என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதகுரு"

    • மணமக்களின் பெற்றோர் இந்த திருமணத்தை யூத முறைப்படி நடத்த முடிவு செய்தனர்.
    • இறுதியில் ஹீப்ரு பாடல்கள் படியும், நடனமாடியும் இந்த விழா நடந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஏராளமான யூத ஆலயங்கள் உள்ளன. மேலும் இங்கு யூத இனத்தை சேர்ந்தவர்களும் வசித்து வந்தனர். தற்போது இந்த ஆலயங்கள் அனைத்தும் காட்சிகூடங்களாக மாறிவிட்டன. இதனால் இங்கு திருமணம் போன்ற சடங்குகள் இப்போது நடப்பதில்லை.

    இந்நிலையில் கொச்சியை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகள் மஞ்சுஷா மரியம் இம்மானுவேலுக்கும், அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ரிச்சர்ட்டு ரோவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    மணமக்களின் பெற்றோர் இந்த திருமணத்தை யூத முறைப்படி நடத்த முடிவு செய்தனர். தற்போது யூத ஆலயங்களில் இந்த திருமணம் நடப்பதில்லை என்பதால் கொச்சியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் யூத ஆலயம் போன்ற கூடாரம் அமைக்கப்பட்டது.

    அந்த கூடாரத்தில் யூத முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. இதனை நடத்தி கொடுக்க இஸ்ரேலை சேர்ந்த மதகுரு வந்திருந்தார். அவர் முன்னிலையில் முதலில் மணமக்கள் மோதிரம் மாற்றி திருமண ஒப்பந்தம் செய்து கொண்டனர். அடுத்து கெதுபா படித்து, கண்ணாடியை உடைத்து திருமண பந்தத்தில் இணைந்தனர். இறுதியில் ஹீப்ரு பாடல்கள் படியும், நடனமாடியும் இந்த விழா நடந்தது.

    இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதுபற்றி விருந்துக்கு வந்தவர்கள் கூறும்போது, கடந்த 2008-ம் ஆண்டு இங்கு யூத முறைப்படி திருமணம் நடந்தது. அதன்பின்பு 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அதுபோன்ற திருமணம் நடந்துள்ளது, என்றனர்.

    • க்விலேரியோ ஏசுநாதரின் மறுஅவதாரமாக தன்னை அறிவித்து கொண்டுள்ளார்
    • இந்த அமைப்பிற்கு 3500க்கு மேற்பட்டோர் ஆதரவாளராக உள்ளனர்

    தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸில் உள்ளது மிண்டனாவ் நகரம்.

    இந்நகரத்தில் தற்போது ஒமேகா டி சலோனேரா (Omega de Salonera) என்றும் முன்னர் சொக்கோரோ பயனிஹான் சேவைக்குழு (Soccoro Bayanihan Services) என்றும் அழைக்கப்பட்ட ஒரு மத அமைப்பு செயல்படுகிறது. தன்னை பின்பற்றுபவர்களை தவிர வேறு எவராலும் எளிதில் உள்ளே நுழைய முடியாதவாறு ஆயுதமேந்திய காவலர்கள் சூழ, அதன் தலைவர் ஜே ரென்ஸ் பி க்விலேரியோ (Jey Rence B Quilario) என்பவரால் ஒரு மலைப்பகுதியில் இது செயல்படுகிறது.

    2019ல் அந்த பிராந்தியத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்திற்கு பிறகு அச்சத்தில் வாழ்ந்து வந்த மக்களிடம், உலகம் அழிய போவதாகவும் அதிலிருந்து தப்ப தன்னிடம் சரணடையுமாறும் கூறி மூளை சலவை செய்துள்ளார். ஏசுநாதரின் மறுஅவதாரமாக தன்னை அறிவித்து கொண்டுள்ள க்விலேரியோ மீது அவரது ஆதரவாளர்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

    உறுப்பினர்களிடம் பெருகின்ற நிதியிலிருந்தும், போதை மருந்து கடத்தல் மூலமாகவும் நிதி பெறும் இந்த அமைப்பில் சுமார் 1600 குழந்தைகள் உட்பட 3,500 பேருக்கும் மேல் நம்பிக்கையாளர்களாக உள்ளனர்.

