search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்களை"

    • நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • காலை, மாலை நேரங்களில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இதனால் காலை, மாலை நேரங்களில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுக்கு புகார்கள் சென்றது.

    ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ராமன் புதூர் பகுதியில் பஸ்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இந்த நிலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையிலான போலீசார் கேப் ரோடு பகுதியில் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார் நோக்கி வந்த பஸ்களில், மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தனர். உடனடியாக அந்த பஸ்களை போக்கு வரத்து பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    படியில் பயணம் நொடியில் மரணம். எனவே மாணவர்கள் கவனமாக பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். பெற்றோர்கள் உங்களை படிப்பதற்காக கஷ்டப்பட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கி றார்கள். நீங்கள் பஸ்களில் வீட்டிற்கு செல்லும் போதும் பள்ளிக்கு வரும்போதும் படிக்கட்டில் பயணம் செய்யாமல் பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்வது நல்லதாகும் என்று அறிவு ரைகளை கூறினார்கள்.

    ஒரு சில பஸ்களில் கூட்டம் அதிகமாக இரு ந்ததையடுத்து மாணவர்களை அந்த பஸ்சிலிருந்து இறக்கி பின்னால் வந்த பஸ்களில் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, மாணவர்கள் 3 பேரையும் காரில் ஏற்றி கடத்தி சென்றது.
    • கடத்தி சென்று அடித்து உதைத்த கும்பல் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்?, எதற்காக கடத்தலில் ஈடுபட்டு தாக்கினர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி கிராமம் தொட்டியனூர் பகுதியை சேர்ந்தவர் பாப்பையன். இவருடைய மகன் நாகராஜ். இவர் மேச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். நாகராஜும், அதே ஊரை சேர்ந்த சண்முகம் என்பவரும் ஒரே கல்லூரி ஒன்றாக பி.பி.ஏ படித்து முடித்துள்ளனர்.

    இந்தநிலையில், நேற்று படிப்பு சான்றிதழ் வாங்குவதற்காக மேச்சேரி கல்லூரிக்கு நாகராஜ், சண்முகம்மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேர் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளனர். மேச்சேரி சென்ற 3 திரும்பி வரும்போது, மேச்சேரி அருகேயுள்ள சந்திரமாள் கடை பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் 3 பேரும் டீ குடித்துள்ளனர். அப்போது ஆம்னி கார் ஒன்று அவர்கள் அருகில் வந்து நின்றது.

    பின்னர் அதிலிருந்து இறங்கிய ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, மாணவர்கள் 3 பேரையும் காரில் ஏற்றி கடத்தி சென்றது. பின்னர் அருகில் உள்ள ஏரிக்கு அவர்களை கொண்டு சென்றனர். பின்னர் அங்கு வந்த 10-க்கும் மேற்பட்டோர், 3 பேரையும் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், வெட்டி கொலை செய்துவிடுவதாகவும், ஜெயிலுக்கு செல்வ தெல்லாம் ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல என்றும் கூறியபடியே கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

    அப்போது அங்கு வந்த ஒருவர், நான் கடத்தி வர சொன்னது இவர்கள் இல்லை, அவர்களை விட்டுவிடுங்கள் என்று கூறிய பின்னர் 3 பேரையும் உயிரோடு விட்டனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த மாணவர்கள் 3 பேரும் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறிதித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில் சரியான நேரத்தில் அந்த நபர் வராவிட்டால், எங்களை அடித்தே கொலை செய்திருப்பார்கள் என கண்ணீர் மல்க கூறினர்.

    இந்த கடத்தல் சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் நாகராஜ் உட்பட 3 பேரை காரில் கடத்தி சென்று அடித்து உதைத்த கும்பல் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்?, எதற்காக கடத்தலில் ஈடுபட்டு தாக்கினர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவர்களை கடத்தி மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×