search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுதொழில்"

    • கோன் சாம்பிராணியை வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
    • தயாரித்து வணிக ரீதியாக சந்தைப்படுத்துங்கள்.

    பூஜையில் சுவாமிக்கு சாம்பிராணி போடும் வழக்கம் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வழக்கம் ஆகும். பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், நமக்கு வரும் கடினமான துன்பங்கள் எல்லாமே சாம்பிராணி போடப், போட விலகி ஓடும் என்பது ஒரு நம்பிக்கை.

    வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் காலை சாம்பிராணி தூபம் போடுவது பலரும் மேற்கொள்ளும் பாரம்பரிய வழக்கமாகும். இதற்கு தேவைப்படும் கோன் சாம்பிராணியை குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே தயாரிக்க முடியும். இதை எப்படி எளிமையான முறையில் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    உலர்ந்த பூக்கள் கப் (ரோஜா. சாமந்தி, மல்லிகை பூக்களின் கலவையாக எடுத்துக் கொள்ளுங்கள்)

    சாமகிரி 1 கப் (வாசனை மூலிகைகளின் கலவை)

    ஏலக்காய் - 10

    கிராம்பு - 10

    பச்சைக் கற்பூரம் - 5 வில்லைகள்

    மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    சந்தனப் பொடி 2 டேபிள் ஸ்பூன்

    வெட்டிவேர் - ஒரு கைப்பிடி

    ரோஜா- ஒரு கப்

    3 டீஸ்பூன்

    ரோஸ் எசன்ஸ்

    பன்னீர் - கப்

    செய்முறை:

    உலர்ந்த பூக்களை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை சல்லடையில் கொட்டி சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு சாமகிரி, ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், மஞ்சள் தூள். சந்தனப் பொடி, வெட்டி வேர் ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ளுங்கள்.

    அகன்ற பாத்திரத்தில் இரண்டு பொடிகளையும் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு அதில் நெய் ஊற்றி நன்றாகக் கலக்க வேண்டும்.

    அதன்பிறகு அந்த கலவையில் சிறிது சிறிதாக பன்னீர் சேர்த்து கிளறுங்கள். இந்த கலவை புட்டு மாவு பதத்தில் இருக்க வேண்டும். அதாவது கையில் பிடித்தால் உதிராமல் இருக்க வேண்டும்.

    பின்னர் கோன் மோல்டில் வைத்து இறுக்கமாக சுருட்டி ஒட்டவும். அதன் உள்ளே இந்த கலவையை வைத்து அழுத்தி, வெளியில் எடுத்து வைத்தால் கோன் வடிவத்தில் சாம்பிராணி தயாராகிவிடும். இவற்றை இரண்டு நாட்கள் வெயிலில் காயவைத்து எடுக்க வேண்டும்.

    இந்த சாம்பிராணியை பூஜை அறையில் பயன்படுத்தும்போது, வீட்டில் தெய்வீக மணம் பரவும். முதலில் உங்களுடைய தேவைக்காக தயாரித்து பயன்படுத்திய பிறகு, வணிக ரீதியாக சந்தைப்படுத்துங்கள்.

    • சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது.
    • இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

    நம்முடைய பாரம்பரிய உணவுப் பொருட்களான சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும், தூக்கத்தை சீராக்கும், அதிகப்படியான உடல் எடையையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். புற்றுநோய் வராமல் பாதுகாக்கும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்தும்.

    பல்வேறு சிறுதானியங்களை ஒன்றாக சேர்த்து அரைத்த சத்துமாவு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. இல்லத்தரசிகள் இந்த சிறுதானிய சத்துமாவு தயாரிப்பை சுயதொழிலாகவும் செய்ய முடியும். எந்தவிதமான பதப்படுத்தும் பொருட்களும் சேர்க்காமல் தயாரிப்பதால், சிறுதானிய சத்துமாவுக்கு வரவேற்பு நன்றாகவே இருக்கும். பெரிய அளவிலான முதலீடுகள் இதற்கு தேவையில்லை. முதலில் உங்களுடைய தேவைக்காக தயாரித்து பயன்படுத்தி பாருங்கள். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வியாபார நோக்கில் தயாரித்து விற்பனை செய்யலாம். இது பற்றிய தகவல்கள் இதோ...