    சில தினங்களுக்கு முன்னால் 8 குழந்தைகள் அங்கிருந்து தப்பித்து வந்தனர். அங்கு நடைபெறும் கொடுமைகள் குறித்து அவர்கள் காவல்துறையிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளனர்.

    க்விலேரியோ, மைனர் சிறுமிகள் மீது பாலியல் தாக்குதல் நடத்துவதாகவும், அங்குள்ள ஆண்களுக்கு அச்சிறுமிகளை கட்டாய திருமணம் செய்து வைப்பதாகவும், அதற்கு அச்சிறுமிகளின் பெற்றோர்களும் ஒப்பு கொள்வதாகவும், அந்த மலைப்பகுதியில் வசிக்கும் பிற சிறுமிகள் மீதும் அவர் பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுவதாகவும் புகாரளித்தனர்.

    தற்போது இவர் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

    • தன்பாலின ஈர்ப்பாளராக இருந்த இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
    • சீக்கிய மதகுரு ஹர்தேவ் திருமணம் செய்து வைத்தார்.

    பஞ்சாப், பதிந்தா நகரை சேர்ந்த மணிஷா(வயது 21), டிம்பிள்(27). இணை பிரியாத தோழிகளான இருவரும் சண்டிகர் அருகில் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை செய்தபோது காதலித்தனர்.

    தன்பாலின ஈர்ப்பாளராக இருந்த இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து பெற்றோர் மூலமாக உள்ளூர் சீக்கிய குருத்வாராவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என 70 பேர் இத்திருமணத்தில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சீக்கிய மதகுரு ஹர்தேவ் திருமணம் செய்து வைத்தார்.

    பின்னர் இந்த திருமணம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. உடனே, இதுகுறித்து சீக்கிய மத குருக்களின் தலைவரான ரக்பீர் சிங் தன்பால் திருமணம் இயற்கைக்கு மாறானது. சீக்கிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்றார். இதை தொடர்ந்து மதகுரு ஹர்தேவ் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாகெஸ்தான் பிராந்தியத்தில் இந்த வெறிச்செயல்கள் அரேங்கேற்றியுள்ளது.
    • இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயகராவதிகளில் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

    ரஷ்யாவில் வார இறுதி நாளான [ஞாயிற்றுக்கிழமை] நேற்று [ஜூன் 23] யூத வழிபாட்டுத் தளங்கள் மீதும் போலீஸ் நிலையம் மீதும் துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் 1 மதகுரு, 14 போலீசார் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாகெஸ்தான் பிராந்தியத்தில் இந்த வெறிச்செயல்கள் அரேங்கேற்றியுள்ளது.

     

    நேற்று அப்பகுதியில் உள்ள சர்ச்களுக்குள்ளும் Synagogue எனப்படும் யூத வழிபாட்டுத் தளங்களுக்குள்ளும் திடீரென துப்பாக்கிகளுடன் நுழைந்த அந்த கும்பல் வழிபாட்டுக்காக கூடியிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர்.

    தாக்குதலினால் மகாச்காலா பகுதியில் உள்ள சர்ச் உட்பட இரண்டு சர்ச்கள் தீப்பற்றி எறிந்தன. சம்பவங்களின்போது அங்கு கூடியிருந்த மக்கள் உயிர்பிழைத்த நிலையில் மதகுரு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மேலும் தப்பிச் செல்லும்போது போலீஸ் போஸ்ட் மீதும் அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இந்த மொத்த தாக்குதல்களிலும் இதுவரை 14 போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் உடனடியாக நடந்த்து இல்லை என்றும் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

