search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப்பர பவனி"

    • பங்குமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சென்றனர்
    • திருவிழா கடந்த 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல திருவிழா கடந்த 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. தினமும் காலை திருப்பலி மற்றும் மாலை 6 மணிக்கு ஜெப மாலை, புகழ்மாலை, நவநாள் மற்றும் இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 7-ம் நாள் நேற்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை நற்கருணை ஆராதனை நடந்தது. மாலை 6 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் திருச்சப்பர பவனி மற்றும் மெழுகுவர்த்தி பவனி குளச்சல் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியிலிருந்து புறப்பட்டு திருத்தலம் சென்றடைந்தது.பவனியின்போது பங்கு மக்கள் உள்பட திரளானோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அன்னையின் புகழ்பாடி சென்றனர்.

    பவனியில் வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.செய்ல்ஸ், பங்குப்பணியாளர்கள் டைனிசியஸ்,ஜாண் வினோ, விஜின் பிரைட்,அருள் சகோதரிகள் மற்றும் பங்குநிர்வாகக்குழுவினர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. கோடிமுனை பங்குப்பணி யாளர் அருள் சீலன் தலைமையில் ஆலஞ்சி பங்குப்பணியாளர் ஜோசப் அருளுரை ஆற்றினார்.

    8 ம் நாள் (இன்று) காலை நோயாளிகளுக்கான குணமளிக்கும் சிறப்பு திருப்பலி, 9-ம் நாள் காலை திருமுழுக்கு திருப்பலி, இரவு 9 மணிக்கு வாண வேடிக்கை, 10-ம் நாள் காலை திருவிழா முதல் திருப்பலி,8 மணிக்கு பெருவிழா திருப்பலி, கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் பேரருள் பணி அலோசியஸ் மரிய பென்சிகர் தலைமையில் குழித்துறை மறை மாவட்ட தலைமை செய லர் பேரருள்பணி ரசல் ராஜ் அருளுரை ஆற்று கிறார். 10 மணிக்கு திருக் கொடியிறக்கம்,மாலை 7 மணிக்கு கலை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    • காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலய திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற்றது.
    • நிறைவு நாளான நேற்று காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலய திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் நள்ளிரவில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது. விழா நாட்களில் தினசரி ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. 9-வது நாளன்று மாலையில் புரோமில்டன் தலைமையில் திருவிழா ஆராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து புனித முடியப்பர் சப்பர பவனி நடைபெற்றது. 10-வது நாள் விக்டர் லோபோ தலைமையில் ஆராதனை நடந்தது.வில்லியம் சந்தானம் மறையுரை நிகழ்த்தினார்.

    கொம்புத்துறை பங்குத்தந்தை பிரதீஸ் அடிகளார், ஊர் நல கமிட்டி தலைவர் போர்தாஸ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். புனித முடியப்பர் சபையின் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    நிறைவு நாளான நேற்று காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி பங்குதந்தை அலாய்சியஸ் முன்னிலையில் ஆறுமுகநேரி இறைமக்கள் பங்கேற்றனர்.

    தொடர்ந்து சிங்கித்துறை பங்குதந்தை ஷிபாகர் தலைமையில் அப்பகுதி மக்களும் தூத்துக்குடி, ஏரல், குரும்பூர் பகுதி மக்கள் பபிஸ்டன் அடிகளார் முன்னிலையிலும், பழையகாயல் பகுதி மக்கள் வினிஸ்டன் அடிகளார் முன்னிலையிலும், புன்னக்காயல் பகுதி மக்கள் பிராங்கிளின், ஆன்றனி ஜெபஸ்டின் ஆகியோர் முன்னிலையிலும், வீரபாண்டியன்பட்டினம் பகுதி மக்கள் கிருபாகரன், பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலையிலும், ஆலந்தலை, அமலிநகர், ஜீவா நகர் பகுதி மக்கள் ஜெயக்குமார், வில்லியம் சந்தானம், இருதயராஜ் ஆகியோர் முன்னிலையிலும் உலக நன்மைக்காக நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