    சிறுதானிய சத்துமாவு தயாரிக்க தேவையான பொருட்கள்:

    பிசினி அரிசி, மூங்கில் அரிசி, கருப்பு கவுனி அரிசி. மாப்பிள்ளை சம்பா அரிசி, சிவப்பு அரிசி, முழு கோதுமை. வெள்ளை சோளம், ராகி, கொள்ளு, குதிரை வாலி, வரகு,சாமை, தினை, கம்பு, பார்லி, இவற்றை தலா 100 கிராம் அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

    செய்முறை:

    ஒரு பெரிய பாத்திரத்தில் எல்லா பொருட்களையும் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 அல்லது 4 முறை கழுவிக் கொள்ளவும். பின்னர் தண்ணீரை நன்றாக வடியச் செய்து, சுத்தமான பருத்தித் துணியில் அவற்றை கொட்டி நிழலில் உலர்த்தவும்.

    ஈரப்பதம் முழுவதுமாக நீங்கிய பிறகு, மாவு மில்லில் கொடுத்து மென்மையான மாவாக பொடித்துக் கொள்ளவும். மாவில் இருக்கும் சூடு முழுவதுமாக நீங்கும் வரை ஆற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அது சூடானதும், இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி மிதமான தீயில் வறுக்கவும். சுத்தமான பருத்தித் துணியில் அந்த மாவைக் கொட்டி மீண்டும் ஆற வைக்கவும்.

    பின்னர் ஈரப்பதம் இல்லாத, காற்று புகாத, சுத்தமான சில்வர் அல்லது கண்ணாடி டப்பாக்களில் மாவை நிரப்பி பத்திரப்படுத்தவும். தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தி வரலாம்.

    சிறுதானிய சத்துமாவு கஞ்சியை இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதைத் தவிர்க்கலாம். பள்ளி செல்லும் குழந்தைகள், இளம் பருவத்தினர். கர்ப்பிணிகள், முதியவர்கள் இதை சாப்பிடலாம். இந்த சத்துமாவில் கஞ்சி மட்டுமில்லாமல் புட்டு.

    கொழுக்கட்டை இடியாப்பம் என பலவிதமான பல காரங்களை தயாரித்து வழங்கலாம். வணிக முறையில் சந்தைப்படுத்துவதற்கான சான்றிதழ்களைப் பெற்று. தரமான முறையில் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.

    • ஏழ்மையான பின்னணியில் இருந்து முன்னுக்கு வந்தவர்.
    • வீட்டு பராமரிப்பு பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

    தனக்கு தெரிந்த கைத்தொழிலை ஏழை-எளிய பெண்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களது வாழ்க்கையிலும் ஒளி ஏற்றுகிறார், கலைச்செல்வி. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவரான இவர், ஏழ்மையான பின்னணியில் இருந்து முன்னுக்கு வந்தவர்.

    வீட்டைச் சுத்தமாக, சுகாதாரமாகப் பராமரிக்கும் `ஹவுஸ் கீப்பிங்' பொருட்களை தயாரிக்க கற்றுக்கொண்டு, அதை தொழிலாக முன்னெடுத்து இன்று அரசு அலுவலகங்கள் வரை கொண்டு சேர்த்திருக்கிறார். மேலும், தனக்கு தெரிந்த இந்த கைத்தொழிலை, மற்றவர்களுக்கும் இலவசமாக கற்றுக்கொடுக்கிறார். கடந்த 34 வருடங்களாக, தொடர்ந்து வரும் இந்த சேவை பற்றி, கலைச்செல்வி பகிர்ந்து கொண்டவை...

    `இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கம் நிறைந்த நாட்டில், வீட்டுப் பராமரிப்பு பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுதான், இன்று பல பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வருகிறது. நானும், அப்படித்தான் வீட்டுப்பராமரிப்பு பொருள் தயாரிப்பைக் கற்றுக்கொண்டேன். சின்ன முதலீட்டில் நல்ல லாபம் தரக்கூடியதாக இருந்ததால், இன்று வரை தொடர்கிறேன்'' என்றவர்,சிறுதொழிலாக முன்னெடுத்து இன்று, அரசு அலுவலகங்களுக்காக `ஹவுஸ் கீப்பிங்' பொருட்களை தயாரித்து வழங்கும் அளவிற்கு, முன்னேறி இருக்கிறார்.

