். மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என எங்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்து இருந்தோம்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போதும் இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரிடம் வலியுறுத்தி இருந்தோம்.

    இடைத்தேர்தல் முடிந்ததும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என அவர்களும் உறுதி அளித்திருந்தனர்.

    அதன்படி விசைத்தறி க்கான இலவச மின்சாரத்தின் அளவு 750 யூனிட்டில் இருந்து ஆயிரம் யூனிட்டா கவும், கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தின் அளவு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் எங்களது கோரிக்கையை ஏற்று ஆயிரம் முதல் 1500 யூனிட் வரையிலான மின் கட்டணத்தில் 35 பைசாவும், 1500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 70 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான மானியத்தை அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு காரணமாக 1.60 லட்சம் மின் இணைப்புகள் உள்ள நிலையில் விசைத்தறி யாளர்கள் பயனடைவார்கள்.

    விசைத்தறியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன், ஈஸ்வரன் எம்.எல்.ஏ ஆகியோருக்கு விசைத்தறியாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒரு கட்டத்தில் அந்த உழவர் சந்தை செயல்படாமல் போனது.
    • ரூ.1 கோடிவரை வருமான இழப்பு ஏற்படும் என சுட்டி காட்டப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 2006 -ல் கதர்துறை அமைச்சராய் இருந்த தற்போதைய வனத்துறை அமைச்சர் ராமசந்திரனால் உழவர் சந்தை திறந்து வைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த உழவர் சந்தை செயல்படாமல் போனது.

    இந்த நிலையில் தினசரி மார்க்கெட் பகுதியில் 40 வருட காலமாக இயங்கி கொண்டிருக்கும் கடைகளின் ஒரு பகுதியில் 64 கடைகளை அப்புறபடுத்தி விட்டு அந்த இடத்தில் உழவர் சந்தை அமைக்க ஆய்வுகள் நடைபெற்றனஇது வியாபாரிகளிடையே அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்டுத்தியது

    மார்க்கெட்டின் அந்த கடைகளை நம்பி வாழும் சுமார் 300 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என மார்க்கெட் வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் உழவர் சந்தையை மார்க்கெட் பகுதியில் அமைக்க கூடாது என கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் , வாகன டிரைவர்கள், உரிமையாளர்கள் சார்பில் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.பழைய இடத்திலேயே உழவர் சந்தை அமைக்க வேண்டும், இல்லாவிட்டால் புதிய நூலகம் அருகே உள்ள பேருராட்சி இடம், என்.சி.எம்.எஸ் மைதானம், ரைபில் ரேஞ்ச் கால்நடை மைதானம் ஆகிய இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து உழவர் சந்தை அமைக்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மார்க்கெட் பகுதியில் கடைகளை அகற்றி உழவர் சந்தை அமைந்தால் பேருராட்சிக்கு ரூ.1 கோடிவரை வருமான இழப்பு ஏற்படும் என சுட்டி காட்டப்பட்டு உள்ளது. 

    • கரூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் நடந்தது.

    கரூர்:

    குளித்தலை அருகே மருதூர் பிரிவு ரோடு மற்றும் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலைய பகுதிகளில் நாளை நடைபெற இருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தந்த தமிழக முதல்வருக்கு தி.மு.க.வினர் மற்றும் பொது மக்கள், எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளித்தனர்.

    கரூரில் இன்று 80.555 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது,

    அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து கரூர் புறவழிச்சாலையில் மருதூர் பிரிவு ரோடு பகுதியில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் மற்றும் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலைய பகுதியில் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி ஆகியோர் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோரும் கும்பம் மற்றும் மேளதாளம் வெடி வெடித்து உற்சாக வரவேற்பு தமிழக முதல்வருக்கு அளித்தனர்,

    ×