search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடகளம்"

    • "பி" பிரிவில் மொத்தம் 16 பேர் கலந்து கொண்டனர்.
    • சர்வேஷ் குசாரே 2.15மீ உயரம் தாண்டி 13-வது இடத்தை பிடித்தார்.

    பாரீஸ் ஒலிம்பிக் தடகளம் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியின் தகுதிச் சுற்று இந்திய நேரப்படி இன்று மதியம் நடைபெற்றது. மொத்தம் 31 பேர் தகுதிச் சுற்றில் கலந்து கொண்டர். "ஏ" பிரிவில் 15 பேரும், "பி" பிரிவில் 16 பேரும் கலந்து கொண்டர்.

    "பி" பிரிவில் இந்தியாவின் சர்வேஷ் அணில் குஷாரே கலந்து கொண்டார். ஒவ்வொரு வீரரும் நான்கு முறை உயரம் தாண்ட வேண்டும். நான்கில் எது சிறந்த தாண்டுதலோ அது தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

    இறுதிச் சுற்றுக்கு தகுதியான உயரம் 2.29 மீட்டர். இந்த தூரத்தை எட்டிவிட்டால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடலாம். இல்லையெனில் இரண்டு பிரிவிலும் இருந்து சிறந்த 12 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள்.

    சர்வேஷ் அணில் குஷாரே இரண்டு முயற்சிகளில் ஒன்றில் 2.15 மீட்டர் தூரம் தாண்டினார். இதனால் குஷாரே 13-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார். "பி" பிரிவில் அதிகபட்சமாக நியூசிலாந்து வீரர் ஹமிஸ் கெர் 2.27 மீட்டர் தாண்டினார். பி பிரிவில் ஐந்து பேரும், "ஏ" பிரிவில் ஏழு பேரும் என மொத்தம் 12 பேர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஸ்பெயின் ஜோடி பந்தய தூரத்தை 2 மணி நேரம் 50 நிமிடம் 31 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றது.
    • ஈகுவடார் ஜோடி 2 மணி நேரம் 52 நிமிடம் 22 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றது.

    பாரீஸ் ஒலிம்பிக்கின் தடகள போட்டியில் இன்று காலை கலப்பு அணிகள் பிரிவுக்கான மாரத்தான் நடை பந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் சுரஜ் பன்வார்- பிரியங்கா ஜோடி கலந்து கொண்டது.

    மொத்தம் 25 ஜோடிகள் கலந்து கொண்டனர். இதில் ஸ்பெயின் ஜோடி அல்வாரோ மார்ட்டின்- மரியா பெரேஸ் ஜோடி பந்தய தூரத்தை 2 மணி நேரம் 50 நிமிடம் 31 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றது.

    ஈகுவடாரின் பிரையன் டேனியல் பின்டாடோ- கிளென்டா மோர்ஜோன் ஜோடி 2 மணி நேரம் 52 நிமிடம் 22 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றது.

    ஆஸ்திரேலியாவின் ரிடியான் கவ்லே- ஜெமிமா மோன்டேஜ் ஜோடி 2 மணி நேரம் 51 நிமிடம் 38 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றது.

    இந்திய ஜோடி பந்தய தூரத்தை எட்ட முடியாமல் இடையிலேயே வெளியேறி கடைசி இடத்தை பிடித்தது. அதேபோல் செக்குடியரசு ஜோடியும் பந்தய தூரத்தை முடிக்க முடியாமல் இடையிலேயே வெளியேறியது.

    • 37-ஆவது மாநில ஜூனியா் தடகளப் போட்டி கடந்த செப்டம்பா் 14 -ந்தேதி தொடங்கி செப்டம்பா் 17 ந் தேதி வரையில் நடைபெற்றது.
    • 9 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளனா்.

    திருப்பூர்

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா்.கல்லூரியில் 37-ஆவது மாநில ஜூனியா் தடகளப் போட்டி கடந்த செப்டம்பா் 14 -ந்தேதி தொடங்கி செப்டம்பா் 17 ந் தேதி வரையில் நடைபெற்றது.

    இதில், 37 மாவட்டங்களைச் சோ்ந்த 4,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். திருப்பூா் மாவட்டத்தில் இருந்து 300 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில், ஒட்டுமொத்த புள்ளி அடிப்படையில் திருப்பூா் மாவட்டம் 134 புள்ளிகளைப் பெற்று 5- வது இடத்தைப் பிடித்தது.

    திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 9 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளனா்.

    பத்தகம் பெற்ற வீரா், வீராங்கனைகளை மாநில தடகள சங்கத்தின் இணைச் செயலாளரும், திருப்பூா் மாவட்ட தடகள சங்கத் தலைவருமான பி.சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

    • ஹரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் திருச்சி சமது பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்
    • கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க இருப்பதோடு, மாணவன் சூரஜின் இந்த சாதனை திருச்சிக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது

    திருச்சி:

    தேசிய அளவிலான தடகள் போட்டிகள் ஹரியானாவில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி காஜாநகரில் உள்ள சமது மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவரும், தடகள வீரருமான ஏ.சூராஜ் 400 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.

    மேலும் 20-வது தேசிய பெடரஷன் கப் ஜூனியர்ஸ் போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவினருக்கான தடகள போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கமும் வென்றார்.

    மேலும் இதன் மூலம் வருகிற 1.8.2022 முதல் 6.8.2022 வரை கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க இருக்கிறார்.

    மாணவன் சூரஜின் இந்த சாதனை திருச்சிக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த வெற்றியை பாராட்டும் வகையில், மஜ்லிஸ் உல் உலமா சங்கத்தலைவர் டாக்டர் ஏ.கே.காஜா நஜிமுதீன், பள்ளியின் தாளாளரும், செயலாளருமான டாக்டர் வி.எஸ்.ஏ.ஷேக் முகமது சுஹேல்,

    பள்ளி பொருளாளர் ஹாஜி ஏ.எஸ்.காஜாமியான் அக்தர் மஜ்லிசுல் உலமா சங்க உறுப்பினர் ஏ.எம்.முகமது ஆஷிக், பள்ளி முதல்வர் டாக்டர் சி.ஜே.சாக்கோ, உடற்கல்வி இயக்குநர் டி.உமா மகேஸ்வரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    ×