என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரூ.10 ஆயிரம்"
- தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
- 04652-229077 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
நாகர்கோவில், அக்.27-
நாகர்கோவில் (அம லாக்கம்) தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர் துறை ஆணையருமான அதுல் ஆனந்த் உத்தரவின்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர், சைல்டு லைன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆகியோருடன் செண்பகராமன்புதூர், தடிக்காரன்கோணம், பொன்மனை, சுருளோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.
கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது தொடர்பாக ஆய்வின்போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் குறைந்த பட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரையும் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்து வது தெரியவந்தால் 1098 என்ற எண்ணிலும், 04652-229077 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொரோனா காலகட்டத்தில் மதுரையில் யாசகம் மேற்கொண்டு அதில் சேர்ந்த பணத்தில் ஏராளமான பேருக்கு உதவி செய்தேன்.
- தற்போது என்னிடமிருக்கும் ரூ. 10 ஆயிரத்தை முதல் - அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளேன்.
- தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சென்று யாசகம் எடுத்து அதன் மூலம் சேரும் பணத்தில் என்னால் முடிந்த உதவியை செய்வேன்.
ஈரோடு, ஏப். 17-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டியன்(73) என்ற முதியவர் கையில் ரூ. 10,000 பணத்துடன் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்குவதற்காக இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
இதுகுறித்து முதியவர் பூல் பாண்டியன் கூறியதாவது:-
எனது ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆலங் கிணறு பகுதி ஆகும். எனக்கு சிறுவயதிலிருந்தே பொது சேவையில் ஈடுபடுவது, பிறருக்கு உதவி செய்வது மிகவும் பிடிக்கும். 1980 ஆம் ஆண்டு பிழைப்பிற்காக மும்பை சென்றேன். அங்கு ஒரு அயன் கடையில் வேலை பார்த்தேன். பின்னர் அந்த வேலை ஒத்து வராததால் வேலையை விட்டு விட்டு அங்கு சிறு ஆண்டுகள் யாசகம் மேற்கொண்டேன்.
அதன் பின்னர் 2010-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்தேன். கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பாபநாசம் போன்ற பல்வேறு பகுதிகளில் யாசகம் எடுத்தேன். அதில் சேர்ந்த பணத்தில் என்னால் முடிந்த உதவி செய்ய முடிவு செய்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று முதல் - அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவினேன்.
இதேபோல் கொரோனா காலகட்டத்தில் மதுரையில் யாசகம் மேற்கொண்டு அதில் சேர்ந்த பணத்தில் ஏராளமான பேருக்கு உதவி செய்தேன். இதுவரை யாசகம் மூலம் சேர்ந்த பணத்தில் ரூ. 55 லட்சத்தை நிதி உதவியாக வழங்கி உள்ளேன். தமிழ்நாட்டில் இதுவரை 400 அரசு பள்ளிகளுக்கு சேர், மேஜைகள், ஆர்.ஓ. வாட்டர் போன்ற வசதிகள் செய்து கொடுத்துள்ளேன்.
தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு முதல் முதலாக வந்துள்ளேன். தற்போது என்னிடமிருக்கும் ரூ. 10 ஆயிரத்தை முதல் - அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளேன். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சென்று யாசகம் எடுத்து அதன் மூலம் சேரும் பணத்தில் என்னால் முடிந்த உதவியை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
- சேவை குறைபாடு எதிரொலி
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் புல்லுவிளையை சேர்ந்தவர் செல்வகீதா. இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.1000 வீதம் 64 மாதங்கள் கட்டினால் முடிவில் ரூ.94 ஆயிரம் கிடைக்கும் என்ற திட்டத்தில் சேர்ந்திருந்தார்.
அவர் தவணை தொகையை முழுவதும் செலுத்தி விட்டு முதிர்வு தொகையான ரூ.94 ஆயிரத்தை நிறுவனத்திடம் கேட்டார். உடனடியாக அந்த நிறுவனத்தினர் ரூ.94 ஆயிரத்திற்கு காசோலை வழங்கி உள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கு செயல்பாட்டில் இல்லாததால் இந்த காசோலை மூலம் அவரால் பணம் பெற முடியவில்லை.
இதனால் பாதிப்படைந்த செல்வகீதா வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனினும் முறையான உரிய பதில் கிடைக்காததால் அவர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் மற்றும் முதிர்வு தொகை ரூ.94 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
- நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
- வாங்கிய 5 மாதங்களில் செல்போன் பழுது
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் குஞ்சன் விளையை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டிலுள்ள செல்போன் கடையில் ரூ.15,490 மதிப் புள்ள செல்போன் ஒன்று வாங்கினார். ஆனால் வாங்கிய 5 மாதங்களிலேயே செல்போன் பழுது ஏற் பட்டது.
