என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தச்சநல்லூர்"
- மாமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு வரும் அமர்வுக்கான அகவிலைப்படி ரூ.800-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக மாற்றப்படுகிறது.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
திருக்குறளை வாசித்து மேயர் சரவணன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு கவுன்சிலர்கள் தங்களது வார்டு சம்பந்தமான குறை களை தெரிவித்து பேசினர்.
கலைஞர் நினைவாக
பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மாமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு வரும் அமர்வுக்கான அகவிலைப்படி ரூ.800-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக மாற்றப்படுகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைப்பதை வரவேற்பது, மாநகராட்சி அலுவலகம் எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்திற்கு டாக்டர் கலைஞர் வணிக வளாகம் என பெயர் சூட்டுவது.
ஓய்வெடுக்கும் அறை
புதிய பஸ் நிலையத்தில் முதல் தளத்தில் ஏலம் போகாத 60 கடைகளை பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகளாக மாற்ற செலவினம், ரூ.447.75 கோடி மதிப்பிட்டில் தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் நடக்கும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை உள்ளிட்டவைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் கவுன்சிலர்கள் தச்சை சுப்பிரமணியன், கருப்பசாமி கோட்டை யப்பன், சுதா மூர்த்தி, அனுராதா சங்கரப்பாண்டி யன், கிட்டு என்ற ராம கிருஷ்ணன், சந்திரசேகர், ரவீந்தர், முத்துலட்சுமி சண்முகையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தச்சநல்லூரை சேர்ந்த சீதாராமன் , ராக்கேஷ் என்பதும் அவர்களிடம் 1 கிலோ 960 கிராம் கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
- போலீசார் நடந்திய விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.
செய்துங்கநல்லூர்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு நான்கு வழிச்சாலை பகுதியில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் தச்சநல்லூரை சேர்ந்த சீதாராமன் (வயது25), ராக்கேஷ் (19) என்பதும் அவர்களிடம் 1 கிலோ 960 கிராம் கஞ்சா இருந்ததையும் கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்