    இதுவரை இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயகராவதிகளில் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் தப்பியோடியவர்களை தேடும் பனி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்துக்கு முன்னாள் ரஸ்ய தலைநகர் மாஸ்க்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி ஹாலில் ஐஎஸ்ஐஎஸ்  தீவிரவாதிகலால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 133 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த வெறிச்செயல் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்கானுடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
    • மத அடிப்படைவாத அமைப்பான இஸ்கானுக்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது

    வங்கதேசத்தில் இந்துக்கள் போராட்டத்தை தூண்டியதாக இந்து மத சாமியாரும் இஸ்கான் தலைவருமான சின்மோய் கிருஷ்ண தாஸ் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

     

    இந்நிலையில் வங்கதேசத்தில் 2 இந்து மத சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ண தாஸ்க்கு உணவு, மருத்துப்பொருட்கள் மற்றும் பணத்தை கொடுக்கச் சென்ற ருத்ரப்ரோட்டி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாத் சியாமா சுந்தர் தாஸ் ஆகிய இரு இஸ்கான் இளம் சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த கைது குறித்து எந்த விளக்கமும் அளிக்காத வங்கதேச போலீஸ் வழக்குகள் சந்தேகத்தின் பேரில் கொத்வாலி காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்ட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து சிறுபான்மையினரான இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவறை 200க்கும் மேற்பட்ட கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே சின்மோய் கிருஷ்ண தாஸ் கைதை எதிர்த்து போராட்டங்களும் நடந்து வருகிறது. சின்மோய் கிருஷ்ண தாஸ் உட்பட இஸ்கானுடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

     

    முன்னதாக மத அடிப்படைவாத அமைப்பான இஸ்கானுக்கு தடை விதிக்க கோரி வங்கதேச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உலகளாவிய அமைப்புக்கு தடை விதிப்பது சடத்தியமில்லை என நீதிமன்றம் மறுத்தது குறிப்பிடத்தக்கது. 

    • ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை.
    • ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தால் விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் ரமலான் மாதத்தை முன்னிட்டு விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தின் போது முகமது ஷமி ரமலான் நோன்பு கடைபிடிக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

    இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி கூறுகையில், ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை. ஆரோக்கியமான ஆணோ பெண்ணோ விரதத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்கள் பெரிய பாவிகளாகி விடுவார்கள்

    இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார். மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். அத்தகைய நிலையில், அவர் விரதத்தை கடைபிடிக்ககாமல் பாவம் செய்துவிட்டார். ஷரியத்தின் பார்வையில், அவர் ஒரு பாவி . அவர் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, முகமது ஷமி மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாக உறுப்பினர் மவுலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹ்லி, "ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது என்று அல்லா குர்ஆனில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே ஷமி விரதம் இருக்காமல் இருக்க இருக்க விருப்பம் உள்ளது: அவர் மீது விரல் நீட்ட யாருக்கும் உரிமை இல்லை" என்று தெரிவித்தார்.

    • பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவு முன்னாள் தேசிய செயலாளர் எர்ணாகுளம் தலைமை ஜூடிசியல் கோர்ட்டில் புகார்.
    • போலீசார் விசாரணை நடத்தி முஸ்லீம் மதகுரு மீது இந்திய தண்டனை சட்டம் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டேட்டியை சேர்ந்தவர் வசீம் அல் ஹிகாமி.

    முஸ்லீம் மதகுருவான இவர், கிறிஸ்தவர்கள் பற்றியும், கிறிஸ்தவம் பற்றியும் அவதூறான கருத்துக்களை பேசியதாகவும், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும் புகார் எழுந்தது.

    இதுபற்றி பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவு முன்னாள் தேசிய செயலாளரான அனுப் ஆண்டனி எர்ணாகுளம் தலைமை ஜூடிசியல் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி முஸ்லீம் மதகுரு வசீம் அல் ஹிகாமி மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ, 295 ஏ மற்றும் 505 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

    ×