    `ஏழை-எளிய பெண்களின் வாழ்க்கை முன்னேற, சிறுதொழில் மிகவும் அவசியம். அதுவும் வீட்டுப் பராமரிப்பு பொருள் தயாரிப்பு சம்பந்தமானதாக இருந்தால், பெரியளவில் முன்னேற்றம் இருக்கும். என் வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக அதை உணர்ந்து கொண்டேன். இப்போது, அதை மற்ற ஏழைப் பெண்களுக்கும் கற்றுக்கொடுக்கிறேன்' என்றவர், இதுவரை சென்னையை சுற்றியிருக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச பயிற்சி வழங்கி, அவர்களை சிறுதொழில் முனைவோர்களாக மாற்றியிருக்கிறார். சிறிய முதலீட்டிற்குக் கூட வசதியில்லாதவர்களுக்கு, தன்னால் முடிந்த தொழில் வளர்ச்சி முயற்சிகளை முன்னெடுக்கிறார்.

    `நான் சுயமாகவே பயிற்சி கொடுப்பது ஒருபக்கம் இருந்தாலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கும், பெண்கள் குழுக்களுடன் இணைந்து, 2 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறேன். பொதுவாக, வீட்டுப்பராமரிப்பு பொருட்களை தயாரிக்க, வெறும் 2 நாட்கள் பயிற்சியே போதுமானது. 2 நாட்கள் பயிற்சியிலேயே, ரூம் பிரஷ்னர், லிக்வீட் டிடெர்ஜெண்ட், டிடெர்ஜெண்ட் பவுடர், பினாயில், டிஷ்வாஷர், சானிடைஷர்... இப்படியாக 10 பொருட்களைத் தயாரிக்க கற்றுக்கொள்ளலாம். அது பல குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்' என்பவர், தொழில்முனைவோர் வளர்ச்சி பணிகளுக்காக பல விருதுகளை பெற்றிருக்கிறார். சமீபத்தில் கூட, இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    `பெண்களின் ஏழ்மை, அவர்களை தொழிலாளர்களாக மாற்றிவிடுகிறது. சிலர் அடுக்குமாடிகளில் வீட்டு வேலை செய்கிறார்கள். சிலர் ரசாயன நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார்கள். இந்த நிலையை மாற்றி, ஏழை பெண்களையும் சுய தொழில் செய்யும் தொழில்முனைவோராக மாற்றுவதுதான் என் ஆசை. அந்த பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்' என்கிறார்.

    • காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.
    • கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடைய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபா ன்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டைச் சார்ந்த சிறுபான்மை யினர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்க ப்படவுள்ளது.

    'டாம்கோ மூலம் செயல்ப டுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனி நபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் பின்வரும் தேதிகளில் தொடர்புடைய வட்ட அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

    நாளை ( செவ்வாய் கிழமை) காலை பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 21-ந் தேதி காலை அதிராம்பட்டினம் கூட்டுறவு நகர கடன் சங்கம் லிட் அலுவலகத்திலும், 28-ந் தேதி காலை கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், அடுத்த மாதம் 2-ந் தேதி திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.

    மேற்படி, கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள்.

    இவர்கள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்ப ங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, கடன் மனுக்களுடன் மனுதாரரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது / செலான் (அசல்) 

    • சுமார் 8000 வாடிக்கையாளர்கள் கொண்ட கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் மற்றும் தொழில்கடன் வழங்கபட்டு வருகிறது.
    • மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்குவதற்கு கடனுதவியாக ரூ. 2 லட்சம் வழங்கி கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகர கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி 23 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நகர கூட்டுறவு வங்கியில் சுமார் 8000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியின் நகைக்கடன் மற்றும் பல்வேறு தொழில்கடன் வழங்கபட்டு வருகிறது.

    இந்த வங்கியில் முதன்முதலாக மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறுதொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் வழங்கும் விழா வங்கியில் நடைபெற்றது. விழாவிற்கு வங்கி செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.

    விழாவில் வங்கியின் தலைவர் பொறுப்பு அன்பரசு மறைஞாயநல்லூர் செவ்வாழை மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்குவதற்கு கடனுதவியாக ரூ. 2 லட்சம் வழங்கி மகளிர்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்கள் ரத்தினவேல், கண்ணன், மகாராஜான் நகராட்சி மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் வங்கி பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

    ×