இதைத் தொடர்ந்து கடைக்காரரிடம் செல் போனை கொடுத்து சரி செய்து தருமாறு சுரேந்திரன் கூறினார். அப்போது ரூ.4,167 செலுத்தினால் பழுது பார்த்து கொடுப்பதாக கடைக்காரர் தெரிவித்தார்.ஆனால் வாரண்டி காலம் முடிவடையாததால் ஏன் பணம் கேட்கிறீர்கள் என்று சுரேந்திரன் கேட்டுள்ளார். எனினும் கடைக்காரர் பணம் கேட்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுரேந்திரன் இதுதொடர்பாக வக்கீல் மூலம் நோட்டிஸ் அனுப்பினார். அதன் பின்ன ரும் உரிய பதில் கிடைக்கா ததால் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணை யத்தில் சுரேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து செல்போன் கடையின் சேவை குறைப்பாட்டை சுட்டிக்காட்டி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் புதிய செல்போன் அல்லது ஏற்கனவே செலுத்தப்பட்ட ரூ.15,490 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
- சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் ஆய்வு
- போலீசார் தொடர்ந்து விசாரணை
நாகர்கோவில்:
ஆசாரிபள்ளம் பெரு விளை சானல் கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.
இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி ரேவதி (வயது 28). இவர் தனது மொபட்டை பக்கத்து வீட்டில் உள்ள காம்பவுண்டுக்குள் நிறுத்துவது வழக்கம். சம்பவத்தன்றும் மொபட்டை அங்கு நிறுத்தி இருந்தார்.
அப்போது மொபட்டில் அவரது கணவர் வெளி நாட்டிலிருந்து அனுப்பிய ரூ.10 ஆயிரம் பணத்தை வைத்து இருந்தார். மறுநாள் காலையில் மொபட்டை பார்த்தபோது அதிலிருந்த பணம் திருடப்பட்டு இருந் தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவதி அக்கம் பக்கத்தில் விசாரித்தார். ஆனால் பணம் கிடைக்க வில்லை. இதையடுத்து ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக விசா ரணை நடத்தினார்கள்.சம்பவ இடத்திற்கு வந்தும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த திருட்டு வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு தொடர்பு இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஏ.டி.எம்., சென்டரில் 500 ரூபாய் நோட்டுகளாக 10 ஆயிரம் ரூபாய் கிடந்துள்ளது.
- விவசாயி வரதராஜனின் நேர்மையை பாராட்டிய போலீசார், பணம் யாருடையது என விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் நெருப்பெரிச்சல் அடுத்த வாவிபாளையத்தை சேர்ந்தவர் வரதராஜன்(வயது 43). விவசாயி. இவர் அங்குள்ள கனரா வங்கி ஏ.டி.எம் சென்டரில் பணம் எடுக்க சென்றுள்ளார். ஏ.டி.எம்., சென்டரில் 500 ரூபாய் நோட்டுகளாக 10 ஆயிரம் ரூபாய் கிடந்துள்ளது. அதனை எடுத்த அவர் திருமுருகன் பூண்டி போலீசில் ஒப்படைத்தார்.விவசாயி வரதராஜனின் நேர்மையை பாராட்டிய போலீசார், பணம் யாருடையது என விசாரித்து வருகின்றனர்.
- பெருந்துறை அருகே கட்டிட நிறுவனத்தில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள்.
- இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள திருவேங்கடம் பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 47). இவர் பெருந்துறை ஆர்.எஸ்.ரோடு பகுதியில் ஒரு கட்டிட நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது அலுவலகமும், குடோனும் ஒரு இடத்தில் உள்ளது.
சம்பவத்தன்று இரவு தனது அலுவலகம் மற்றும் குடோனை பூட்டிவிட்டு, காம்பவுண்ட் கேட்டையும் பூட்டிவிட்டு பெரியசாமி வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் காலை நிறுவனத்தில் வேலை செய்யும் பூபதி ராஜா என்பவர் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது முன்புற காம்பவுண்ட் கேட் திறந்த நிலையில் இருந்துள்ளது.
மேலும் உள்ளே சென்று பார்த்த போது அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. பின்னர் உடனடியாக அவர் போன் மூலம் பெரியசாமிக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே பெரியசாமி அங்கு வந்து பார்த்த அவர் டேபிள் டிராயர் திறக்கப்பட்டு அதில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.
இதனையடுத்து இது தொடர்பாக அவர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்