search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம ஊராட்சி"

    • கிராம ஊராட்சிகள் சுயமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • சிவகங்கை கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் மாவட்ட ஊராட்சி மன்றத்தலை வர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. 12 ஊராட்சி மன்றத்தலை வர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் ஒருமனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

    மாவட்டத்தில் உபரி நிதிகளை உடனே ஊராட்சி பணிகளுக்கு கலெக்டர் ஒதுக்க வேண்டும். பஞ்சா யத்து ராஜ் சட்டம் 1994-ன்படி சிவகங்கை மாவட் டத்தில் கிராம ஊராட்சிகள் சுயமாக செயல்பட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி செயலாளர் பணி நியமனம் செய்ய ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்க நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை நடை முறைப்படுத்த வேண்டும்.

    ஜல்ஜீவன் திட்டம் தொடர்பாக அந்தந்த கிராம ஊராட்சிகளில் ஒப்பந்த புள்ளிகள் கோராமல் ஊராட்சி ஒன்றியங்களில் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்ப டுகிறது. இதனால் கிராம ஊராட்சியின் அதிகாரம் பறிக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட தீர்மா னங்களை முதல் -அமைச்ச ரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப் பட்டது.

    • காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறவுள்ளது.
    • சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கபடுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :- திருப்பூர் மாவட்டத்திலு ள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினமான 22 ந்தேதி நாளை காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்க ளில் நடைபெ றவுள்ளது. கிராம சபைக் கூட்டத்தில் கீழ்கண்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்,கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்தும்,கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை.சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் விவாதி க்கபடுகிறது.மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், போன்றவை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு ள்ளார்கள். எனவே, கிராம பொது மக்கள் (சம்மந்தப்பட்ட ஊராட்சியின் வாக்காளர்கள் அனைவரும்) மேற்படி கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சி களின் வளர்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • 30-ந் தேதி தொழுநோய் ஒழிப்புதினம் கடைபிடிக்கப்படுகிறது.
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழுநோய் ஒழிப்புதினமான 30-ந் தேதி அன்று பகல் 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

    எனவே, பொதுமக்கள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி களில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2024க்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • மாநில அரசுகளுடன் இணைந்து இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

     உடுமலை :

    கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வரும், 2024க்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.மாநில அரசுகளுடன் இணைந்து இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

    கிராமப்புற வீடுகளில் முழுமையாக செயல்படும் குடிநீர் குழாய் இணைப்பை 62 சதவீத வீடுகள் பெற்றுள்ளன என மத்திய நீர்வளத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 799 வீடுகள் உள்ளன.கடந்த ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் 77 கிராம ஊராட்சிகளில் 25 ஆயிரம் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டது.நடப்பாண்டு ஜல் ஜீவன் திட்டம் மட்டுமின்றி 14 மற்றும் 15வது நிதிக்குழு மானிய நிதி திட்டம், குடிநீர் வடிகால் வாரிய திட்டம் மற்றும் மாநில அரசின் பிற திட்டங்கள் என அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி ஊக்குவிக்கப்படுகிறது.

    இது குறித்து ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஜல் ஜீவன் திட்டம் மற்றும் பிற ஒருங்கிணைந்த மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 729 வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் சில புதிய திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது.மீதமுள்ள 77 ஆயிரத்து 70 வீடுகளுக்கு வரும் ஆண்டுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விடும்.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 2024ல் முடிக்கப்பட வேண்டிய இலக்கு 2023ல் முடிக்கப்பட்டு விடும் வகையில் செயலாற்றி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 265 கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15ந் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
    • கிராம ஊராட்சிகளின் தணிக்கை உள்ளிட்டவைகள் தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளன.

    திருப்பூர் :

    சுதந்திர தினத்தை ஒட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15-ந்தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15ந் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

    இதில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதத்தில், சுகாதாரத்தை பேணுதல், நெகிழி உற்பத்திப் பொருள்களை தடை செய்தல், நீா் வழிப்பாதை மற்றும் நீா் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கிராம ஊராட்சிகளின் தணிக்கை உள்ளிட்டவைகள் தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளன.

