என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆசிரியர் தேர்வு"
- மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது.
- 07.01.2024 அன்று நடைபெறவிருந்த தேர்விற்கான நுழைவு சீட்டினை 04.02.2024 அன்று நடைபெறவிருக்கும் தேர்விற்கு பயன்படுத்தலாம்.
சென்னை :
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 03 / 2023 மற்றும் 03A / 2023 68T UL. 07.01.2024 அன்று நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் வட்டார வளமைய ஆசிரியர் (BT / BRTE) தேர்வானது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது.
மேற்கண்ட தேர்வானது வருகின்ற 04.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. 07.01.2024 அன்று நடைபெறவிருந்த தேர்விற்கான நுழைவு சீட்டினை 04.02.2024 அன்று நடைபெறவிருக்கும் தேர்விற்கு பயன்படுத்தலாம் என விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
- சுக்காபி, சுண்டல் போன்றவற்றை சாப்பிட்டு பார்த்து விட்டு தரமாக அனைத்தும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
- துணை அமைப்பாளர் பழனி, கோளூர் கோபால், முருகானந்தம் கோதண்டன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி மீஞ்சூர் அரசு பள்ளி கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் மற்றும் மாணவிகள் விடுதிகளில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.
விடுதியில் வருகை பதிவேடு உணவு பொருள் இருப்பு விவரங்கள் உணவுபட்டியல் மாணவர்கள் சேர்க்கை சமையலறை தங்குமிடம் போன்றவற்றை முறையாக பார்த்து மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர் மாணவர்களுக்கு வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுக்காபி, சுண்டல் போன்றவற்றை சாப்பிட்டு பார்த்து விட்டு தரமாக அனைத்தும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அப்போது மாணவர்கள் தங்களின் துணிகளை துவைக்க கஷ்டப்படுவதாகவும் தங்களுக்கு மின்சலவை இயந்திரங்கள் வழங்க வேண்டும் எனவும் மகளிர் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் தங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கவேண்டும். தமிழ் நாளிதழ்கள் படிப்பதற்கு கொடுப்பதை போன்று ஆங்கில நாளிதழ்களையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்:- ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்துவது மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்துதான் செய்ய முடியும் தேவை ஏற்பட்டால் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து கல்லூரி பள்ளிமாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் உயர் நிலைபள்ளிக்கும் நடுநிலை பள்ளிகளுக்கும் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிவர்த்தி செய்வதாகவும் விரைவில் தேர்வின் மூலம் உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது தாசில்தார் மதியழகன் நகர மன்ற தலைவர் பரிமளம்விஸ்வநாதன் சேர்மன் ரவி காப்பாளர் அன்பழகன், நகரச் செயலாளர் ரவிக்குமார், ஒப்பந்ததாரர் ஆசானபுதூர் சம்பத், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன், சுகுமார், கூட்டுறவு சங்க துணை தலைவர் நேதாஜி, முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் டாக்டர் மா. தீபன் மாவட்ட மகளிர் அணி தலைவர் உமா காத்தவராயன், ஆதிதிராவிடநலக்குழு அமைப்பாளர் ஏனம்பாக்கம் சம்பத் , துணை அமைப்பாளர் பழனி, கோளூர் கோபால், முருகானந்தம் கோதண்டன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
- இளைஞர்கள் அனைவரும் இப்பயிற்சியில் சேர்ந்து பயின்று பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான(டிஆர்பி., டிஇடி) இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரிய 2023 ம் ஆண்டுத் திட்ட நிரலில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தோராயமாக 6553 காலிப்பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 3587 காலிப்பணியிடங்களுக்கும் (டிஆர்பி., டிஇடி) தேர்வு நடப்பு ஆண்டில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இப்போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயில்வதற்கு தங்களது பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். போட்டித் தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் அனைவரும் இப்பயிற்சியில் சேர்ந்து பயின்று பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக அதற்கான வினாத்தாள் வெளியானது.
- ஆசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியானதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுரேஷ் தாக்கா என்பவர் தலைமறைவாக உள்ளார்.
உதய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் தேர்வுக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக அதற்கான வினாத்தாள் வெளியானது. அதையடுத்து ஆசிரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 37 தேர்வர்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பெண்களும் அடங்குவர்.
மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டனர். ஆசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியானதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுரேஷ் தாக்கா என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கைதானவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் டி.ஜி.பி. உமேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.
- முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
- இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற உள்ளது.
மதுரை
மதுரை ஐகோர்ட்டில் சீர் மரபினர் சங்கத்தின் தலைவர் ஜெபமணி மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி முதுநிலை ஆசிரியர் உடற்கல்வி பயிற்றுனர் தேர்வு முடிவுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதில் எம்.பி.சி.வி., டி.என்.சி. மற்றும் எம்.பி.சி. என 3 பிரிவுகளாக வகைப்படுத்தி தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளனர். இது சட்ட விரோதமானது.
ஏற்கனவே இது போல 3பிரிவுகளின் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்டோ ருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் உடற்கல்வி தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை வெளியி டுள்ளது.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற உள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே மிகவும் பிற்படுத்தப்படடுருக்கான இட ஒதுக்கிட்டை 3 பிரிவுகளின் கீழ் பிரித்து வெளியிடப்பட்டுள்ள தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பை நடத்திக் கொள்ளலாம். ஆனால் இறுதி முடிவு இந்த நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
- ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
- விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை:
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
தகுதி தேர்வு தாள் 1-க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும், தகுதி தேர்வு 2-க்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேரும் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
வருகிற 11-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இனி வரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட மாட்டாது என வாரியம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்