    • விழா ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள் செய்து வருகிறார்கள்
    • இரவு 9 மணிக்கு சூசையப்பர் தங்கத் தேர்ப்பவனி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பங்கு தந்தை அருட்பபணியாளர் ஆன்றனி அல்கார்ந்தர் கொடியேற்றி வைத்தார். இதில் பங்கு பேரவை துணைத் தலைவர் ஜோசப், செயலாளர்சுமன், பொருளாளர் தீபக் மற்றும் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடா்ந்து நடைபெற்ற திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட செயலா் ரசல் ராஜ் தலைமை வகித்து மறையுரையாற்றினார்.

    திருவிழா நாட்களில் தினமும் பழையகோவிலில் திருப்பலி, புனிதசூசையப்பா் பீடத்தில் திருப்பலி, ஜெபமாலை ஆகியவை நடைபெறுகிறது. 7-ந் திருவிழாவான நேற்று இரவு திருச்சப்பர பவனி நடந்தது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். 8-ந் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30மணிக்கு ஜெபமாலையும் அதைத் தொடர்ந்து திருப்பலியும் நடக்கிறது. ஆலஞ்சி வட்டார முதல்வர் அருட்ப பணியாளர் தேவதாஸ் தலைமையில் திட்டுவிளை பங்கு தந்தை அருட்ப பணியாளர் சஜுமறையுரை ஆற்றுகிறார்.இரவு 9மணிக்கு திருச்சப் பரபவனி நடக்கிறது. 9-ம் நாள் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) அஞ்சு கூட்டுவிளை பங்கு இறைமக்கள் திருவிழாவை சிறப்பிக்கின்றனா்.காலை 10-30 மணிக்கு நடைபெறும் நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலிக்கு கீழமணக்குடி பங்குத்தந்தை ஆன்றனி பிரபு தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறாா். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு மாலை ஆராதனைக்கு திருநயினாா் குறிச்சி பங்குத்தந்தை லியோன் எஸ்.கென்சன் தலைமை வகிக்கிறாா். மயிலாடி பங்குத்தந்தை சைமன் மறையுறையாற்றுகிறாா்.

    இரவு 9 மணிக்கு சூசையப்பர் தங்கத் தேர்ப்பவனிநடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு தங்கத் தேரில் திருப்பலி நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 6 மணிக்கு திருவிழா நிறைவுத் திருப்பலி சுவக்கின் தலைமையில் நடைபெறும். மில்லா் மறையுறையாற்றுகிறாா். காலை 8 மணிக்கு நடைபெறும் ஆங்கிலத் திருப்பலியை ஆன்சல் ஆன்றனி நிகழ்த்துகிறாா். தொடா்ந்து கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வா் ஜீன்ஸ் மறையுரையாற்றுகிறாா். காலை 9 மணிக்கு இரு தங்கத் தோ் பவனி நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மலையாள திருப்பலியும் பகல் 12 மணிக்கு சிறப்புத் திருப்பலியும் மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள், பங்குத்தந்தை ஆன்றனி அல்காந்தா், இணைப் பங்குத் தந்தையா்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியா் அருள்நாதன், பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜோசப், செயலா் சுமன், பொருளாளா் தீபக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • மடத்துவிளை புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
    • நேற்று காலை திருவிழா சிறப்பு திருப்பலி, புதுநன்மை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.

    விழா நாட்களில் தினசரி திருப்பலி, மறையுறை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தன. விழாவின் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தினம், இளையோர் தினம், திருமணம் ஆனவர்கள் தினம், முதியோர் தினம், பக்த சபையார் அன்பியங்கள் தினம், தொழிலாளர்கள் தினம், ஒப்புரவு தினம், ஆலய அர்ச்சிப்பு தினம், பங்கு மக்கள் தினம் என்று கொண்டாடப்பட்டது.

