என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீஸ் குடியிருப்பு"
- புகார் அளித்தால் தங்களுக்கு வேலையில் ஏதும் பாதிப்புகள் ஏற்பட்டு விடுமோ? என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
- பழமையான கட்டிடங்களை உடனடியாக இடிக்கவும் அங்கு வசிப்பவர்களுக்கு புதிய வீடுகளை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை:
பொதுமக்களை காக்கும் காவல் பணியில் ஈடுபட்டுள்ள சென்னை மாநகர காவல் துறையினர் வசித்து வரும் குடியிருப்புகள் இடிந்து விழுந்தும் நிலையில் இருக்கின்றன என்று போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
சென்னையில் காவலர்கள் குடியிருப்புகள் பல இடங்களில் கட்டப்பட்டுள்ளது. அங்கு போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்புகளில் பல ஆபத்தான முறையில் இடிந்து விடும் நிலையில் காணப்படுகிறது. கீழ்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர்கள் அங்கிருந்து காலி செய்யுமாறு அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரின் குடும்பப் பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர். மாற்று இடம் ஒதுக்கி கொடுக்காமல் எங்களை காலி செய்யச் சொன்னால் நாங்கள் எங்கே செல்வோம்? எனவே உரிய குடியிருப்புகளை அடையாளம் காட்டிவிட்டு எங்கள் வீடுகளை காலி செய்ய சொல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். கீழ்ப்பாக்கம் குடியிருப்பை போன்றே சென்னையில் நரியன்காடு பழைய போலீஸ் குடியிருப்பு, புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பு ஆகியவையும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஆனால் இங்கு குடியிருக்கும் காவலர்கள் அது தொடர்பான புகார் மனுக்களை கொடுப்பதற்கு தயங்குவதாக கூறப்படுகிறது. அது போன்று புகார் அளித்தால் தங்களுக்கு வேலையில் ஏதும் பாதிப்புகள் ஏற்பட்டு விடுமோ? என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
சென்னை மாநகரில் இதேபோன்று பல்வேறு போலீஸ் குடியிருப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த குடியிருப்புகளிலும் காவலர்களுக்கு தேவையான வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை என்பதே போலீசாரின் குற்றச்சாட்டாக உள்ளது. பழமையான இது போன்ற போலீஸ் குடியிருப்புகளை இடித்து விட்டு அதற்கு பதில் புதிய குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே காவலர்களின் கோரிக்கையாக உள்ளது. கடந்தாண்டு கட்டி முடிக்கப்பட்டு காவலர்களின் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்ட குடியிருப்புகளும் சில இடங்களில் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக காவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களும் ஒரு வித பயத்துடனேயே அங்கு குடியிருந்து வருகிறார்கள். சிலர் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாடகை வீடுகளில் தங்கி இருக்கிறார்கள். எனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களின் குடும்பத்தை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உயர் அதிகாரிகள் போலீஸ் குடியிருப்புகளின் தரத்தை ஆய்வு செய்து பழமையான கட்டிடங்களை உடனடியாக இடிக்கவும் அங்கு வசிப்பவர்களுக்கு புதிய வீடுகளை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
- போலீஸ் குடியிருப்பில் சிறுவர்கள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டது.
- குடியிருப்பை சுற்றிலும் புதர் மண்டியும் காணப்படுகிறது.
உடுமலை :
உடுமலை போலீஸ் குடியிருப்பில் சிறுவர்கள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து அவை பராமரிக்கப்படாமல் உடைந்து உள்ளது.
மேலும் பூங்கா பராமரிப்பின்றியும், குடியிருப்பை சுற்றிலும் புதர் மண்டியும் காணப்படுகிறது இதனால் இங்கு சிறுவர்கள் விளையாட அச்சமடைகின்றனர். அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.எனவே போலீஸ் குடியிருப்பில் உள்ள பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- போலீஸ் குடியிருப்பில் உள்ள கட்டிடங்கள் பெரும்பாலும் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளன.
- சாலையில் போகும் பொதுமக்கள் மீது எந்த நேரமும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை புதுத்தெரு பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டை போலீஸ் குடியிருப்பு அமைக்கப்பட்டது.
இங்கு போலீஸ் குடியிருப்பில் உள்ள கட்டிடங்கள் பெரும்பாலும் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளன. இந்த போலீஸ் குடியிருப்பில் தற்போது 50-க்கும் மேற்பட்டவர்கள் கூடி இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 5 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள்.
போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்து முட்புதர்கள் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் பாம்பு, பல்லிகள் மற்றும் பல்வேறு விஷ வண்டுகள் புகுந்து வருகிறது.
மேலும் இந்த கட்டிடம் பழுதடைந்து இருப்பதால் இதன் அருகே செல்லும் சாலையில் போகும் பொதுமக்கள் மீது எந்த நேரமும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த போலீஸ் குடியிருப்பில் உள்ள பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு நிலக்கோட்டையில் புதிய போலீஸ் குடியிருப்பு கட்டிடம் கட்ட வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்