என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருவீதி"
- புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது.
- தொடர்ந்து 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதையடுத்து 12-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 14-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மறு காப்பு கட்டுதலும் நடைபெற்றது. 15-ந் தேதி முதல் நேற்று 20-ந் தேதி வரை அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், ரிஷபம், அன்னபட்சி உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய விதிகள் வழியாக திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று 21-ந் தேதி மாலை வடிசோறு, மாவிளக்கு மற்றும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை 22-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் அம்மன் ரதம் ஏறுதலும், மாலை 3.30 மணிக்கு மகா மாரியம்மன் திருத்தேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஆண்கள் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், பெண்கள் பூவாரி போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் 24-ந் தேதி புதன்கிழமை பொங்கல் வைத்து, மாவிளக்கு கொண்டு வந்து பூஜையும், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
25-ந் தேதி கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ந் தேதி மஞ்சள் நீராடலும், இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 28-ந் தேதி காலை 6 மணிக்கு யாக பூஜை, அன்னபாவாடை மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது.
- சேலம் அம்மாபேட்டை யில் பன்னிரு திருமுறை மன்றம் சார்பாக அறுபத்துமூவர் திருவீதி உலா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கிறது.
- மதியம் பேரொளி வழிபாடு, அன்னம் பாலிப்பு நடக்கிறது.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை யில் பன்னிரு திருமுறை மன்றம் சார்பாக அறுபத்துமூவர் திருவீதி உலா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கிறது.
இதையொட்டி காலை விநாயகர், வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், சொக்கநாதர், அங்க யற்கண்ணி அம்மை உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருமஞ்சனம், பொல்லாப்பிள்ளையார், அம்மையப்பர், சேயிடை செல்வர், நாயன்மார், தொகையடியார், மணிவாசகர், சேக்கிழாருக்கு பெருந்திருமஞ்சனம், திருமுறை இன்னிசை, அருளுரை நடக்கின்றன.
மதியம் பேரொளி வழிபாடு, அன்னம் பாலிப்பு நடக்கிறது. மாலை யில் அறுபத்து மூவர் திரு வீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சிவ்பனடியார்கள் செய்துள்ளனர்.
- பரமத்தி வேலூர் வைத்தியநாதப் பெருமாள் கோவிலில் அம்மையப்பர் திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
- அடியார்கள் புடை சூழ, கைலாய வாத்தியங்களுடன் அம்மையப்பர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியில் அருள் தரும் தையல் நாயகி அம்மை உடனமர் வைத்தியநாதப் பெருமாள் கோவில் 15-ம் ஆண்டு விழா, அம்மையப்பர் திரு க்கல்யாணம் மற்றும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு திருப்பள்ளி யெழுச்சி, திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், திருமுறை பாராயணம் மற்றும் பேரொளி வழிபாடு நடைபெற்றது.
காலை 10 மணிக்கு திருமுறை வேள்வியும், 12 மணிக்கு அருள்தரும் தையல் நாயகி அம்மை உடனமர் வைத்திய நாதப் பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மதியம் 1 மணிக்கு அன்ன ம்பாலித்தலும்,மாலை 6 மணிக்கு அடியார்கள் புடை சூழ, கைலாய வாத்தியங்களுடன் அம்மையப்பர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவி ற்கான ஏற்பாடுகளை பரமத்தி தையல்நாயகி அம்மை உடனமர் வைத்திய நாதப் பெருமாள் கோயில் விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்