    10- வது நாளான நேற்று காலையில் திருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் புதுநன்மை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மணப்பாடு மறை மாவட்ட முதன்மை குரு ஜான் செல்வம், சேர்ந்தபூமங்கலம் பங்குதந்தை செல்வன், அடைக்கலாபுரம் பங்குத்தந்தை பீட்டர் பால் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாலையில் புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பரபவனி தொடங்கியது.

    நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி பங்கு தந்தை அலாசியஸ் அடிகளார், மடத்துவிளை ஊர்நல கமிட்டி தலைவர் செல்வம் உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர். சப்பரபவனி மெயின் பஜார் வழியாக சண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு சென்றது. அங்கு சிறப்பு வழிபாடு முடிந்தபின் மீண்டும் சப்பரபவனி தொடங்கி புனித சவேரியார் ஆலயம் வந்தடைந்தது.

    நிறைவு நிகழ்ச்சியாக இன்று காலையில் நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து மதியம் அசனம் நடந்தது.

    விழாவிற்கான ஏற்பாடு களை மடத்துவிளை ஊர்நல கமிட்டியினர், ஆறுமுகநேரி பரதர் சமுதாய கமிட்டி தலைவர் செல்வி உள்பட பலர் செய்திருந்தனர்.

    • திரளான மக்கள் பங்கேற்பு
    • இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழாகடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கொடியேற்றிவைத்தார்.

    திருவிழா வை யொட்டி தினமும்நவநாள், திருப்பலி, அருளுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷமாலைஆராதனை, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது.9-ம் திருவிழாவான நேற்றுகாலை 10.30 மணிக்கு முதியோர் மற்றும் நோயாளிக ளுக்கான திருப்பலிநடந்தது.

    புதுக்கிராமம் பங்கு அருட்பணியாளர் மைக்கேல் நியூமன் தலைமையில் வாவத்துறை பங்கு தந்தை லிகோரியஸ் அருளுரை ஆற்றினார். மாலை6மணிக்கு நவநாள், மாலை ஆராதனை நடந்தது.காரங்காடு பங்கு அருட்பணியாளர் விக்டர் தலைமையில் கடியப்பட்டணம்பங்கு அருட்பணியாளர் பபியான்ஸ் அருளுரை ஆற்றினார்.

    இரவு 9 மணிக்கு புனித தோமையார் சொரூ பத்துடன் சப்பரப்பவனி தொடங்கியது. நள்ளிரவு வரை வீதி, வீதியாக இந்த சப்பரபவனி நடந்தது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    10-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை5 மணிக்கு தேர் திருப்பலி நடந்தது. பெங்களூரு அருட்பணியாளர் மரிய செல்வன் தலைமை தாங்கி அருளுரை ஆற்றினார்.

    காலை 7.30மணிக்கு பெருவிழா திருப்பலி நடந்தது. ஆலஞ்சி மறை வட்ட முதன்மை பணி யாளர் தேவதாஸ் தலைமையில் நாகர்கோவில் தூய ஞானபிரகாசியர் குருமடம் அதிபர் பஸ்காலிஸ்அருளுரை ஆற்றினார்.

    காலை 11 மணிக்கு தேர்பவனி நடந்தது.இதில்சின்ன முட்டம் புனித தோமையார் ஆலய பங்கு அருட்பணியாளர்கில்டஸ், பங்குஅருட்பணி பேரவை துணைத்த லைவர்அ ந்தோணி செப ஸ்தியான், செயலாளர்தினேஷ், பொருளாளர் பிரவின், துணைச்செயலாளர் மெர்லி ன்மற்றும் பங்குஅருட்பணி பேரவையினர், பங்குமக்கள் மற்றும் அருட்சகோதரிகள்கலந்து கொண்டனர்.

    மாலை 6 மணிக்கு திருக்கொடிஇறக்கம்மற்றும்நற்கருணைஆசீர் நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சின்னமுட்டம் புனித தோமையார் ஆலய பங்கு அருட்பணியாளர், பங்கு அருட்பணிபேரவையினர், பங்குமக்கள் மற்றும் அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    • 9-ம் திருவிழாவையொட்டி நடக்கிறது
    • இன்று இரவு நடக்கிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது.