    இந்த கிராம சபைக் கூட்டங்களை நடத்தும் வகையில் ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.ஆகவே, பொதுமக்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக நல்ல ஆலோசனைகள் குறித்து விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வருவாய் ஆதாரத்தைப்பெருக்க, கிராமங்களில் இயங்கும் நிறுவனங்களிடம் ஒருமுறை நிறுவன கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • உரிமம் புதுப்பிப்பு கட்டணம் வசூலிக்கப்படாததால், பல ஊராட்சிகள், வறுமை நிலையில் உள்ளன.

    திருப்பூர் :

    ஊராட்சிகளுக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட இனங்கள் மட்டுமே முக்கிய வருவாய் இனமாக உள்ளன. வருவாய் ஆதாரத்தைப்பெருக்க, கிராமங்களில் இயங்கும் நிறுவனங்களிடம் ஒருமுறை நிறுவன கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அந்நிறுவனங்கள், ஆண்டுதோறும், உரிமக்கட்டணம் செலுத்தி, உரிமம் புதுப்பிப்பு செய்து கொள்ள வேண்டும். ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சி நிர்வாகங்கள், உரிமக்கட்டணம் வசூலிப்பதில்லை. புற்றீசல் போல நிறுவனங்கள் உருவாகிய பின்பும் கூட, உரிம புதுப்பிப்பு கட்டணம் வசூலிக்கப்படாததால், பல ஊராட்சிகள், வறுமை நிலையில் உள்ளன.

    இந்நிலையில் நிறுவனங்களிடம் இருந்து உரிமம் புதுப்பிப்பு கட்டணம் வசூலிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.அவ்வகையில் உடுமலை ஒன்றியத்தில், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் எந்திரம் நிறுவி தொழில் உரிமம் வழங்க, திருத்திய உரிமக்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- ஒன்று முதல் 5 குதிரைத்திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 50 ரூபாய், 5 முதல் 10 குதிரைத்திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 100 ரூபாய், 10 முதல் 25 குதிரைத் திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 80 ரூபாய்,25 முதல் 50 குதிரைத்திறன் வரை ஒவ்வொரு குதிரைத் திறனுக்கும் 70 ரூபாய், 51 முதல் 100 குதிரைத் திறன் வரை, ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 60 ரூபாய், 100 முதல் 200 குதிரைத் திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும், 40 ரூபாய்,201 முதல் 500 குதிரைத் திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 30 ரூபாய், 501 குதிரைத்திறனுக்கு மேல் ஒவ்வொரு குதிரைத் திறனுக்கும் 20 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல எந்திரம் ஒன்றுக்கு 50 ரூபாய், ஆய்வுக்கட்டணம் 3,000 ரூபாய், வரைபடக் கட்டணம், 500 ரூபாய், நிலம் கட்டணம் 2,000 ரூபாய் என வசூலிக்கப்படவுள்ளது.எனவே கிராம ஊராட்சி பகுதியில் இயங்கும் நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் வாயிலாக நோட்டீஸ் அனுப்பப்படவும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் 13,884 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • புதிய பல்பு கடைகளில் வாங்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    உடுமலை :

    மின் பயன்பாட்டை குறைக்க மாநிலம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.அவ்வகையில் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் 12,008 எல்.இ.டி., 1,200 சி.எப்.எல்., 627 டியூப் லைட், 36 சோலார், 1 சோடியம், 1 மெர்குரி, 11 ைஹமாஸ் என13,884 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.ஏதேனும் பாதிப்பு அல்லது பழுது ஏற்பட்டால் அவைகள் புதிதாக மாற்றப்படுகின்றன. இதற்கான உதிரிபாகங்களும், ஊராட்சி நிதியில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.இந்நிலையில் ஊராட்சிகளில் எல்.இ.டி., விளக்குகள் பழுதானால் அதற்குரிய புதிய பல்பு கடைகளில் வாங்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-

    கிராம ஊராட்சிகள் புதிதாக எல்.இ.டி., விளக்குகள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான, ஒப்புதல் கடிதமும் அந்தந்த ஊராட்சிகளில் இருந்தும் பெறப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகள் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இந்த தடை உள்ளது.இதனால், கிராமங்களில் விளக்குகள் பழுதானால் சீரமைக்கும் வரை அப்பகுதி இருள் சூழந்தே காணப்படும். அரசின் இந்த உத்தரவு அதிகாரிகளை குழப்பம் அடையச்செய்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×