என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு"
- நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
- தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி, போதை தடுப்பு குறித்து பேசினார்.
திருப்பூர்:
தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் திருப்பூர் வடக்கு, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பில் நெகிழி இல்லா தமிழகம் கலைநிகழ்ச்சி திருப்பூர் மத்திய பஸ் நிலையம் முன் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்–கு–மார் முன்–னிலை வகித்தார். உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது, 'பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். நெகிழி பொருட்கள் அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்தாக அமையும். அனைவரும் துணிப்பையை பயன்ப–டுத்த வேண்டும். பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்க சபதமேற்போம்' என்றார்.
உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பாரதிராஜா, சத்தியன், சுற்றுச்சூழல் பொறியாளர் திப்பு சுல்தான் ஆகியோர் துணிப்பையை பயன்படுத்தும்போது இயற்கை எவ்வாறு பாதுகாக்கப்படு–கிறது என்பதை விளக்கி கூறினார்கள். தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி, போதை தடுப்பு குறித்து பேசினார். மாணவ செயலாளர்கள் காமராஜ், அருள்குமார், ராஜபிரபு ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தியும், மஞ்சப்பை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மாணவர் ஒருவர், பிளாஸ்டிக் அரக்கன் போல் வேடமணிந்து துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சரவணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
- துணிப்பைகள் வழங்கும் திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்.
- ஊராட்சி நிர்வாகத்துடன் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சியில் கடந்த ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைகள், பேக்கரிகள், உணவு விடுதிகள் போன்றவற்றில் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இதற்கிடையே பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடு தோறும் துணிப்பைகள் வழங்கும் திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்.
இதன்படி முதற்கட்டமாக 2000 வீடுகளுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், கரைப்புதூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளுக்கு துணி பைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. கரைப்புதூர் ஊராட்சியை பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றும் முயற்சியில் ஊராட்சி நிர்வாகத்துடன் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
- பிளாஸ்டிக், தெர்மாகோல் தட்டு மற்றும் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
- கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திருப்பூர்:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திருப்பூர் மாவட்டம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 இணைந்து பல்லடம் பேருந்து நிலையத்தில் ஒருதடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டியும், மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டியும் கலைநிகழ்ச்சி நடத்தினர்.
முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பிளாஸ்டிக் தவிர்ப்பு பற்றி விரிவாக பொது மக்களுக்கு விளக்கினார். மேலும் பிளாஸ்டிக், தெர்மாகோல் தட்டு மற்றும் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
இயற்கையாக கிடைக்கக்கூடிய மற்றும் எளிதில் மக்கக்கூடிய பொருட்களான துணிப்பைகள், வாழை இலை, காகித குவளைகள் போன்றவற்றை பயன்படுத்தவேண்டும்.நெகிழிப் பொருட்கள், மண் வளத்தை கெடுத்து விடும்.பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் சபதம் எடுப்போம் என்று பேசினார். பிறகு மாணவச் செயலர்கள் அருள்குமார், அரவிந்தன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருக்கும் பொது மக்களுக்கு மஞ்சப்பைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி நெகிழி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் இளம் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- சூழல் மற்றும் மண்வளம் காக்கும் விதமாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
- அரசு பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் சுற்றுப்புற சூழல் மற்றும் மண்வளம் காக்கும் விதமாக தமிழக அரசு அறிவித்த பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து மஞ்சப்பை முன்னெடுப்பை தொடங்குவோம்.
பிளாஸ்டிக்கில் இருந்து நமது உலகை மீட்டெடுக்கும் ஓர் முயற்சி குறித்த விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இப்பேரணியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், அரசு பள்ளி மாணவ மாணவியர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு பேரணி தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக வந்து நிறைவடைந்தது.
- கோட்டைப்பட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- இதில் பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள கோட்டைப்பட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கூட்டம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனிதா மாணிக்கம் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் நாகஜோதி கண்ணன், ஊராட்சி செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி, தூய்மை பாரதத்திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சின்னன் ஆகியோர்பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி பேசினர். கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்