search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவி மரணம்"

    • பள்ளியில் படிக்கும் போது துளிர்விட்ட ஜெய்ஸ்ரீயின் காதல், கல்லூரி வரை வந்து மரணத்தில் முடிந்தது ஸ்ரீரங்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • பொதுவாக மாடியில் இருந்து கீழே குதித்தால் தலை, கை, கால், இடுப்பு என அனைத்து இடங்களிலும் அடிபட்டிருக்கும்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபால் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் மகள் ஜெய்ஸ்ரீ (வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. ஆங்கில பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    ஜெய்ஸ்ரீ ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோர் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கிஷோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் இவர் ரவுடி பட்டியலில் உள்ளார்.

    கடந்த 20-ந்தேதி கிஷோரும், ஜெய்ஸ்ரீயும் நண்பரின் வீட்டு மாடியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஜெய்ஸ்ரீ திடீரென்று மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதை தொடர்ந்து ஜெய்ஸ்ரீயை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கிஷோரை போலீசார் கைது செய்தனர். கைதான கிஷோர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும் ஜெய்ஸ்ரீயும், கடந்த 5 வருடமாக காதலித்து வந்தோம். ஜெய்ஸ்ரீ பள்ளியில் படிக்கும்போது அவரை நான் விரும்பினேன். இந்த நிலையில் ஜெய்ஸ்ரீ திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

    அதற்கு நான் 'நீ கல்லூரி படிப்பை முடி, நானும் ஒரு வேலை தேடிக்கொள்கிறேன். வேலை கிடைத்ததும் திருமணம் செய்கிறேன்' என்றேன். அதை ஜெய்ஸ்ரீ ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே எங்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது.

    இதற்காக அவள் தற்கொலை செய்வாள் என்று நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    பள்ளியில் படிக்கும் போது துளிர்விட்ட ஜெய்ஸ்ரீயின் காதல், கல்லூரி வரை வந்து மரணத்தில் முடிந்தது ஸ்ரீரங்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுவாக மாடியில் இருந்து கீழே குதித்தால் தலை, கை, கால், இடுப்பு என அனைத்து இடங்களிலும் அடிபட்டிருக்கும். ஆனால், ஜெயஸ்ரீக்கோ பின் தலையில் மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற எந்த இடத்திலும் காயம் ஏற்படவில்லை. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    • மாணவி மரணத்தில் திடீர் திருப்பமாக தந்தை மற்றும் அவரது அத்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • செல்வமணி மற்றும் மல்லிகா ஆகிய இருவரையும் போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் ஜீயபுரம் எலமனூர் தபோவனம் பகுதியில் உள்ள ஒரு புதரில் கடந்த 5-ந்தேதி பிறந்து சில மணி நேரங்களான ஒரு அழகான ஆண் சிசு வீசப்பட்டு அழுது கொண்டிருந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் அந்த குழந்தையை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அந்த குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையை பெற்றெடுத்தவர் ஜீயபுரம் எலமனூர் பகுதியைச் சேர்ந்த செல்வமணி மகள் கலைவாணி (வயது 19) என்பது தெரியவந்தது. கல்லூரி மாணவியான அவர் திருமணம் ஆகாத நிலையில் காதலன் மூலமாக கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுள்ளார்.

    பின்னர் சமூகத்தில் அசிங்கமாகி விடும் என நினைத்து மனதை கல்லாக்கி கொண்டு குழந்தையை அவர் முதலில் வீசியது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருந்த நிலையில், குழந்தை பெற்ற அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட தகவல் வெளியானது.

    இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கலைவாணி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே சிகிச்சையில் இருக்கும் போது கலைவாணி திருச்சி மாஜிஸ்திரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தனது பெற்றோர் வாயில் விஷம் ஊற்றியதாக கூறியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது.