    இந்தஆலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 30-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கொடியேற்றி வைத் தார். இந்த திருவிழா நாளை (9-ந்தேதி) வரை தொடர்ந்து நடக்கிறது.

    திருவிழாவை யொட்டி தினமும்நவநாள், திருப்பலி, அருளுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது.

    8-ம் திருவிழாவான நேற்று மாலை நவநாள் திருப்பலி நடந்தது. கன்னியாகுமரி மறைவட்ட முதன்மை பணியாளர் ஜான்சன் தலைமையில் கே.எஸ்.எஸ்.எஸ். செயல் இயக்குனர் மைக்கேல் ராஜ் அருளுரை ஆற்றினார்.

    9-ம் திருவிழா வான இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு முதியோர் மற்றும் நோயாளி களுக்கான திருப்பலி நடந்தது. புதுக்கிராமம் பங்கு அருட்பணி யாளர் மைக்கேல் நியூமன் தலை மையில் வாவத்துறை பங்கு தந்தை லிகோரியஸ் அருளுரை ஆற்றினார்.

    இன்று மாலை 6மணிக்கு நவநாள், மாலை ஆராதனை நடக்கிறது. காரங்காடு பங்கு அருட்பணி யாளர் விக்டர் தலைமையில் கடியப்பட்ட ணம் பங்கு அருட் பணியாளர் பபி யான்ஸ் அருளுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு சப்பரப் பவனி நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தேர் திருப்பலி நடக்கி றது. பெங்களூரு அருட்பணி யாளர் மரியசெல்வன் தலைமை தாங்கி அருளுரை ஆற்றுகிறார். காலை 7.30 மணிக்கு பெருவிழா திருப்பலி நடக்கிறது.

    ஆலஞ்சி மறை வட்ட முதன்மை பணியாளர் தேவதாஸ் தலைமையில் நாகர்கோவில் தூய ஞான பிரகாசியர் குருமடம் அதிபர் பஸ்காலிஸ் அருளுரை ஆற்றுகிறார். காலை 11 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. மாலை 6மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும்நற்கருணைஆசீர் நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சின்ன முட்டம் புனித தோமை யார் ஆலய பங்கு அருட்பணி யாளர் கில்டஸ், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் அந்தோணி செபஸ்தியான், செயலாளர் தினேஷ், பொருளாளர் பிரவீன், துணைச் செயலாளர் மெர்லின் மற்றும் பங்கு அருட்பணி பேரவையினர், பங்குமக்கள் மற்றும் அருட் சகோதரிகள் செய்து வருகிறார்கள்.

    • 8-வது திருநாள் காலையில் நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் பூஞ்சப்பர பவனியும், மதியம் தீர்த்தவாரி அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறுகின்றன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலின் ஆனி உத்திர திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் தினசரி காலையிலும் இரவிலும் சப்பரபவனி, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    நேற்று 8-வது திருநாள் காலையில் நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ நடராஜர் வெண்பட்டு உடுத்தி வெள்ளை சாதி சப்பரபவனி நடந்தது.

    இரவில் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாளுடன் பச்சை பட்டாடை உடுத்தி வில்வம், மரிக்கொழுந்து மற்றும் பச்சை இலை மாலை அணிந்து ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபமாக பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    9-வது நாளான இன்று காலையில் பூஞ்சப்பர பவனி நடைபெற்றது. இரவில் பஞ்சமூர்த்திகளின் சப்பர பவனி நடைபெறுகிறது. நிறைவு நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் பூஞ்சப்பர பவனியும், மதியம் தீர்த்தவாரி அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறுகின்றன.

    இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழு ந்தருளி முக்கிய தெருக்களின் வழியாக வீதி உலா நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர், கோவில் மணியம் சுப்பையா மற்றும் பக்த ஜன சபையினர் செய்து வருகின்றனர்.

    ×