    அதைத்தொடர்ந்து போலீசார் திருப்பராய்த்துறை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் பாபு அளித்த புகாரின் பேரில், மாஜிஸ்ட்ரேட்டுவிடம் மாணவி அளித்த வாக்குமூலத்தை பெற்று விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கலைவாணியின் தாயார் தோட்டத்துக்கு சென்ற நிலையில் மாணவியின் தந்தை செல்வமணி, அவரது சகோதரி மல்லிகா (கலைவாணியின் அத்தை) ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்தை கலைவாணியிடம் கொடுத்து குடிக்க வலியுறுத்தியதாக எழுத்து மூலமாக மாஜிஸ்திரேட்விடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அந்த அடிப்படையில் மர்மச்சாவு கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேற்கண்ட 2 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே போலீசாரின் கஸ்டடியில் இருக்கும் செல்வமணி மற்றும் மல்லிகா ஆகிய இருவரையும் போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மாணவி மரணத்தில் திடீர் திருப்பமாக தந்தை மற்றும் அவரது அத்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • துரைப்பாக்கம் கிழக்கு கடற்கரை பகுதியில் கொலையாளி சதீசை போலீசார் கைது செய்தனர்.
    • விசாரணைக்குப் பிறகு இன்று பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் சென்னை முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நள்ளிரவில் துரைப்பாக்கம் கிழக்கு கடற்கரை பகுதியில் சுற்றித் திரிந்த, கொலையாளி சதீசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

    விசாரணைக்குப் பிறகு இன்று பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை 15 நாட்கள் அதாவது 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை கோர்ட்டில் இருந்து வெளியே அழைத்து வரும்போது வழக்கறிஞர்கள் சிலர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாணவியின் தந்தை சங்கர் விபத்தில் இறந்து விட்ட நிலையில் தாத்தா மதியழகன் ஏற்பாட்டில் தான் கோபிகா படித்துள்ளார்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு தந்தையின் தேவசத்திற்கு தாத்தா வீட்டிற்கு சென்ற கோபிகா விடுதியில் தங்கி படிக்க மனமில்லை என்று உறவினர்களிடம் கூறி உள்ளார்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த ஆண்டு விபத்தில் இறந்து விட்டார். இவரது மகள் கோபிகா (வயது 18), இவர் தலைவாசலில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் கோபிகா நேற்றிரவு கல்லூரி விடுதி அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு சாப்பாட்டிற்கு அவரை கூப்பிட சென்ற மாணவிகளான காவிய நிலா, ஜெயந்தி, கல்பனா ஆகிய 3 பேரும் இதனை பார்த்து மயக்கம் அடைந்தனர்.

    இதனை அறிந்த விடுதி நிர்வாகிகள் தூக்கில் தொங்கிய கோபிகாவை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தலைவாசல் போலீசார் கல்லூரி நிர்வாகம் மற்றும் சக மாணவிகள், உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவியின் தந்தை சங்கர் விபத்தில் இறந்து விட்ட நிலையில் தாத்தா மதியழகன் ஏற்பாட்டில் தான் கோபிகா படித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தந்தையின் தேவசத்திற்கு தாத்தா வீட்டிற்கு சென்ற கோபிகா விடுதியில் தங்கி படிக்க மனமில்லை என்று உறவினர்களிடம் கூறி உள்ளார். ஆனால் உறவினர்கள் இன்னும் 2 ஆண்டுகள் தானே படிப்பை முடி, பின்னர் வீட்டிற்கு வந்து விடலாம் என்று கூறி அனுப்பி உள்ளனர்.

    இதையடுத்து கல்லூரிக்கு வந்து ஒரு வாரம் ஆன நிலையில் அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்த 3 மாணவிகளும் சொந்த ஊருக்கு சென்றதால் தனியாக இருந்த கோபிகா அதே அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மயக்கம் அடைந்த 3 மாணவிகளும் சிகிச்சை பெற்று விடுதிக்கு திரும்பினர்.

    ×